All posts by Anthonithas Dalima

பொதுக்காலம் பன்னிரெண்டாம் ஞாயிறு.

பொதுக்காலம் பன்னிரெண்டாம் ஞாயிறு.

2026.06.21

திருப்பலி முன்னுரை.

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

இறை இயேசுவில் அன்புமிக்க இறை உறவுகளே! வலிமை வாய்ந்த வீரரைப் போல நம்மோடு இருக்கின்றவரும், நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும், உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவருமான நம் இறைத் தந்தையின் வலிமைமிகு திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி, ஆண்டின் பொதுக்காலம் 12ம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடனும், மகிழ்வுடனும் வவேற்று நிற்கின்றோம்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். என்னும் இன்றைய நாளின் இறைவார்த்தைகள் வழியாக எதிரொலிக்கும் இறைவனின் குரல், இறைமக்களாகிய நாம் இறையச்சத்தோடு, இறைவனில் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் என்ற உன்னதமான ஒரு செய்தியை நமக்குத் தந்து நிற்கின்றது.

கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. என்னும் இறைவார்த்தைகள், இறைவனை நம்புவோர் ஒருபொழுதும் தோல்வி அடைவதும் இல்லை ஏமாற்றம் அடைவதும் இல்லை என்ற மாபெரும் உண்மையை  இங்கு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

எனவே, இறைவன் மீது ஆழமாக நம்பிக்கைகொண்டு வாழும் மனப் பக்குவம் நமக்குக் கிடைக்கத் தொடரும் திருப்பலியில் பக்தியோடு பங்கேற்று மன்றாடுவோம்.

முதல் வாசகம்

கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

எரேமியா கூறியது:

‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.

படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே. நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 69: 7-9. 13,16. 32-34 

பல்லவி: கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. – பல்லவி:

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது. உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். – பல்லவி:

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். – பல்லவி:

இரண்டாம் வாசகம்

குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-15

சகோதரர் சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.

திருச்சட்டம் தரப்படும் முன்பும் உலகில் பாவம் இருந்தது. ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும், சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று. இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.

ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26-27

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.வலிமை வாய்ந்த வீரரைப் போல எம்மோடு இருக்கின்றவரான தந்தையே இறைவா!

எமது திருத்தந்தை ஆயர்கள்,குருக்கள், துறவிகள் அனைவரும், நல்ல மேய்ப்பர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வாழத் தடையாக இருக்கும்: பயம், விரக்தி, நம்பிக்கையின்மை, உலக ஆசைகள் என்னும் அழுக்குகளைக் கழுவி அவர்களை நம்பிக்கையின் வாழ்வுக்குள் அழைத்து, அன்புறவு வாழ்வில் அவர்கள் ஆர்வமுடையோராய் வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரான தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் அனைவரும் சோம்பல், நம்பிக்கையற்ற தன்மை முதலியவற்றை ஒழத்துவிட்டு, போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாது, உம்முடைய இரக்கத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டு இறையச்சம் உடையவர்களாய் வாழுவதற்கு வேண்டிய சக்தியை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க் கின்ற  தந்தையே இறைவா!

அலகையின் தந்திர வலையில் சிக்கிப் போதைப் பொருள் பாவனையினாலும், கலாச்சாரச் சீர்கேடுகளி னாலும், ஒழுக்க வாழ்விற்கு மாறான செயற்படுகளி னாலும், தவறான இலத்திரனியல் பொருட்களின் பாவனையினாலும் சிதைவடைந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து, இந்தத் தீமையின் பிடியிலிருநது அவர்களை விடுவித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றவரான தந்தையே இறைவா!

உலக நாடுகள் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ள அநீதி. சுயநலம், பேரின்மீது பெருவிருப்பம், அடக்குமுறை போன்ற தீமைகளை வேரறுத்து அமைதி, விடுதலை, பிறர்நலம், உண்மை  என்னும் விதைகளை விதைத்திட வேண்டுமென்றும், தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அத்தனை தாக்கங்களிலிருந்தும் அனைத்து மக்களையும் பாதுகாத்திட் வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 12th Ordinary Sunday 2026

 

ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழா.

ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழா.

2026.06.07

முன்னுரை.

