பாதுகாவலரின் திருவுரு பவனி

இன்று 20.01.2018 சனிக் கிழமை மாலை வழமை போல மன்னார் தூய செபஸ் தியார் பேராலயப் பங்குமக்கள் தங்கள் பாதுகாவலரின் திருவுருவை மன்னார் நகரம் முழுவதும் பவனியாக எடுத்து வந்தனர். மேலும் அறிய பாதுகாவலரின் திருவுரு பவனி

தூய செபஸ்தியாரின் திருவிழாவை மன்னார் பேராலய மக்கள் கொண்டாடிய வேளையில்

இன்று 20.01.2018 சனிக் கிழமை தங்கள் பாதுகாவ லராம் தூய செபஸ்தி யாரின் திரு விழாவை மன்னார் பேராலய மக்கள் கொண்டாடிய வேளையில் தங்கள் பங்குத் திருவிழாவிற்கு அழைத்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மகத்தான வரவேற்பளித்தனர். மேலும் அறிய தூய செபஸ்தியாரின் திருவிழாவை மன்னார் பேராலய மக்கள் கொண்டாடிய வேளையில்

கட்டைக்காடு பங்கு மக்கள் இன்று

கட்டைக்காடு பங்கு மக்கள் இன்று 20.01.2018 சனிக்கிழமை தங்கள் பாதுகாவலராம் தூய செபஸ்தியாரின் திருவிழாவை ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடி மகிழ்ந்தனர். காலை 07.15 மணிக்குத் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத் தந்தை அருட்பணி. ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகளாரின் வழிகாட்டுதலோடு, ஆலய அருட்பணிப் பேரவை, வழிபாட்டுக்குழு, பாடகர் குழாம், பீடப்பணியாளர், பங்கு மக்கள் இணைந்து இத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர். மேலும் அறிய கட்டைக்காடு பங்கு மக்கள் இன்று

ஆண்டின் பெதுக்காலம், வாரம் 2 – சனி

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 1: 1-4,11-12,19,23-27

அந்நாள்களில் சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். நீ எங்கிருந்து வருகிறாய்?என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான். “என்ன நடந்தது? என்னிடம் சொல் என்று தாவீது கேட்க, அவன், வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்துவிட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான். தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத் தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலைவரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள். இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்! இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே! போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்! சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழிந்தன!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 80: 1-2. 4-6

பல்லவி: ஆண்டவரே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்;
எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப் பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா. : மாற்கு 3:20-21

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

ஜனவரி:20 புனித செபஸ்தியார்

ஜனவரி:20

புனித செபஸ்தியார்
மறைசாட்சியர்-(கி.பி.257-288)

இவர் பிரான்ஸ் நாட்டினர். இத்தாலி நாட்டில் கல்விப் பயிற்சி பெற்றார். இவரது நாட்களில் கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவர் பரிவிரக்கம் காட்டினார். ஊக்கம் அளித்தார். இதற்காகவே படையிற் சேர்ந்தார். தமது திறமையால் படையில் பதவி உயர்வு பெற்றார். இவர் காலத்தில் வேதத்திற்காக சிறைபட்டுக்கிடந்த மார்க்கஸ், மார்சலீனஸ் என்ற இருவரும் தம் பெற்றோரின் தூண்டுதலால் வேதத்தை மறுதலிக்கக் கூடும் என்ற சூழ்நிலையை புனிதர் உணர்ந்தார். உடனே இவர் இவ்விருவரையும் அனுகி விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குருதியை சிந்தும் அளவுக்கு விசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள். இத்தையக தொண்டுகளைப் பற்றி கேள்வியுற்ற மன்னன் இவரை ஒரு மரத்தில் கட்டி அம்புகளால் எய்து கொல்லக் கட்டளையிட்டான். இவ் வேதனைக்குப் பின் அவர் இறந்திருப்பாரென விட்டுச் சென்றனர். இறை அருளால் இவர் பிழைத்துக் கொண்டார். பிறகு அரசனை மீண்டும் அனுகினார். குpறிஸ்தவர்களை வதைக்கக் கூடாதென்றார். அப்போது மன்னன் இவரை தடியால் அடித்து கொல்லக் கட்டளையிட்டான். இவ்வாறு இவர் கிறிஸ்துவிற்கு தம் குருதியால் சான்று பகர்ந்து உயிர் நீத்தார்.

 

ஜனவரி:20 புனித பபியான்

ஜனவரி:20

புனித பபியான்
திருத்தந்தை-(கி.பி.250)

 

கி.பி 236ம் ஆண்டு திருத்தந்தை அந்தீருஸ் இறையடி சேர்ந்தபின் திருச்சபைளின் தலைமைப்பதவியை யாரிடம் அளிப்பது என்று உரோமை குருக்களும் பொதுநிலையினரும் ஒன்று கூடி ஆராய்ந்தனர். அப்போது பபியான் என்ற ஒரு தூயவரின் தலையில் ஒரு மாடப்புறா வந்திறங்கியது. இதுவே பபியான் என்பவரை தலைவராக்குவதற்கு தூய ஆவி அருங்குறியாக எடுத்துக்கொள்ளப்பட்டதென்று புகழ் வாய்ந்த திருச்சபை வரலாற்று வல்லுனர் ஒருவர் குறிப்பிடுகிறார். பெரிய வியாழனன்று புனிதத் தைலம் மந்திரிக்கப்படும் புனிதச் சடங்கினை தோற்றுவித்தவர் பபியானே ஆவார். 14 ஆண்டுகாலமாக திருச்சபையை வழிநடத்தினார். பின்னர் டிசியஸ் என்ற வேதகலாபனைக்காரன் ஆட்சிக்கு வந்ததால் திருச்சபை தாக்கப்பட்டது. வேதகலாபனையில் இவர் உயிர் துறந்தார். இவரது இறப்பினைப்பற்றி புனித சுப்பிரியான் கூறியது. “மறை ஆயர் ஒருவர் மறைசாட்சியின் மரண வேதனைகளை அடைவது அவருடைய சகோதரர்களுக்கு ஊக்கத்தை தருகிறது.” இவர் பொதுநிலையினரில் ஒருவராக இருந்த போது திருத்தந்தையாக தெரிந்து கொள்ளப்பட்டவர்.