Category Archives: ஞாயிறு திருவழிபாட்டுக் குறிப்புக்கள்

பாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு.

பாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு.

2026.04.12

முன்னுரை.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பாஸ்காக் காலம் இரண்டாம்;; ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும்; நாம்;  ஒன்று கூடியுள்ளோம். மாபெரும் செயல் புரிந்துள்ளவரும், என்றென்றும் பேரன்பு உடையவரும், நம் இறைவனும், நம்மீது நம்பிக்கையின் சுடராய் ஒளிர்ந்துள்ளவருமான இயேசுவின் இனிய நாமத்தில இன்ப வாழ்த்துக்கள் கூறி பாஸ்காக் கால இரண்டாம் ஞாயிறு மற்றும் இறை இரக்கப் பெருவிழாவைக் கொண்டாட வந்திருக்கும் உங்கள் அனைவரையும்; அன்போடு வரவேற்கின்றோம்.

இறை நம்பிக்கையின்  பலன்கள் என்ன? இறைவன் எப்போது, எங்கே பிரசன்னமாகின்றார்? போன்ற வினாக்களுக்கான தெளிவான பதில்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தருகின்றன. அதாவது நம்பிக்கையின் பலன், இறைவனுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காணும் பாக்கியமாகும். அது இறைவனுடைய இரக்கமாக நம்மிடம் வந்து சேருகின்றது.  அத்தோடு, ஒன்றாக வாழும் சமூகத்தில் இறைவனுடைய பிரசன்னம் என்றும் இருக்கும் என்பது இன்று நமக்குத் தரப்படும் அடுத்த செய்தியாகும்.

இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற  தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என் னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம்;. இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந் தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2:42-47

அக்காலத்தில்

திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.  மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்:  பேருவகையோடும் எளிய உள் ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்: எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்:  ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 118:2-4,13-15,22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவ ருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்: ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண் டவரே என் ஆற்றல: என் பாடல்: என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண் களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ் வோம். பல்லவி

இரண்டாம் வாசகம்.

இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.  இவ்வாறு குன்றா எதிர் நோக் குடன் நாம் வாழ்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.  இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள் ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்.  இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.

இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது.  அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கை யும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்.  இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை: எனினும் அவர்மீது அன்பு செலுத்து கிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை: எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா 20:29

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்கிறார் ஆண்டவர்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் ; என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,  ;தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ; என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம்,  ;ஆண்டவரைக் கண்டோம் ; என்றார்கள். தோமா அவர்களிடம்,  ;அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ; என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம்,  ;இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; என்றார்.

தோமா அவரைப் பார்த்து,  ;நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்றார். இயேசு அவரிடம்,  ;நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்; என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்

1.மாபெரும் செயல் புரியும் தந்தையே இறைவா!

எங்கள் திருத்தந்தை,ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவறத்தார் அனைவரும், என்றும் உண்மையான இறை நம்பிக்கையால்  நிறைந்து, தங்கள் உண்மையான நம்பிக்கை வாழ்க்கையால் திருஅவையை வழி நடாத்திச் செல்ல தூய ஆவியின் அருள்வரங்களால் அவர்களை நிரப்பியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.பேரன்பு உடையவரான தந்தையே இறைவா! 

எம்முடைய நம்பிக்கை வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள  அடையாளங்களையும், அற்புதங்களையும் தேடியலையாது, உம்முடைய வாக்குறுதிகள் நிறைவேறம் என்பதை உணர்ந்து காத்திருந்து செயற்படும் தெளிவான பார்வையைத் தர  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இரக்கத்தோடு அனைவரையும் அரவணைக்கும் தந்தையே இறைவா!

பாவமன்னிப்பையும், ஒப்புரவு அருட்சாதனத்தைப் பற்றியும் பலர் கொண்டிருக்கும் தவறான, தெளிவற்ற தெளிவற்ற பார்வை எம்மில் மாறிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்ட தெய்வமே இறைவா!

உலகில் இன்று பெருகிவரும் அடக்குமுறை, வன்முறை, அநீதி, சமத்துவமின்மை போன்ற தீமைகளை அழித்து  உலகில் நிலையான அமைதி நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Easter 2nd Sunday 2026

 

 

பாஸ்காத் திருவிழிப்பு.

 

ஆண்டவரின் உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு.

பாஸ்காத் திருவிழிப்பு. 2026.04.04

முன்னுரை.

ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல். அவரே என் விடுதலை, என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே!  நமக்கு இரக்கம் காட்டுவரும் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினரும், தமது ஆவியை நீர் அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றவருமான  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, கிறிஸ்து சாவினின்று உயிர்த்தெழுந்த  இப் பாஸ்காத் திருவிழிப்புத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

நம் ஆண்டவர் இயேசு மகிமை மிக்கவராய்  உயிர்த்தெழுந்த மகிழ்வை நாம் இந்த இரவுப் பொழு திலே நினவு கூர்ந்து கொண்டாடுகின்றோம். இயேசு சாவைக் கடந்து உயிர்த்தெழுந்ததை   இஸ்ரா யேல் மக்கள் பார்வோன் மன்னனின் பிடியிலிருந்து விடுதலை பெற்று செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய நிகழ்வோடு இணைத்துக் கொண்டாடுகின்றோம். இறைவனே மாபெரும் விடுதலையாளராய் இருக்கின்றார். அவரை எந்தச் சக்தியும் கட்டுப்படுத்த முடியாது என்பதனை இவை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவதும், அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுவதும், கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்க ளையும் விட்டுவிட்டு; ஆண்டவரிடம் திரும்பி வருவதும். இரக்கம் காட்டும்  இறைவனிடம் திரும்பி வருவதும், நாமும் பாவம் என்னும் சாவிலிருந்து கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களே. எனவே நாமும்;, நம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழவும்,  உலகில் நடைபெறும் யுத்தம் ஒழிந்து அனைத்து மக்களும் அச்சமின்றி, மகிழ்ச்சியோடு வாழவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும் வரம் கேட்டு நம்மை அர்ப்பணித்தவர்களாய் தொடரும் வழிபாட்டில் பங்கேற்றுச் செபிப்போம்.

திருச்சபையின் திருவிழிப்புக் கொண்டாட்டங்களில் முதன்மையானதும், முக்கியமானதும் இன்றைய இக் கொண்டாட்டமே. இது பின்வரும் முக்கிய பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது:

ஒளி வழிபாடு : கிறிஸ்து இவ்வுலகின் ஒளி என்பதையும்

இறைவாக்கு வழிபாடு: வரலாற்றின் வழியாக இறைவன் மனிதரை விடுதலையாக்கும் மீட்பின் திட்டம் எவ்வாறு நிறைவேறியது என்பதையும்

திருமுழுக்கு வழிபாடு: நாம் தீமையையும், பாவத்தையும், ஊனியல்பினுடைய நாட்டங்களையும் விட்டொழித்து இறைவனுக்குரிய மக்களாக வாழ நாம் கொடுக்கும் உறுதி மொழியையும், நமது திருமுழக்கு வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பையும்,

நற்கருணை வழிபாடு: இயேசு உயிர்த்தெழுந்து என்றும் நம்மோடு உடனிருக்கின்றார், நற்கருணை வழியாக அவருடைய பிரசன்னம் நமக்கு உயிரூட்டம் தருகின்றது என்பதையும்  குறித்துக் காட்டுகின்றன.