ஆண்டவரைப் போற்றுவாயாக! அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமக்கு ஆசி வழங்கி, நமக்கு நமக்கு உணவூட்டி, நமக்கு அமைதி தருகின்றவருமான  நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழாத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

நற்கருணை என்னும் அருட்சாதனம் மூலம் இக்கொடை நமக்கு அருளப்படுகிறது. எல்லா அருட்சாதனங்களிலும் மையமாய் விளங்குவது நற்கருனை, ஏனெனில் எல்லா அருளின் ஊற்றாம் இயேசு கிறிஸ்துவையே நமக்குக் கொடையாகத் தருவது இவ்வருட்சாதனம் மட்டுமே. திருச்சபை முழுநலத்துடன் அன்றாடம் வளர்வதற்கு உணவாக இது அமைகிறது. அப்பமும், திராட்சை இரசமும் தூய ஆவியால்தான் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்பட்டு அவர் மனுவுரு பெற்று அவர் உடனிருப்பை நமக்குத்தருகிறார்.

அவர் மனுவுருவெடுத்ததின் குறிக்கோள் சிலுவையில் அவர் உடலை சிதைத்து, இரத்தத்தை சிந்தி உலகிற்கு நிறை வாழ்வு வழங்கவே. நற்கருணை கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு என்னும் மறைபொருளை உள்ளடக்கியுள்ளது எனவேதான் நாம் இதனை விசுவாசத்தின் மறைப்பொருள் என்று அறிக்கையிடுகின்றோம். அவரை உட்கொண்டு வாழும் போதும் அவர் உடலும் நம் உடலும் ஒன்றாய் இணைகின்றன. அவர் இரத்தமும் நம் இரத்தமும் ஒன்றாய் கலக்கின்றன. இவரோடு இணைந்திருக்கும்போது தந்தையும் தூய ஆவியும் நம் அருகில் அமர்ந்திருப்பதையும், வானதூதர்களும், புனிதர் புனிதையரும் புடை சூழ நிறைந்திருப்பதையும் நம்மிலே நாம் உணர்கின்றோம். எனவே நற்கருணை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களை உணர்ந்து வாழ இத்திருப்பலியில் அருள்வரம் கேட்டு மன்றாடுவோம்.

இறைவார்த்தைகள் வழியாக நமக்குக் கிடைக்கும் செய்திகளை நாம் ஆழமாகத் தியானித்தவர் களாக, இறைவனின் அருட்கொடைகளுக்காக நன்றி கூறி, நமது வாழ்வால் கிறிஸ்துவை மற்ற வர்களுக்குக் காட்டி, ஒன்றிணைந்த சமூகமாக, அன்பியச் சமூகமாக வாழ வல்லமையை இத் திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்

முதல் வாசகம்.

நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

இணைச்சட்ட   நூலிருந்து வாசகம்.8:2-3, 14-16

மோசே மக்களை நோக்கிக் கூறியது

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளை யும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர் தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.

அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தி னால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளா கிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்திய வர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதை யருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 147: 12-15, 19-20

பல்லவி :  எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!

அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார். உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி : 

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார். உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார். அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி : 

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை. அவருடைய நீதி நெறிகள் அவர்களுக்குத் தெரியாது. அல்லேலூயா! பல்லவி : 

இரண்டாம் வாசகம்.

அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல்;; திருமுகத்திலிருந்து வாசகம். 10:16-17

சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத் தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உட லாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கி றோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். யோவா.6:51-52

அல்லேலூயா, அல்லேலூயா!

‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  6:51-58

அக்காலத்தில்

இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்”.

 ‘நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர் களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண் மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப் பேன்.  வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என் னை உண்போரும் என்னால் வாழ்வர்.  விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவு இதுவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்”.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

