ஆயர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின் வரலாற்றில் அண்மைக் காலங்களில் வரலாற்றுத் தடம்பதித்த மூன்று ஆயர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும், மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான, விழாக்கால ஒன்று கூடலும் இன்று (03.01.2018) புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. விழாக்கால செப வழிபாட்டைத் தொடர்ந்து

மேலும் அறிய ஆயர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சனவரி 3

முதல் வாசகம்

கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29-3: 6

அன்பிற்குரியவர்களே, இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை.

என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.

ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம். பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 98: 1. 3b-4. 5-6

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

இதோ! கடவுளின் செம்மறி.  

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

அக்காலத்தில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.

ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது.

ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஜனவரி:03 முத்தி.குரியாகோஸ் எலியாஸ் சவாரா

ஜனவரி:03
முத்தி.குரியாகோஸ் எலியாஸ் சவாரா குரு

கேரள நாட்டில் கைனக்கரையில் சிரோ மலபார் திருச்சபையைச்சார்ந்த கத்தோலிக்கக்குடும்பத்தில் 3வது பிள்ளையாக இவர் தோன்றினார். 24 வயதில் குருப்பட்டம் பெற்ற இவர் தந்தை தாமஸ் பலக்கல், தந்தை தாமஸ் பொருத்காரா இவர்களின் தோழமை பெற்று இன்று ஊஆஐ என்று அழைக்கப்படும் அமலமரியின் கார்மேல் சபையினர் என்ற துறவற சபை திருச்சபையின் அங்கீகாரம் பெற்ற போது இதில் உட்பட்டார்.

இந்த சபையின் முதல் மடம் மன்னானம் என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இவரது காலத்தில் கேரளாவில் மேலும் 5 இடங்களில் நிறுவப்பட்டது. இவர் பல குருமடங்களையும் நிறுவியுள்ளார். பள்ளி நிறுவனங்கள் முதியோர் இல்லங்கள் எழுப்பப்பட்டுள்ளன. திருநீராட்டுக்குத் தயாரிக்கப்படுவோரின் நிலையங்களும் குருக்கள் பொதுநிலையினர் ஆண்டுத் தியானங்கள் செய்வதற்கு வசதிகளும் செய்து கொடுத்துள்ளார். நல்ல மெய்யறிவு தொடர்பான நூல்களையும் மறைக் கல்விக்கான நூல்களையும் வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

தந்தை லியோபால்ட் பெக்காரோ என்ற கார்மேல் சபைத் துறவியின் உதவியுடன் ஊவுஊ என்ற கார்மேல் சபை சகோதரிகளுக்கும் ஊவுஊ என்றழைக்கப்படும் மற்றொரு தெரேசியன் கார்மேல் சபை சகோதரிகளுக்கும் மடங்களை நிறுவினார். இத்தகைய ஆன்மீகப்பணிகளின் நடுவே இவரது செப வாழ்வு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது. தாய்மரியின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். நோயாளிகளைச் சந்திப்பதும் அதுவும் கொடிய தொற்று நோயால் பீடிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதும் ஏழைகளுக்கு தகுந்த உதவி புரிவதும் இவர்களின் அன்றாட அலுவல்களில் முதலிடம் பெற்றவை.

1871ம் ஆண்டு இறந்த இவரது உடல் மன்னானம் என்ற இடத்தில் புனிதமாக வைக்கப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 8ம் நாள் திருத்தந்தை 2ம் ஜான் போல் இந்தியாவுக்கு வருகை தந்த போது இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.