முதல் வாசகம்.

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.

தொடக்க நூலிலிருந்து வாசகம். 1: 1- 2: 2

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது கடவுள், ‘ஒளி தோன்றுக!” என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல்| என்றும் இருளுக்கு இரவு| என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள் ‘நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு விண்ணுலகம்| என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், ‘விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம்| என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல்| என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், ‘புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின் படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், ‘பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்: பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத் தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந் தது.

அப்பொழுது கடவுள், ‘திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளை யும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி ‘பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என் றுரைத்தார்.  மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், ‘கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத் தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், ‘மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத் தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவு ளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலு க்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், ‘மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலை யும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறை வெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித் திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 104: 1-2,5-6,10, 12-14,24,35

பல்லவி: ஆண்டவரே உமது ஆவியை நீர் அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள் ளவர். நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர் அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. பல்லவி:

பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர். அவை மலைகளிடையே பாய்ந்தோடும். நீரூற்று களின் அருகில் வானத்துப் பறவைகள் கூடு கட்டிக் கொள்கின்றன.அவை மரக்கிளைகளினின்று இன் னிசை இசைக்கின்றன. பல்லவி:

உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர். உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர் மானிடருக்கெனப் பயிர் வகைகளை வளரச் செய்கின்றர். இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய் கின்றீர். பல்லவி:

ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்து ள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா! பல்லவி:

இரண்டாம் வாசகம்.

இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிருந்து வாசகம். 14: 15- 15:1 

அந்நாள்களில்

ஆண்டவர் மோசேயை நோக்கி, ‘ஏன் என்னை நோக்கி அழவேண்டும்?  முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல் மேல் நீட்டி அத னைப் பிரித்து விடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, நானே ஆண்டவர்| என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.

இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம் பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம் பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.

மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், ‘இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர் தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ‘நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார்.

கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர் மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

பதிலுரைப்பாடல். விப. 15: 1-6,17-18,

பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்.

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார். குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல். அவரே என் விடுதலை, என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன். பல்லவி

போரில் வல்லவர் ஆண்டவர்,  ஆண்டவர்| என்பது அவர் பெயராம். பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார். அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். பல்லவி

ஆழங்களில் அவர்கள் கல்லைப் போல் மூழ்கிப் போயினர். ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது.  ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.பல்லவி

ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.பல்லவி

மூன்றாம் வாசகம்.

என்னிடம் வாருங்கள்: நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 55: 1-11

ஆண்டவர் கூறுவது:

தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.  கையில் பணமில்லாத வர்களே, நீங்களும் வாருங்கள்.  தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்.  நல்லுணவை உண்ணுங்கள். கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.

எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்.  கேளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன். தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இன மக்களை அழைப்பாய். உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக. அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்.  ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். எசா. 12: 2-6,

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அக மகிழ்வோடு தண்ணீர்  முகந்து கொள்வீர்கள். பல்லவி:

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் திருப்பெயரைப் போற்றுங்கள். மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள். அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி:

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள். ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார் அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள். இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி:

நான்காம் வாசகம்.

நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து வாசகம். 36: 16-28

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்கு சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று| என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர்  கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அன்று. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர்  என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள். உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதி நெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 51: 10-13,16-17,

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடா தேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன். பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது. நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே. கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்குரிய பதிலுரைப்பாடலும், செபமும் முடிந்தபின், பீடத்தில் விளக்குகள், திரிகள் பற்றவைக்கப்படும். அதன்பின் உன்னதங்களிலே என்னும்; வாழ்த்தொலி வழமைபோலப் பாடப்படும். அப்பொழுது ஆலயத்தின் மணிகள் ஒலிக்கும். அதன் பின்  புதிய ஏற்பாட்டின் திருமுக வாசகத்திற்கான சபை மன்றாட்டும், திருமுக வாசகமும் இடம்பெறும்.

புதிய ஏற்பாட்டின் திருமுக  வாசகம்.

இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 6: 3-11

சகோதரர் சகோதரிகளே,

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.

அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்துபோகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.  இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார் பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்.  அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்.  கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 118: 1-2,16-17, 22-23

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு| என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி:

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது. ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன். உயிர் வாழ்வேன். ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி:

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி:

நற்செய்தி வாசகம்

இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 1-10

ஓய்வுநாளுக்குப் பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘நீங்கள் அஞ்சாதீர்கள்.  சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை. அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்| எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.

அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்;.

  1. மீட்பும், ஆற்றலுமான தந்தையே இறைவா!

எமது திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், நல்ல மேய்ப்பர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வாழத் தடையாக இருக்கும்: பயம், விரக்தி, நம்பிக்கையின்மை, உலக ஆசைகள் என்னும் அழுக்குகளைக் கழுவி அவர்களை நம்பிக்கையின் வாழ்வுக்குள் அழைத்து, அன்புறவு வாழ்வில் அவர்கள் ஆர்வமுடையோராய் வாழ்வதற்கும், பாவம் என்னும் சாவிலிருந்து கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்களாக மாறவும் வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும்  எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ  வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவரான தந்தையே இறைவா!

உலகில் தீவிரமடைந்துள்ள கொடிய யுத்தம் நிறுத்தப்படவும், மனித வேதனைகளையும், அவலங்களையும் புரஜந்து கொள்ளுகின்ற,  மனித மாண்பை மதிக்கின்ற மனப் பக்குவத்தையும், நல்லெண்ணத்தையும்  அனைத்துத் தலைவர்களிடமும் உருவாக்கி, அவர்கள் அமைதியின் கருவிகளாகச் செயற்பட அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உம் படைப்புகளால் உலகை நிறைந்துள்ள தந்தையே இறைவா!

இவ்வுலகில் பெருகி வரும் வன்முறைகளும், பயங்கரவாதமும் ஒழிந்து,அனைத்து மக்களும் அச்சமின்றி, அமைதியாக வாழ இவ்வுலகை அமைதியின் இல்லமாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர், யுத்தக் களத்திலும், பாதுகாப்புப் பணியிலும் இருப்போர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Holy Saturday 2026Vigil

 

 

 

ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளி.

ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளி.

2026.04.03

முன்னுரை.