  1. யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கும்; தந்தையே இறைவா!
    மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத் தத்தைக் குடிக்கும்: எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும்,  உம்மோடு இணைந்து: தூய்மை, தியாகம், அன்பு, செபம் ஆகியவற்றில்  வளர்ந்து, உமக்குரியவார்களாக வாழ அவர்களுக்கு  வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன் றாடுகின்றோம்.
  2. எம்மை நிறைவடையச் செய்யும் தந்தையே இறைவா!
    உமது மக்களாகிய நாங்கள் அனை வரும், நீர் தந்த அருட்கொடைகளுக்காக நன்றி கூறி, எமது வாழ்வால் கிறிஸ்துவை மற்றவர் களுக்குக் காட்டி, ஒன்றிணைந்த சமூகமாக, அன்பியச் சமூகமாக வாழ் வாழ்ந்திட அருள் பொழி ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அமைதி நிலவச் செயயும்; தந்தையே இறைவா!
    உலக நாடுகள் அனைத்திலும் வன்முறைகள் அழிந்து உண்மையான அமைதி நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இறுகிய பாறையிலிருந்து நீரைப் புறப்படச் செய்தவரான தந்தையே!
    பகைமை, பொறாமை, சாதி, பழிவாங்குதல், சுயநலம் போன்ற தீமைகளால் இறுக்கமான மனத்தைக் கொண்டு பிரிந்து வாழும் அனைவரையும் ஆசீர்வதித்து, மனமாற்றம் பெற்றிடும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் The Body and Blod of our Lord Feast 2026

     

மூவொரு இறைவன் பெருவிழா. 2026

மூவொரு இறைவன் பெருவிழா. 2026

2026.05.31

முன்னுரை.

கடவுளாகிய ஆண்டவரேஇ நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இரக்கமும் பரிவும் உள்ளவரும்இ சினம் கொள்ளத் தயங்குபவரும்,  பேரன்பு மிக்கவருமான  நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத் திற்கு உங்களை அன்போடு வரவேற் கின்றோம். இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாத் திருப் பலியைக்  கொண்டாடு கின்றோம். மூவொரு கடவுளின் பிரசன்னம்:  ஒற்றுமைக்கும், உறவுக்கும், ஒருமைப் பாட்டிற்கும், ஒரு முன்னுதாரண மாக இருக்கின்றது.

இறைவன் தான் எப்படியான தந்தை என்பதை. அதாவது: ‘ஆண்டவர்  இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு மிக்கவர். நம்பிக்கைக்குரியவர் எனஇ மோசே வழியாக வெளிப்படுத்துவதை இன்றைய முதலாவது இறைவார்த்தையும்இ மகிழ்ச்சியாயிருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள். என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்இ எனத் தூய பவுலடியார் அறிவுறுத்துவதை இன்றைய இரண்டாம் இறைவார்த்தையும் நமக்கு எடுத்துரைக் கின்றன.

எனவே நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்படுப வர்களாய் இருந்துஇ இந்த இறைவார்த்தைகள் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படும் இறைவனின் விருப் பத்தை நாம் கண்டுணர்ந்து நிறைவேற்றவும், நாமனைவரும்  மூவெரு கடவுளைப்போல ஒன்றிணை ந்த வாழ்வு வாழவும் வல்லமையை இத் திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்

முதல் வாசகம்.

இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.

விடுதலைப் பயண  நூலிருந்து வாசகம்.34:4-6, 8-9

அந்நாள்களில்

ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ஆண்டவர் என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில்,  ‘ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்புமிக்கவர். நம்பிக்கைக் குரியவர் என அறிவித்தார்.  உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, ‘என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந் தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். தானி (இ). 1: 29-33

பல்லவி :  என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரேஇ நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி :

உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரேஇ நீர் வாழ் த்தப் பெறுவீராக. பல்லவி :

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக.  உயர் வானகத்தில் நீர் வாழ் த்தப் பெறுவீராக. பல்லவி :

இரண்டாம் வாசகம்.

இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம். 13:11-13

சகோதரர் சகோதரிகளே.

இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியா யிருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள். என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். திவெ.1:8

அல்லேலூயா, அல்லேலூயா!

இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள்இ தந்தைஇ மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  3:16-18

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழி யாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்லஇ தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை. ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பி க்கை கொள்ளவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.தூய மாட்சிவிளங்கும்  தந்தையே இறைவா!  

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், மூவொரு கடவுளின் ஒருமைப்பாட்டைத் தம்முள் கொண்டு, மோசேயைப் போல என்றும் உமது திருவுளத்திற்குப் பணிந்து, தம் வாழ்வாலும், பணியாலும் உமது மாட்சிமையைத் துலங்கச் செய்திட: அவர்களுக்கு  வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எங்கள் மூதாதையரின் கடவுளாகிய தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் அனைவரும்,   எங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்தி, உமது அறிவுரைக்குச் செவிசாய்த்து. மன ஒற்றுமை கொண்டு அமைதியுடன் வாழ்ந்திட அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அன்புத் தந்தையே இறைவா!

எம்முள் ஒற்றுமையை வளர்த்து,  ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி  எமது வாழ்வாலும், பணியாலும் உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்ற வரும் எல்லாம் வல்லவருமான தந்தையே!

உலக நாடுகள் பலவற்றில், இன்று பெருகிவரும்  உமது படைப்பின் ஒழுங்கிற்கு எதிரான செயற்பாடுகள் அழிந்து, உமது திட்டத்தைப் பக்குவமாகப் பேணிக் காக்கும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Trinity Sunday.2026

ஆண்டவரின் விண்ணேற்றம் – பெருவிழா

ஆண்டவரின் விண்ணேற்றம் – பெருவிழா

17.05.2026

திருப்பலி முன்னுரை

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.

உன்னதராகிய ஆண்டவரும் அஞ்சுதற்கு உரியவரும்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தருமான நம் இறைத் தந்தையின் அருள் நாமத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் காலை வாழ்த்துக்களும், ஆசிரும் கூறி ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ ர்ன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்”என்னும் இயேசுவின் அழைப்பு இன்றைய நாளில் நமக்குக் கொடுக்கப்படும் முக்கிய செய்தியாகின்றது.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்னும் இயேசுவின் வார்த்தைகள் கிறிஸ்தவர்களாகிய நமக்குள்ள பணியை எடுத்துக் கூறுகின்றன.

எனவே நாம் ஒவ்வொருவரும் இவற்றை எம் மனத்தில் இருத்தி நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம். கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட யாவையும் அனைவரும்; கடைப்பிடிக்கும்படி நமது வாழ்வாலும், பணியாலும் எடுத்துக் கூறுவோம்.  அதற்கான ர்றையருளைக் கேட்டுத் தொடரும் திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம்

எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.

அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார்.

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2. 5-6. 7-8

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி: 

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். – பல்லவி: 

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். – பல்லவி: 

இரண்டாம் வாசகம்

அவரை விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!

கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.

அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 28: 19-20

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில்

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.அன்புத் தந்தையே இறைவா!

தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றை உம் திருமகன் இயேசு அறிவுறுத்தியது போல, சவால்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும், சீரிய வழிகாட்டுதல்களையும், ஞானத்தையும், அறிவுரைகளையும் நீரே வழங்கி, நற்செய்தியைத் தம் வாழ்வாலும், பணியாலும் அறிவிக்கும் ஆற்றலை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.அனைத்துலகின் வேந்தரே இறைவா!

உமது திருமகன் ர்யேசு வழியாக நீர் கட்டியெழுப்பிய திருச்சபை உலகில் வாழும் அனைவருக்கும் ஆற்றலாகவும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து செயற்படவும், நற்செய்தியை வாழ்வாலும், பணியாலும் எடுத்துரைக்கவும் ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.உன்னதரான தந்தையே!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும்  நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும், இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கொடுத்தது போன்ற ஆற்றலையும், சக்தியையும் பெற்று தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றவர்களாகவும், உமது நற்செய்தியின் தூதுவர்களாகவும் செயற்படும் சக்தியை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Assension 2026

 

 

பாஸ்காக் காலம் ஆறாம் ஞாயிறு.

பாஸ்காக் காலம் ஆறாம் ஞாயிறு.

2026.05.10.

முன்னுரை.

என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே!  துணையாளராம் தூய ஆவியை நம்மேல் பொழிந்து, நமக்கு நிறைவளிக்கும்   நம்  இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பாஸ்க்காக் காலம் ஆறாம்  ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

இறைவார்த்தைக்கு கவனமுடன் செவிசாய்த்து வாழுகின்றவர்கள் பெற்றுக்கொள்ளும் அருள் ஆசீர்வாதங்களையும், குறிப்பாக ஆவியானவர் அவர்கள்மேல் நிறைவாகப் பொழியப்படுவதையும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நாம் அறிந்து கொள்ளுகின்றோம்.

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல். என்னும் இறைவார்த்தைகள் நமது கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்கவேண்டுமென்பதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

எனவே நம் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுவோம்.  பணிவோடும் மரியாதையோடும் அனைவரோடும் உறவாடுவோம். இறை வார்த்தையின்படி வாழுவோம். அதற்கான வல்லமையை இத் திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்

முதல் வாசகம்.