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரான நம் தந்தையாம் இறைவனை ஆரதிப்போம்;. இன்று புனித வெள்ளி. இறையன்பின் ஊற்று மானுடத்தை வந்தடைந்த நாள். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதை  நிரூபித்துக் காட்டிய நாள். அநியாயத் தண்டனை மரணம்  சரிவு அல்ல அது சாதனைக் களம் என்பதை உணர்த்திய நாள். எனக்காக அழ வேண்டாம்  உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள் என்னும் தன்ணுர்வுத் தேடலை ஆரம்பிக்கச் சொன்ன நாள். இறையன்பிலிருந்து என்னைப் பிரிக்கக் கூடியது எது? என்னும் இலட்சிய வேட்கையின் வீரத்தை வெளிப்படுத்திய நாள். அன்னை மரியாவை சீடத்துவத்தின், பரிசாக, பாதுகாவலியாகக் கொடுத்த நாள். உலகத்தின் சிந்தனைக் கருவூலங்களைச் சிதறடித்து  அவமானத்தின் சின்னமாம் சிலுவையை, மீட்பின் வழித்தடமாக மாற்றிய சரித்திர நாள்.  பாவக் கறையைக் கழுவித்துடைத்த தூய நாள். இறையரசுக்காய் அடையும் அவமானங்கள் ஆற்றல் மிக்க சக்திகளே என்பதை அடையாளப்படுத்திய நாள். பொறுமைக்கும் எல்லையுண்டு என்னும் மனித சிந்தனையை மாற்றிப்போட்டு, பொறுமையே பொறுமையின் எல்லை என்பதை புரியவைத்த நாள்.விரக்தியை விரட்டு விசுவாசப் புத்தகத்தைப் புரட்டிப்படி என்னும் யதார்த்தத்தை விதைத்த நாள். அநீதியின் வேர்கள் அறித்தெறியப்படும் என்னும் எச்சரிக்கையைப் பறைசாற்றிய நாள். உண்மைகள் உலர்ந்து போவதுமில்லை, ஊனமாகிப் போய்விடுவதுமில்லை என்னும் உண்மை கருவாகி, உருவான நாள். வெறுமையே அருள் நிறைவுக்கான திறவுகோல் என்பதை அர்த்தப்படுத்திய நாள். மன்னிப்பே மானுடத்தின் சுவாசம் என்பதை சுட்டிப்பாகச் சொன்ன நாள். எல்லாவற்றையும் கடந்து:  நேசத்தின் வாசகம் நம்மைத் தழுவிய நாள்.

எனவே, சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்காமல், நம் ஆண்டவர்  யேசுவின் பாடுகளை நினைவூட்டும் இந்தத் தூய வெள்ளிக்கிழமையின் ஆன்மிகக் கருவூலங்களை நன்கு உள்வாங்கியவர்களாக, தூய்மையான அன்பை வாழ்ந்து – பகிர்ந்து – பரிசளிக்கும் சீடர்களாக மாறுவோம்.

இன்றைய வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது.

முதலாவது: இறைவாக்கு வழிபாடு- இறையரசுக்காகத் துன்பங்களையும், பாடுகளையும் அனுபவிக்கும் உன்னத பணியாளன் இயேசுவின் மனப்பக்குவத்தை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு விளக்கிக் கூறுகின்றன.

இரண்டாவது: திருச்சிலுவை ஆராதனை –  சிலுவை சிலருக்கு அவமானச் சின்னம். சிலருக்கு மடைமை. கிறிஸ்தவர்களாகிய நமக்கோ வெற்றியின் சின்னம். இயேசுவைச் சுமந்ததனாலும் இயேசு அதைச் சுமந்ததனாலும் சிலுவை புதிய அத்தியாயத்திற்குள் நுழைகின்றது.

மூன்றாவது: திருவிருந்து பகிர்ந்தளிக்கும் நிகழ்வு.

முதல் வாசகம்.

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிலிருந்து வாசகம்.  52:13 -53: 12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார் அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறு வார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர் அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந் ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது. மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்  அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர் ஏனெ னில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர் தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட் டது?

இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார். நாம் பார் ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இக ழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார், காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார், அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார், நம் துன்பங் களைச் சுமந்து கொண்டார், நாமோ அவர் கடவுளால் வதைக் கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறு மைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந் தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட் டார் சிறுமைப்படுத்தப்பட்டார். ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை. அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர்  உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக் களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை. வஞ் சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள். செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார். அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார் எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்  ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார். நேரியவரா கிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார் அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்.அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார். கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார். ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார். கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 31: 1,5,11-12,14-16,24

பல்லவி: தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.  உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.  உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்.  வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர். பல்லவி:

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன். என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்.  என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன். உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். பல்லவி:

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நீரே என் கடவுள் என்று சொன்னேன்.என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது.  என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி:

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும். உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.  தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4: 14- 16.5: 7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலை மைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்.  எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக் கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச் சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி,  தமக்குக் கீழ்ப்படிவோர் அனை வரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். பிலிப்பியர். 2:8-9

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி.

யோவான் எமுதியபடி  நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகள்: 18:1-19:42

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Good Friday 2026

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி.( புனித வியாழன்.)

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி.( புனித வியாழன்.)

2026.04.02

முன்னுரை.

‘இது உங்களுக்கான என் உடல். இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்”

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! நம்மீது அருள் கூர்ந்து, நம்மை வாழ்விக்கும்  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று தூய வியாழன். நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து: நற்கருணையையும், பணிக்குருத்துவத்தையும்  ஏற்படுத்தி நாம் அனைவரும் பிரதி பலன் எதிர்பாராது தாழ்ச்சியோடு பணி செய்யவேண்டும் என்பதை செயலில் காட்டிய நிகழ்வுகளை இன்று நாம் நிகழ்காலத்தின் நமக்கான அழைப்பாக நாம் நினைவு கூருகின்றோம்.

புனித வியாழன் அர்ப்பணத்தின் ஆழத்திற்குச் செல்ல நம்மை அழைக்கும் நாள். புனித வியாழன் தியாக வாழ்வை அர்த்தமுள்ளதாக்க புது வழிகாட்டும் புனிதத்தின் நாள். எனவே நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் என்னும் இயேசுவின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு: நற்கருணை, பணிக்குருத்துவம் இவற்றின் வழியாக இயேசு நமக்கு விட்டுச் செல்லும்: தாழ்மை, பொறுமை, அன்பு, சேவை, பிறர் நலம் போன்ற நற்பண்புகளை நாமும் செயலில் வாழ ஆற்றல் கேட்டும், நமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் ஆகியோருக்காகவும் மன்றாடி இத் திருப்பலியில் இணைந்து கொள்ளுவோம்.

இன்றைய வழிபாடு
   இறைவார்த்தை வழிபாடு
   பாதம் கழுவும் நிகழ்வு
   நற்கருணை வழிபாடு
   நற்கருணைப் பவனி ஆகிய பகுதிகளை         உள்ளடக்கியது.

இங்கு சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்வு: பணிவாழ்வின் அர்த்தம், பிறரன்பு, சமத்துவம் ஆகியவற்றையும்,

நற்கருணையை ஏற்படுத்தியது: பகிர்வு, அர்ப்பணம், தியாகம் ஆகியவற்றையும்,

குருத்துவத்தை நிறுவியது: இறைபணியைத் தொடர்ந்து செய்ய சீடத்துவத்திற்கான அழைப்பு, பொறுப்பு, அதிகாரம் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.