சமாரியர்  மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்;.

திருத்தூதர் பணிகள்  நூலிருந்து வாசகம்.8:5-8.14-17

பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப் பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்ன வற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத் தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்பட வில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர் கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 66: 1- 7. 16,20

பல்லவி :  அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி  உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை.  என்று சொல்லுங்கள். பல்லவி :  

அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர் என்று சொல்லுங்கள்.  வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற் றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி : 

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி : 

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி : 

இரண்டாம் வாசகம்.

மனித இயல்போடிருந்த கிறிஸ்து இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 3:15-18

அன்பிற்குரியவர்களே,

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளி டம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். யோவா.14:23

அல்லேலூயா, அல்லேலூயா!
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக்  கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  14:15-21

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். ‘உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தரு மாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார். உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன். நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள் ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்”.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1.பேரன்பை எம்மிடமிருந்து நீக்காத  தந்தையே இறைவா!  

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும்,  தம் உள்ளத்தில் கிறிஸ்துவை மனவுறுதியோடு ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றி தூய வாழ்வு வாழ்ந்திடவும், தாங்கள் எதிர்கொள்ளும் விசுவாசத்திற்கு எதிரான சவால்களுக்கு தகுந்த முறையிலும், பணிவோடும், மரியாதையோடும் விடை அளித்திடவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. எம் மன்றாட்டைப் புறக்கணியாத தந்தையே இறைவா!

எம் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றவும்,  பணிவோடும் மரியாதையோடும் அனைவரோடும் உறவாடவும்;. இறைவார்த்தையின்படி வாழவும். அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. கடலை உலர்ந்த தரையாக மாற்றிவிடும் தந்தையே இறைவா!

ஆன்மீகம், அன்பு, அமைதி, உறவு என்பன வற்றிப் பாலைவனமாகப் போகியுள்ள மனித இதயங்களில் மனிதநேயப் பண்புகள் அனைத்தும் மீளவும் துளிர்த்து, நல்லுறவின் சமூகம் உருவாகிட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மன நலமும்  பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Easter 6th Sunday 2026

 

 

 

 

பாஸ்க்காக் காலம் 5ம் ஞாயிறு

பாஸ்க்காக் காலம் 5ம் ஞாயிறு

2026.05.03

முன்னுரை.

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின் றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பால் பூவுலகை நிரப்புகின்றவரும், சாவினின்று காக்கின் றவரும், பஞ்சத்திலும் வாழ்விக்கின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி  இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். பாஸ்க்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு தினமாகிய இன்று வழியும் உண்மையும் வாழ்வுமான நம் ஆண்டவர் இயேசுவின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

கலக்கத்தோடும், கண்ணீரோடும், ஏக்கத்தோடும், இழப்புக்களோடும் வாழுகின்றவர்களுக்கு: மாபெரும் நம்பிக்கைச் செய்தியொன்று கொடுக்கப்படுகின்றது. நான் சொல்வதை நம்புங்கள்: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின் றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். என்பதே அச்செய்தியாகும். அத்தோடு நாம் அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், ஆவிக்கு ரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருக்கவேண்டுமெனவும் இறைவன் விரும்பு கின்றார்.

ஆகவே நாம் அனைவரும் இறைவனில் எப்பொழும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அவரில் மகிழு வோம். அவர் விரும்புவதை நிறைவேற்றுவோம், அவர் மக்களாய் வாழ இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 6:1-7

அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி  பேசுவோர் தங்களு டைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவி ல்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து,  நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறைஅல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த வர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந் தெடுங் கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப் போம். நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம் என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக ;கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கா னோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர் களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டி னர்.

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப்   பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம் பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 33:1-2,4-5, 18-19

பல்லவி: ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்: பல்லவி:

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி:

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண் ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:4-9

அன்பிற்குரியவர்களே,

உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள்.  மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரி ந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன்.  அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல்.  அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்; என்று மறைநூலில் காணக்கிடக்கிறது.

நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும்.  நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக் கல்லாயிற்று. மற்றும் அது, இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் இருக்கும்.  அவர்கள் வார்த்தையை ஏற்கா ததால் தடுக்கி விழுகிறார்கள்: இதற்கென்றே அவர் கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்: அவரது உரிமைச் சொத்தான மக்கள்.  எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழை த்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா 14:6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:1-12

அக்காலத்தில்;

இயேசு, தம் சீடரை நோக்கிக் கூறியது,  ;நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத் தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில்,  ;உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ; என்று கொல்லியிருப் பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத் துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ; என்றார்.

தோமா அவரிடம்,  ;ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப் படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?  என்றார். இயேசு அவரிடம்,  வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங் கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையம் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிரு க்கிறீர்கள ; என்றார்.

அப்போது பிலிப்பு, அவரிடம்,  ;ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்: அதுவே போதும்  என்றார். இயேசு அவரிடம் கூறியது:  பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்க ளோடு இருந்தும் நீ என்னை அறி ந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க,  தந்தையை எங்களுக்குக் காட்டும் ; என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவ தில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்: தந்தை என்னுள் இருக்கிறார்.

நான் சொல்வதை நம்புங்கள்: என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டா வது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்ப வரும் செய்வார்: ஏன், அவற் றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தை யிடம் போகிறேன் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1.ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!

உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் : அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றவர்களாகவும், நல்ல வழிகாட்டிகளாகவும், ஆவிக்குரிய பலிகளை ஒப்புக் கொடுக்கின்றவர்களாகவும்  இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக  உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக  உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும்  ஒரே உள்ளமும் , ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும் , சமாதானத்தின் தூதுவர்களாகவும் , உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும்  எம் இளைஞர்கள்   உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழவும், அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருக்கவும் அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 5thsundayofeaster2026

 

 

 

 

 

 

 

 

பாஸ்காக் காலம் 3ம் ஞாயிறு.

பாஸ்காக் காலம் 3ம் ஞாயிறு.

2026.04.19

முன்னுரை.

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த் துக்கள் கூறி பாஸ்காக் காலம் மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் ஒவ்வொருவரையும், அன்புடனம், மகிழ்வுடனும் வரவேற்று நிற்கின்றோம். நாம் அனைவருமே இன்று உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும்; ஒன்று கூடியுள்ளோம்.

இயேசுவின் பிரசன்னம் எப்பொழும் ஆறுதலையும், அமைதியையும் தருகின்றது. ஆனால் ஒன்று பட்ட ஒரு சமூகத்தின் மத்தியில்தான் கிறிஸ்து தரும் இந்த ஆறுதலையும், அமைதியையும் அனுப விக்க முடியும். ஏனெனில் நாம்  ;தந்தையே ; என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாக ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்:  அவர் என் வலப்பக்கம் உள்ளார்:  எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகைகொள் கின்றது: என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும் என்னும் விசுவாச உறுதியோடு தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2:14,22-33

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:  ;யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.  எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீ;ங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார்.  நீ;ங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்.  ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக்குறித்துக் கூறியது:

‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்:  அவர் என் வலப்பக்கம் உள்ளார்:  எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகைகொள்கின்றது: என் நா மகிழ்ச்சி யால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

;;சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள்.  அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார்.  அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணை யில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிடடுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்: அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிhத் தெழச் செய்தார்.  இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலதுப்பக்கத்;துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளி னார்.  நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 16:1-2, 5, 7-11

பல்லவி: ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்

இறைவா, என்னைக் காத்தருளும்: உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்ட வரிடம் ‘நீரே என் தலைவர்: உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து: அவரே என் கிண்ணம்: எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே:பல்லவி:

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்: இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.பல்லவி:

என் இதயம் அக்களிக்கின்றது: என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது: என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படு குழியைக் காண விடமாட்டீர்.பல்லவி:

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும்..