முதல் வாசகம்.

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.

விடுதலைப் பயண  நூலிலிருந்து வாசகம்.  12:12:1-8, 11-14

அந்நாள்களில்

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்.

அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள் வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண் டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ஆண்டவரின் பாஸ்கா. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின் மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையா ளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 116: 12-13.15-18

பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல், அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி:

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன். நான் உம் பணியாள். உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ் த்துவிட்டீர். பல்லவி:

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கின்றீர் கள். 

திருத்தூதர் பவுல் கொரிந்திpயருக்கு எமுதிய முதல்;; திருமுகத்திலிருந்து வாசகம். 11: 23- 26.

சகோதரர் சகோதரிகளே!

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளு க்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, ‘இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யு ங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ‘இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். யோவா. 13:34

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்| என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங் கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்.

இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

யோவான் எமுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 13:1-15

அக்காலத்தில்.

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத் தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத் தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ‘ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகி றீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ‘நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரி யாது. பின்னரே புரிந்து கொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், ‘நீர் என் காலடிகளைக் கழுவ விடவே மாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, ‘நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, ‘அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரி டம், ‘குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை| என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்து கொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ‘நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர்| என்றும் ஆண்டவர்| என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ் வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய கால டிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.கட்டுக்களை அவிழ்த்துவிடுகின்ற தந்தையே இறைவா!

இயேசுக்கிறிஸ்துவின் பணிக்குருத்துவத்தில் பங்கேற்றுப் பணி புரிய அழைக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் தாழ்மையோடும், தூய்மையோடும், அர்ப்பணத்தோடும் பணிபுரியத் தடையாக இருப்பவைகளை உடைத்து, அவர்கள் கிறிஸ்து விட்டுச் சென்ற பணியை தூய்மையோடும், ஆழ்ந்த அர்ப்பணத்தோடும் ஆற்றுவதற்கு வேண்டிய வல்லமையை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.வார்த்தையும், வாழ்வும், வழியுமான தந்தையே இறைவா!

இறைமக்கள் சமுதாயமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தாழ்மை, தூய்மை, அர்ப்பணம், உறவு, பகிர்வு ஆகியவற்றை எமது வாழ்வில் கடைப்பிடித்துப் பணியாற்றுவதன் வழியாக அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியின் கருவிகளாகவும் செயற்பட எமக்கு வேண்டிய நல்லுள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஆற்றலின் ஊற்றான தந்தையே இறைவா!

நற்கருணையை உட்கொள்ளுகின்ற நாங்கள் ஒவ்வொருவரும், இயேசுவின் இதய ஆவலை நிறைவேற்றுபவர்களாகவும், மனித மாண்பை மதித்து உறவின் சமூகமாகவும், பகிர்ந்து வாழும் சமூகமாகவும், இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கும் சமூகமாகவும் வாழ்ந்திடுவதற்கு வேண்டிய அருள் வரங்களைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.விடுதலையின் அண்டவரே தந்தையே இறைவா!

போரினால் பாதிக்கப்பட்டோர், உறவுகளையும் உடைமைகளையும் இழந்தோர், காயமடைந்தோர், பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளோர், சிறைகளிலும், வதை முகாம்களிலிருந்தும் வேதனைப்படுவோர் அனைவரையும் இந்த நாளில் சந்திந்தருளும். தூய பவுலடியாரைச் சிறையில் சந்தித்து, அவருக்கு விடுதலையும், தேறுதலும், நம்பிக்கையும், வல்லமையும் கொடுத்ததுபோல்:  இவர்களுக்கும் விடுதலையும், தேறுதலும், நம்பிக்கையும், வல்லமையும் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Maunndy Thursday 2026

ஆண்டவருடைய  திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

ஆண்டவருடைய  திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு 29.03.2026

குருத்தோலைப் பவனி.

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள்: அனைவரும் அவரை மாட்சி மைப்படுத்துங்கள்: அனைவரும் அவரைப் பணியுங்கள்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே! நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நமக்குத் தருகின்றவரும், கற்றோனின்; நாவை நமக்கு அளிக்கின்றவரும்: காலைதோறும்; நம்மைத் தட்டி எழுப்பி அவரது வார்த்தைக்குச் செவிகொடுக்கச் செய்கின்றவருமான நம் தந்தையாம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள்: இன்று குருத்தோலை ஞாயிறு. நம் ஆண்டவர் இயேசு பாடுபடுவதற்கு முன் எருசலேம் நகருக்குள் பவனியாக மக்களால் அழைத்து வரப்பட்ட நாளின் நினைவு. அவருடைய பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மறைபொருளை நமக்கு நினைவூட்டும் தூய வாரத்தின் தொடக்க நாள்.

இறைத் தந்தையின் விருப்பத்தை செயலாக்குவதில் இயேசு எவ்வாறு தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார், அர்ப்பணத்தார். தன்னை தாழ்த்திக் கொண்டார் என்பவைகளை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன் என்னும் இயேசுவின் மனவுறுதி:  இறைவன் வாக்களித்த அனைத்தையும் நமக்கெனச் செய்து முடிப்பார் என்னும் வாக்குறுதியை  நமக்கும் நினைவூட்டுவதாய் இருக்கின்றது. எனவே, நாமும் நம்முடைய ஆன்மிக வாழ்வுப் பயணத்திலே இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி வாழ இத்திருப் பலியில் அருள் கேட்டுச் செபிப்போம். அத்தோடு இயேசுவின் தலைமைத்துவத்தில் இவ்வுலகம் அமைதிபெறவும், மனித மனங்களில் குடிகொண்டிருக்கும் வன்முறைப்போக்குகள் ஒழியவும், துன்புறும் மக்களின் வேதனைகள் அகன்று அனைவரும் நிம்மதியோடு வாழவும் இறையருள் வேண்டிச் செபிப்போம்.

நற்செய்தி வாசகம். (திருப்பலிக்கு முன்)

முதல் ஆண்டு.

ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 21:1-11.

இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, ‘நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், இவை ஆண்டவருக்குத் தேவை| எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார். ‘மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் எளிமையுள்ளவர். கழுதையின்மேல் ஏறி வருகிறார். கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது  நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.

சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு. இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், ‘தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, ‘இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், ‘இவர் இறைவாக்கினர் இயேசு. கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

திருப்பலி.

முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50:4-7

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்:

நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க் கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 22:7-8,16-19,22-23

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும”; என்கின்றனர். பல்லவி:

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: பல்லவி:

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி:

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள்: யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சி மைப்படுத்துங்கள்: இஸ்ரயேல் மரபினரே,  அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல் அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண் டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.  மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளி னார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடு வர்: தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர்  என எல்லா நாவுமே அறிக்கையி டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம் பிலி. 2: 8-9 

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக் கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்

முதலாம்  ஆண்டு.

மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் பாடுகள்;. 26: 14- 27:66

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.பணியாளருக்குத் துணை நிற்கும் எம் தலைவராகிய தந்தையே இறைவா!