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21

அன்பார்ந்தவர்களே,

நீங்கள் ;தந்தையே ; என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார்.  ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத் தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரி யும்.  அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல: மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்று முன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப் பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.  இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார்.  இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   திபா 118:24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்று விட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:13-35

அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலை யிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.  அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச் சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, ;வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ; என்று கேட்டார்.  அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ;எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ; என்றார். அதற்கு அவர் அவர்களிடம், ;என்ன நிகழ்ந்தது? ; என்று கேட்டார்.  அவர்கள் அவரிடம், ;நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம்.  அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார்  என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.  ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சி யாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.  இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்: அவர்கள் விடியற்காலையில்  கல்லறைக்குச் சென்றார் கள்: அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்க ளுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர்.  ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ; என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, ;அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ; என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல் களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.  அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், ;எங்களோடு தங்கும்: ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று: பொழுதும் போயிற்று ; என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்க வைத்தார்கள்.  அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன.  அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ;வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ; என்று பேசிக் கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.  அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், ;ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்.  அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ; என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக் கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அமைதியின் ஊற்றே இறைவா!

உம்முடைய சீடர்களுக்கு நீர் கொடுத்த அமைதியின் வாழ்த்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவர்மீதும் பொழிந்து: அவர்கள் இறைமக்களை அமைதியிலும், உண்மையிலும், உறவிலும், சமூக ஒன்றிப்பிலும் வழி நடாத்திச் செல்ல வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. தக்க வேளையில் துணைநிற்கும் தேவனே இறைவா!

எம்முடைய விசுவாச வாழ்விற்கெதிரான அச்சுறுத்தல்கள் அதிகமாகி வரும் இந்நாட்களில், நாங்கள் ஒவ்வொருவரும்: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்:  அவர் என் வலப்பக்கம் உள்ளார்:  எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகைகொள்கின்றது: என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.  என்னும் பேருண்மையை ஆழமாக உணர்ந்து உறுதியோடு வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. சமாதானத்தின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் சமாதானம் ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Easter 3rd Sunday 2026

 

 

 

 

பாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு.

பாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு.

2026.04.12

முன்னுரை.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பாஸ்காக் காலம் இரண்டாம்;; ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும்; நாம்;  ஒன்று கூடியுள்ளோம். மாபெரும் செயல் புரிந்துள்ளவரும், என்றென்றும் பேரன்பு உடையவரும், நம் இறைவனும், நம்மீது நம்பிக்கையின் சுடராய் ஒளிர்ந்துள்ளவருமான இயேசுவின் இனிய நாமத்தில இன்ப வாழ்த்துக்கள் கூறி பாஸ்காக் கால இரண்டாம் ஞாயிறு மற்றும் இறை இரக்கப் பெருவிழாவைக் கொண்டாட வந்திருக்கும் உங்கள் அனைவரையும்; அன்போடு வரவேற்கின்றோம்.

இறை நம்பிக்கையின்  பலன்கள் என்ன? இறைவன் எப்போது, எங்கே பிரசன்னமாகின்றார்? போன்ற வினாக்களுக்கான தெளிவான பதில்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தருகின்றன. அதாவது நம்பிக்கையின் பலன், இறைவனுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காணும் பாக்கியமாகும். அது இறைவனுடைய இரக்கமாக நம்மிடம் வந்து சேருகின்றது.  அத்தோடு, ஒன்றாக வாழும் சமூகத்தில் இறைவனுடைய பிரசன்னம் என்றும் இருக்கும் என்பது இன்று நமக்குத் தரப்படும் அடுத்த செய்தியாகும்.

இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற  தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என் னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம்;. இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந் தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2:42-47

அக்காலத்தில்

திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.  மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்:  பேருவகையோடும் எளிய உள் ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்: எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்:  ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 118:2-4,13-15,22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவ ருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்: ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண் டவரே என் ஆற்றல: என் பாடல்: என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண் களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ் வோம். பல்லவி

இரண்டாம் வாசகம்.

இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.  இவ்வாறு குன்றா எதிர் நோக் குடன் நாம் வாழ்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.  இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள் ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்.  இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.

இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது.  அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கை யும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்.  இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை: எனினும் அவர்மீது அன்பு செலுத்து கிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை: எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா 20:29

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்கிறார் ஆண்டவர்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் ; என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,  ;தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ; என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம்,  ;ஆண்டவரைக் கண்டோம் ; என்றார்கள். தோமா அவர்களிடம்,  ;அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ; என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம்,  ;இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; என்றார்.

தோமா அவரைப் பார்த்து,  ;நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்றார். இயேசு அவரிடம்,  ;நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்; என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்

1.மாபெரும் செயல் புரியும் தந்தையே இறைவா!