உமது பணியாளர்களாகிய திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்: கிறிஸ்து கொண்டிருந்த மனநிலையை நன்கு விளங்கிக் கொண்டு, எச் சந்தர்ப்பத்திலும் நிலை குலையாமல், ஆண்டவராகிய எம் தலைவர் துணை நிற்கின்றார்: நாம்; அவமானம் அடையோம் என்னும் மனவுறுதியோடு பணியாற்ற வேண்டிய வல்லமையை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம் வலிமையும், எமக்குத் துணை செய்கின்றவருமான தந்தையே இறைவா!

எங்கள் ஆன்மிக வாழ்வுப் பயணத்தில் நாங்கள் ஒவ்வொருவரும், தீய வாழ்வின் பிடியிலிருந்து எம்மை வெறுமையாக்கிக் கொண்டு, தாழ்ச்சி என்னும் உயரிய பண்பை எமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.சொந்த மகனென்றும் பாராமல் இயேசுவை எமக்காக ஒப்புவித்த தந்தையே இறைவா!

பல்வேறு துறைகளிலும் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுள்ள அனைவரும், தாங்கள் மக்களுக்குத் தன்னலமற்ற முறையில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்னும் அர்ப்பண உணர்வைப் பெற்று செயற்படுவதற்குவும், அமைதியே மனித குலத்திற்கான வெற்றி என்பதை உணர்ந்து செயற்படவும் வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளித்து அவர்களை வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உயிருள்ள வார்த்தைகளைத் தருகின்ற தந்தையே இறைவா!

அருள் வாழ்வைத் தேடிய எமது முயற்சிகளில், இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி,  உமது உயிருள்ள வார்த்தையை விருப்பத்தோடு வாசித்து, தியானித்து, செபித்து அதன்படி வாழுவதற்கேற்ற மனப்பக்குவத்தை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Psalm Sunday2026

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

2026.03.22.

முன்னுரை.

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் மீது தம் ஆவியைப் பொழிந்து, நமக்கு நிறை வளிக்கும்   நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப் பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் தவ க்காலம் ஐந்தாம் ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் வேளையில்  நாம் ஆண்டவரை  நோக்கி மன்றாடும் போது அவர் நம்மைத் தேற்றுகின்றார், நமக்கு நிறைவும் மகிழ்வும் அளிக்கின்றார் என்னும் நம் பிக்கையின் இறைச்  செய்தியொன்று இன்று நமக்கு வழங்கப்படுகின்றது. என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். என்னும் இறைவார்த்தைகள் நமக்குப் புதிய சக்தியையும், நிறைவையும் தருகின்றன.

இவ்வேளையில், மிகுதியான பேரன்பும், இரக்கமும், மீட்பும் ஆண்டவரிடமே உள்ளது என்னும் உறுதியான நம்பிக்கையோடு ஆண்டவருக்காகவும், அவரது  சொற்களுக்காகவும் அவலுடன்  காத்திருக்கும்  விசுவாச உறுதி பெற இத் திருப்பலியில் வல்லமை  கேட்டுச் செபிப்போம். ஆத்தோடு உல நாடுகளில் யுத்தம் ஓய்ந்து அமைதி பிறக்க, இறைவனுடைய அன்பின், அமைதியின், சகோதரத்துவத்தின், சமத்துவத்தின் அரசு மலரவும் இறையருள் வேண்டுவோம்.

முதல் வாசகம்.

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

இறைவாக்கினர் எசேக்கியேல்  நூலிருந்து வாசகம்.37:12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ஆண்டவராகிய நான் உரைத்தேன்: நானே இதைச் செய்தேன் என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 130: 1- 8.

பல்லவி :  ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.பல்லவி

பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவி னைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!பல்லவி

இரண்டாம் வாசகம்.

இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருக்கின்றார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 8:8-11

சகோதரர் சகோதரிகளே,

ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.

ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள். அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.

மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிரு ந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். யோவா.11:25-26

 ‘உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாக மாட்டார். ஏன்கிறார் ஆண்டவர்.

 நற்செய்தி வாசகம்.

‘உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  11:1-45

அக்காலத்தில்

பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில் தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். இந்த மரியா தான் ஆண்டவர் மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ‘ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, ‘இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார்.

மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், ‘மீண்டும் யூதே யாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், ‘ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்குப் போகி றீரா?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ‘பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை: ஏனெனில் பகல் ஒளியில் பார் க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்: ஏனெனில் அப்போது ஒளி இல்லை” என்றார்.

இவ்வாறு கூறியபின், ‘நம் நண்பன் இலாசர் தூங்குகிறான். நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார். அவருடைய சீடர் அவரிடம், ‘ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், ‘இலாசர் இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு,   ‘நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன். ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ‘நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.

இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார். மரியா வீட்டில் இருந்துவிட்டார்.  மார்த்தா இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், ‘உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம், ‘இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார். இயேசு அவரிடம், ‘உயிர் த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.  உயி ரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?  என்று கேட்டார். மார்த்தா அவரிடம், ‘ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார். அவ ரிடம், ‘போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.

இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,  ‘அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், ‘பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், ‘பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.

இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.  ‘கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இற ந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ‘ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று: நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், ‘நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ‘தந்தையே, நீர் என் வேண்டுத லுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டு தலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், ‘இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ‘கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த  தந்தையே இறைவா!  

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும்,  ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டவர்களாய், எல்லாவிதத் தீமைகளிலிருந்தும் விடுபட்டுத் தூய வாழ்வு வாழந்திட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

  1. மிகுதியான பேரன்பும், இரக்கமும் உடையவரான தந்தையே இறைவா!

தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், அரச குருத்துவத் திருக் கூட்டமாகவும் இருக்கும் நாம்: மிகுதியான பேரன்பும், இரக்கமும், மீட்பும் உம்மிடமே  உள்ளது என்னும் உறுதியான நம்பிக் கையோடு உமக்காகவும், உமது  சொற்களுக்காகவும் அவலுடன்  காத்திருக்கவும்,  முழு மையான அருள்வாழ்வில் உறுதிபெறவும் அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மீட்பும், விடுதலையும் தரும் தந்தையே இறைவா!

போதைப்பொருள், வன்முறை, ஒழுக்கமற்ற வாழ்வு ஆகியவற்றிற்கு அடிமையாகி அவற்றிலிருந்து விடுதலை பெற முடியாமல் தத்தளித்தக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இரக்கம் காட்டி அவர்களை இத் தீய வாழ்விலிருந்து மீட்டிட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா! பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மன நலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அமைதியின் தெய்வமே இறைவா!

பொறுப்பற்ற சிந்தனைகளாலும், போட்டிகளாலும், பொறாமையினாலும், தற்பெருமையாலும், பழிவாங்கும் மனநிலையாலும், அதிகார ஆசையினாலும் உருவாகப்பட்டிருக்கும் போரை உமது வல்லமையால் நிறுத்தி, இந்தத் தீமைகள் அனைத்தும், அனைத்துப் படைக்கலங்களும் மௌனித்துப் போகச் செய்து, உலகில் அமைதி நிலைபெறச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Fifth Senday 2026 Lent

தவக்காலம் நான்காம் ஞாயிறு.

தவக்காலம் நான்காம் ஞாயிறு.

2026.03.15.

முன்னுரை.

ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! பசும்புல் வெளிமீது நம்மை இளைப்பாறச் செய்து, அமைதியான நீர் நிலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்று, நமக்குப் புத்துயிர் அளிக்கும் நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட் டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் தவக் காலம் நான்காம் ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்ட வரோ அகத்தைப் பார்க்கின்றார், என்னும் இறைவார்த்தைகள் இறைவனின் இரக்கத்தையும், ஞானத்தையும் நமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. அத்தோடு இறைவனின் இரக்கம் அணைகடந்தது, கால நேரங்களுக்கு அப்பாற்பட்டது. அது நிபந்தனையற்றது என்னும் உண்மைகளும் நமக்குத் தெளிவுபடுத்தப்படுகின்றன.

இறைவன் தரும் இந்த அருள் நலன்களைப் பெற்றுக்கொள்ள, ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பார்த்து, தீமைகள் மட்டில் வழிப்போடு இருந்து, வாழும் இறைவன் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றார் என்னும் உண்மையை உணர்ந்து, நிறைவான விசுவாச வாழ்வு வாழவும், உலகில் போர் ஓய்ந்து அமைதி நிலைபெறவும், எல்லா மக்களும் பாதுகாப்போடு வாழவும் இத் திருப்பலியில் வல்லமை  கேட்டுச் செபிப்போம்

முதல் வாசகம்.

இஸ்ராயேல் மீது அரசனாகத் தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.

சாமுவேல் முதல்  நூலிருந்து வாசகம்.16:1, 6-7,10-13

அந்நாள்களில்

ஆண்டவர் சாமுவேலை நோக்கி, உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன். ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.

ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே. ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்து விட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.

இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச் செய்தார். ‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘இன்னொரு சிறுவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘ஆளனுப்பி அவனை அழைத்துவா. ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.

உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னி லையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 23: 1- 6.

பல்லவி :  ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை.

ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன். உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசகம்.

இறந்தவனே, உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன் மீது ஒளிர்ந்தெழுவார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:8-14

சகோதரர் சகோதரிகளே,

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக் காட்டுங்கள்.  அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும் போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது.

ஆதலால், தூங்குகிறவனே, விழித்தெழு. இறந்தவனே, உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன் மீது ஒளிர்ந்தெழுவார், என்று கூறப்பட்டுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். யோவா.8:12

‘உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்: வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்.

அவர் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  9:1-41

அக்காலத்தில்

இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.’ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, ‘இவர் செய்த பாவமும் அல்ல. இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல. கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது. அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும் வரை நானே உலகின் ஒளி” என்றார்.

இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார் வையற்றவருடைய கண்களில் பூசி,  ‘நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவர். என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், ‘இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், ‘அவரே” என்றனர். வேறு சிலர் ‘அவரல்ல. அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், ‘நான்தான் அவன்” என்றார். அவர்கள், ‘உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ‘இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும். என்றார். நானும் போய்க் கழுவினேன். பார்வை கிடைத்தது” என்றார். ‘அவர் எங்கே?” என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், ‘எனக்குத் தெரியாது” என்றார்.

முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வு நாள். எனவே, ‘எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர் ‘இயேசு என் கண்களில் சேறு பூசினார். பின் நான் கண்களைக் கழுவினேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர், ‘ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், ‘பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், ‘உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். ‘அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர்.

அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.  ‘பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன் தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?” என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, ‘இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்” என்றனர்.

யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், ‘அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், ‘உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்” என்றனர். பார்வை பெற்றவர் மறுமொழியாக, ‘அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். நான் பார்வையற்றவனாய் இருந்தேன். இப்போது பார்வை பெற்றுள்ளேன்” என்றார். அவர்கள் அவரிடம், ‘அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, ‘ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, ‘நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்: இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது” என்றார்கள்.  அதற்கு அவர் ‘இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார். பின் அவரைக் கண்ட போது, ‘மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, ‘ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், ‘நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், ‘ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.

அப்போது இயேசு, ‘தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, ‘நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர்.  இயேசு அவர்களிடம், ‘நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் எங்களுக்குக் கண் தெரிகிறது. என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள். என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.என்றும்  எமக்குப் புத்துயிர் அளிக்கும் தந்தையே இறைவா!  

எம் திருத்தந்தை, ஆயர் கள், குருக்கள், துறவிகள் அனைவரும்,  இக்காலத்தில் ஏற்படும் சவால்களையும், துன்பங்களையும், மாற்றங்களையும் கண்டு தமது ஆன்மிகப் பணிவாழ்வில் மனந் தளர்ந்து போகாது, உறுதியடன் செயலாற்றுவதற்கு வேண்டிய புத்தூக்கத்தை  அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. அகத்தைப் பார்க்கும் தந்தையே இறைவா!

உமது சீடரும், இறைமக்கள் கூட்டமாகவும் இருக்கும் நாங்கள், ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பார்த்து, தீமைகள் மட்டில் வழிப்போடு இருந்து, வாழும் இறைவனாகிய நீர் இன்றும் எம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றீர் என்னும் உண்மையை உணர்ந்து, நிறைவான விசுவாச வாழ்வு வாழ உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. நல்ல ஆயனாகிய தந்தையே இறைவா!

பல்வேறு நிலைகளிலும் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும், அன்பு, பரிவு, பாசம், பிறர் நலம்,  பொறுப்புணர்வு  ஆகிய பண்புகளோடு மக்களை வழி நடாத்தும் மனப் பக்குவத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்ட வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மன நலமும்  பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Lent 4th Sunday 2026

 

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு.

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு.

2026.03.08.

முன்னுரை.

வாருங்கள். தாள்பணிந்து அவரைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள். நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்த நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி, இத் திருப்பலிக் கொண் டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் தவக்காலம் மூன்றாம்;  ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

பாலைநிலத்தில் இறைவன் தன் மக்களுக்குச் செய்த மாபெரும் புதுமையினை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அதே வேளையில் அம் மக்கள் எவ்வாறு தங்கள் பொறுமையின்மையால் இறைவனை நம்ப மறுத்து அவருக்கு எதிராகப் பேசத் தொட ங்கினார்கள் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தோடு தூய பவுலடியார் தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்னும் நம்பிக்கையை நமது உள்ளங்களுக்குள் ஊட்டுகின்றார்.

இவற்றையெல்லாம் நம் உள்ளத்தில் நன்கு பதித்தவர்களாக, ஆண்டவரே நம் கடவுள், நாம் அவர் மேச்சலின் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள் என்ற உண்மைய உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நம் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாது, ஆண்டவரின் குரலைக் கேட்டு அவர் வழியில் செல்ல இத் திருப்பலியில் வல்லமை  கேட்டுச் செபிப்போம்

முதல் வாசகம்.

குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்.

விடுதலைப் பயண  நூலிருந்து வாசகம்.17:3-7

இஸ்ரயேல் மக்கள் சீன் பாலை நிலத்திலிருந்து இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர்.

அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, ‘நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளை யும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், ‘இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்?  இன்னும் கொஞ்சம் போனால் என் மேல் கல் எறிவார்களே!” என்று கதறினார்.

ஆண்டவர் மோசேயிடம், இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக் கொண்டு மக்கள் முன் செல். நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்கு முன் நிற்பேன். நீ பாறையை அடி. மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் மாசா என்றும் மெரிபா என்றும் பெயரிட்டழைக்கப்பட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 95: 1-2. 6-9

பல்லவி :  உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர், ஆண்டவரின் குரலைக் கேட்டிடுவீர்!

வாருங்கள். ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள். நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி :

வாருங்கள். தாள்பணிந்து அவரைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடு வோம். அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள். நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி :

இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவி லும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர். என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.பல்லவி :

இரண்டாம் வாசகம்.

தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:1-2, 5-8

சகோதரர் சகோதரிகளே,

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந் நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது. எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். யோவா.4:42,15

ஆண்டவரே, நீர் உண்மையிலே உலகின் மீட்பர்: நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.

நற்செய்தி வாசகம்.

நிலை வாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  4:5-42

அக்காலத்தில்

அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.  இயேசு அவரிடம், ‘குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச் சமாரியப் பெண் அவரிடம், ‘நீர் யூதர். நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.

இயேசு அவரைப் பார்த்து, ‘கடவுளுடைய கொடை எது என்பதையும் குடிக்கத் தண் ணீர் கொடும் எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்: அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.

அவர் இயேசுவிடம், ‘ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை. கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, ‘இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண் டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.

அப்பெண் அவரை நோக்கி, ‘ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும். அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது. தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது” என்றார்.

இயேசு அவரிடம், ‘நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்” என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, ‘எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், எனக்குக் கணவர் இல்லை என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் அவரிடம், ‘ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில் தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார்.

இயேசு அவரிடம், ‘அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது. ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்.

கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்” என்றார்.  அப்பெண் அவரிடம், ‘கிறிஸ்து என ப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், ‘உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.

அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ‘என்ன செய்ய வேண் டும்?” என்றோ, ‘அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டு விட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,   ‘நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியா வாக இருப்பாரோ!” என்றார்.  அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார் கள்.

அதற்கிடையில் சீடர், ‘ரபி, உண்ணும்” என்று வேண்டினர்.  இயேசு அவர்களிடம், ‘நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார்.’யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ‘என்னை அனுப்பிய வரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

 ‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல் வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார். நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள். ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு விதைப்பவர் ஒருவர். அறுவடை செய்பவர் வேறு ஒருவர் என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார்.

நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார் என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சுமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், ‘இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்

1.எம்மைப் பேணிக்காக்கும் தந்தையே இறைவா! 

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும்,  கிறிஸ்துவே உண்மையிலே உலகின் மீட்பர் என்பதை தங்களுடைய வாழ்வால் வெளிப்படுத்தி, தூய ஆவியார் காட்டும் வழியில் நடந்து, தம் முன் மாதிரிகையான வாழ்வு என்னும் புகழ்ப் பாக்களால் உம்மைப்; போற்றி ஆர்ப்பரிக்கும் சக்தியை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. எம்மை உருவாக்கிய தந்தையே இறைவா!

நீர் படைத்தவற்றுள் உயர்வான நிலையிலுள்ள  நாம்,  உமது இரக்கத்திற்கும், வல்லமைக்கும் எதிராகச் செயற்படாமலும் கீழ்ப்படிதலும், விசுவாசமும் உள்ளவர்களாயும், தூய்மையான இதயம் கொண்டவர்களாகவும், தூய ஆவியாரின் வழிகளைப் பின்பற்றிய வாழ்வு   வாழ உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. தூய ஆவியின் வழியாய் எம் உள்ளங்களில் அன்பைப் பொழியும் தந்தையே இறைவா!
    உம் அன்பையும், அருளையும் விளங்கிக் கொள்ளாது வன்முறை, போர், பிரிவினை போன்றவற்றின்மீது நாட்டம் கொண்டவர்களின் இதயத்திற்குள் உமது அன்பைப் பொழிந்து, அவர்களை அன்புக் கலாச்சாரத்திற்குள் அழைத்து வர வேண்டுமென்றும், உலகில் போர் ஓய்ந்து அமைதி நிலைபெறச் செய்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தாகம் தணிக்கும் தந்தையே இறைவா!

விடுதலைக்காகவும், உரிமை வாழ்வுக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரினதும் ஏக்கத்தைப் போக்கி அவர்கள் உரிமை வாழ்வினை பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Lent 2026Third Sunday

தவக்காலம் முதலாம் ஞாயிறு.

தவக்காலம் முதலாம் ஞாயிறு.

2026.03.22.

முன்னுரை.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! பேரன்பும், அளவற்ற இரக்கமும் உடையவரான  நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் தவக் காலம் முதலாம்  ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியும், பாவம் உலகில் எவ்வாறு புகுந்து கொண்டது என்பதும், கிறிஸ்து சோதனைகளை வென்று பாவத்திலிருந்து நம்மை மீட்டார் என்பதும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நமக்கு தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றன. அத்தோடு நாமும் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு மனம் வருந்தி, மனம் மாறி,  மன்னிப்புப் பெற்று புது வாழ்வு வாழுவதற்கான ஒரு அழைப்பும் தரப்படுகின்றது.

இவ்வேளையில் நாமும் தூய உள்ளத்தோடும், மனவுறுதியோடும்: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடா தேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்து விடாதேயும். என்று  மனமுருகிச்  செபிப்போம். இத் தவக்காலத்தில் இயேசுவோடு சேர்ந்து பயணிக்க  இத் திருப்பலியில் வல்லமை  கேட்டுச் செபிப்போம்

முதல் வாசகம்.

முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.

தொடக்க  நூலிருந்து வாசகம்.2:7-9, 3: 1-7

அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.  ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தை யும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.

ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், ‘கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா? என்று கேட்டது. பெண் பாம்பிடம், ‘தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது: அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள். என்று கடவுள் சொன்னார்”, என்றாள்.

பாம்பு பெண்ணிடம், ‘நீங்கள் சாகவே மாட்டீர்கள்: ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன: அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 51: 1-4. 10-12,15

பல்லவி :  ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.  என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும் படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும்.பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார்வையில் தீயது செய்தேன்.பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன் னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்து விடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.பல்லவி

இரண்டாம் வாசகம்.

பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கொடுத்தது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:12-19

சகோதர சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது. ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவி ல்லை.

ஆயினும் ஆதாம்முதல் மோசேவரையில் இருந்தவர்கள் ஆதாமைப் போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று. இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.

ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்ற த்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள் கொடையாக வந்த விடுதலை.

மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்தது போல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். மத்.4:4

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றா லும் வாழ்வர்

நற்செய்தி வாசகம்.

இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்: கடவுளால் சோதிக்கப்படுகிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  4:1-11

அக்காலத்தில்

அதன்பின்  இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற் காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிற வன் அவரை அணுகி, ‘நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டடையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,  ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். கட வுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள். என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம். எனவும் எழுதியுள்ளதே. என்று சொன்னார்.

மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,  அவரி டம், ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத் தையும் உமக்குத் தருவேன்” என்றது.  அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ‘அகன்று போ, சாத்தானே, உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய். என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.

பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.உம் மீட்பின் மகிழ்ச்சியை அளிக்கும்  தந்தையே இறைவா! 

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும்  உம்முடைய திருமகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவைப் போல் துணிவோடும், தூய்மையான உள்ளத்தோ டும் தமது நாளாந்த வாழ்வில் ஏற்படும் சோதனைகளை வெல்வதற்கு வேண்டிய ஆற்றலை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

2.உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை வழங்குகின்ற  தந்தையே இறைவா!

திருச்சபையின் உறுப்பினராய் இருக்கும் எங்களுக்கு உம்முடைய கட்டளைகளுக் கும், அறிவுரைகளுக்கும் ஏற்றபடி  வாழுகின்ற தன்னார்வ மனத்தினை அளித்து: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை எமக்குள்ளே உருவாக்கியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.உமது வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் மனிதரை வாழவைக்கும் தந்தையே இறைவா! 

உலகில் பசியாலும், பட்டினியாலும் வாடுகின்ற அனைவரினதும் தேவை களைப் புரிந்துகொண்டு, நீர் எமக்குத் தரும் வளங்களை, நாம் சரியான முறையில் பயன்படுத்தி, அடுத்தவரின் பசிபோக்கும் செயற்றிட்டங் களில் அர்ப்பணிப்போடு ஈடு படுவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.தூயவரான   தந்தையே இறைவா!

உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் ஒழுக்கச் சீர்கேடுகள்  இல்லாது போகவும், அனைவரும் நீர் காட்டும் ஒழுக்க நெறியின் படி வாழவும் சாத்தானின் செயற்றிட்டங்களை முறியடித்து புதுவாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருள் உதவிகளை அனைவருக் கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Lent 2026 First Sunday

 

 

 

திருநீற்றுப்புதன்

திருநீற்றுப்புதன்

2026.02.018.

முன்னுரை.

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

இன்று திருநீற்றுப் புதன். தூய ஆவியாரின் அருட்துணையோடு, இயேசுவோடு சேர்ந்து பயணித்து, நம்மைப் புதுப்பித்துக் கொண்டு இயேசுவின் பாஸ்காப் பலியை அர்த்தமோடு கொண்டாட நம்மைத் தயாரிக்கும் காலம்.

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் நம்மைத் தொட்டுச் செல்லுகின்றது. நம்மைத் தொட்டுச் செல்லும் இத் தவக்காலம் நமக்கு விட்டுச் செல்லும் அழைப்பும், சிந்தனைகளும் அற்புத மானவை. கால மாற்றத்தால் கரைபட்டும், கறைபட்டும் போக முடியாத, மனித சிந்தனை களால் மாற்றப்படவும், மறுக்கப்படவும் முடியாத ஆன்மிகப் பண்புகளையும், விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற  இத் தவக்காலம்;, மனிதர் தமது வாழ்வைப் பசுமைப்படுத்த ஒரு சிறப்பான காலமாக அமைகின்றது. ஒரு வகையில் பார்த்தால் தவக்காலம் என்பது மனித வாழ்விற்கு ஒரு வாசந்த காலமே. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி,  வளமையும், மகிழ்ச்சியும் ஏற்பட நமக்கு வழிகளைத் திறந்து விடும் காலம் தவக்காலமே.

எனவே:  என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண் முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார்வையில் தீயது செய்தேன்: என்று உணர்ந்து, அதனை ஏற்றுக் கொண்டு, வாழ்வு மாற்றத்திற்காய் நம்மை அர்ப்பணித்தவர்களாய்த், இத் தவக்காலத்தை அர்த்தமுடன் கடைப்பிடித்து, பாஸ்கா விழாவைத் தகுதியுடன் கொண்டாட அருள்வரம் கேட்டுத் தொடரும் இத் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

‘நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம்.  2:12-18

ஆண்டவர் கூறுகிறார். ‘இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண் டவர். ‘நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித் துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்”. அவர் அருள் நிறை ந்தவர், இரக்கம் மிக்கவர். நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர் செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?

சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள். புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள். வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங் கள். புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள் ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள். மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும். மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.

ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ‘ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும். உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! அவர்களுடைய கடவுள் எங்கே? என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?

அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 51: 1-4, 10-12, 15.

பல்லவி: ஆண்டவரே இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப் போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி:

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண் முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார்வையில் தீயது செய்தேன்.பல்லவி:

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும் .பல்லவி:

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கடவுளோடு ஒப்புரவாகுங்கள்: இதுவே தகுந்த காலம்! 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம். 5: 20- 6:2

சகோதரர் சகோதரிகளே!

நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டு கோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து  உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ‘தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன். விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்.

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர் கள்: மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

நற்செய்தி வாசகம்.

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மத்தேயு எமுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 1-6, 16-18.

அக்காலத்தில்.

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது ‘மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

‘நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர் கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறை வேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங் கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய்  உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம் மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும் போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்க வேண் டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும் போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மாறாக மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்.

  1. உறுதியின் உறைவிடமான தந்தையே இறைவா!

உமது பணியாளர்களாம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொது நிலைப்பணியாளர்கள் அனைவருள்ளும் தூயதோர் உள்ளத்தை படைத்தது. உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை உருவாக்கி மனமாற்றத்தின் மாதிரிகளாக விளங்கச் செய்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. எம்மைத் தூய்மைப்படுத்திப் பாதுகாக்கும் தந்தையே இறைவா!

நாங்கள் எங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், இத் தவநாட்களில் எம்மோடு பேசும் உமது குரலைக் கேட்டு பகைமை உணர்வுகளை விலக்கி உறவின் சமூகமாக வாழும் மனநிலையை எம்மிடம் உருவாக்கியருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மீட்பளிக்கும் தந்தையே இறைவா!

பாவம்,போதைப் பொருள் பாவனை, குடி வெறி, களியாட்டம், தீய வாழ்வு ஆகியவற்றிற்குள் அகப்பட்டுப் போய்க் கிடக்கும் அனைவருக்கும் உமது  மீட்பின் மகிழ்ச்சியை அளித்து, தன்னுணர்வு  மனம் தந்து அவர்களை  உமது கரங்களுக்குள் தாங்கி விடுவித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. இரக்கத்தின் ஆண்டவரே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம் என்னும் தன்னுணர்வு பெற்று கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்காது, வெளிவேடம் அகற்றி உண்மைச் சீடர்களாய் வாழுவதற்கு வேண்டிய சக்தியை உமக்களித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Ash Wednesday 2026.