எங்கள் திருத்தந்தை,ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவறத்தார் அனைவரும், என்றும் உண்மையான இறை நம்பிக்கையால்  நிறைந்து, தங்கள் உண்மையான நம்பிக்கை வாழ்க்கையால் திருஅவையை வழி நடாத்திச் செல்ல தூய ஆவியின் அருள்வரங்களால் அவர்களை நிரப்பியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.பேரன்பு உடையவரான தந்தையே இறைவா! 

எம்முடைய நம்பிக்கை வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள  அடையாளங்களையும், அற்புதங்களையும் தேடியலையாது, உம்முடைய வாக்குறுதிகள் நிறைவேறம் என்பதை உணர்ந்து காத்திருந்து செயற்படும் தெளிவான பார்வையைத் தர  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இரக்கத்தோடு அனைவரையும் அரவணைக்கும் தந்தையே இறைவா!

பாவமன்னிப்பையும், ஒப்புரவு அருட்சாதனத்தைப் பற்றியும் பலர் கொண்டிருக்கும் தவறான, தெளிவற்ற தெளிவற்ற பார்வை எம்மில் மாறிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்ட தெய்வமே இறைவா!

உலகில் இன்று பெருகிவரும் அடக்குமுறை, வன்முறை, அநீதி, சமத்துவமின்மை போன்ற தீமைகளை அழித்து  உலகில் நிலையான அமைதி நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Easter 2nd Sunday 2026

 

 

பாஸ்காத் திருவிழிப்பு.

 

ஆண்டவரின் உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு.

பாஸ்காத் திருவிழிப்பு. 2026.04.04

முன்னுரை.

ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல். அவரே என் விடுதலை, என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே!  நமக்கு இரக்கம் காட்டுவரும் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினரும், தமது ஆவியை நீர் அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றவருமான  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, கிறிஸ்து சாவினின்று உயிர்த்தெழுந்த  இப் பாஸ்காத் திருவிழிப்புத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

நம் ஆண்டவர் இயேசு மகிமை மிக்கவராய்  உயிர்த்தெழுந்த மகிழ்வை நாம் இந்த இரவுப் பொழு திலே நினவு கூர்ந்து கொண்டாடுகின்றோம். இயேசு சாவைக் கடந்து உயிர்த்தெழுந்ததை   இஸ்ரா யேல் மக்கள் பார்வோன் மன்னனின் பிடியிலிருந்து விடுதலை பெற்று செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய நிகழ்வோடு இணைத்துக் கொண்டாடுகின்றோம். இறைவனே மாபெரும் விடுதலையாளராய் இருக்கின்றார். அவரை எந்தச் சக்தியும் கட்டுப்படுத்த முடியாது என்பதனை இவை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவதும், அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுவதும், கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்க ளையும் விட்டுவிட்டு; ஆண்டவரிடம் திரும்பி வருவதும். இரக்கம் காட்டும்  இறைவனிடம் திரும்பி வருவதும், நாமும் பாவம் என்னும் சாவிலிருந்து கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களே. எனவே நாமும்;, நம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழவும்,  உலகில் நடைபெறும் யுத்தம் ஒழிந்து அனைத்து மக்களும் அச்சமின்றி, மகிழ்ச்சியோடு வாழவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும் வரம் கேட்டு நம்மை அர்ப்பணித்தவர்களாய் தொடரும் வழிபாட்டில் பங்கேற்றுச் செபிப்போம்.

திருச்சபையின் திருவிழிப்புக் கொண்டாட்டங்களில் முதன்மையானதும், முக்கியமானதும் இன்றைய இக் கொண்டாட்டமே. இது பின்வரும் முக்கிய பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது:

ஒளி வழிபாடு : கிறிஸ்து இவ்வுலகின் ஒளி என்பதையும்

இறைவாக்கு வழிபாடு: வரலாற்றின் வழியாக இறைவன் மனிதரை விடுதலையாக்கும் மீட்பின் திட்டம் எவ்வாறு நிறைவேறியது என்பதையும்

திருமுழுக்கு வழிபாடு: நாம் தீமையையும், பாவத்தையும், ஊனியல்பினுடைய நாட்டங்களையும் விட்டொழித்து இறைவனுக்குரிய மக்களாக வாழ நாம் கொடுக்கும் உறுதி மொழியையும், நமது திருமுழக்கு வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பையும்,

நற்கருணை வழிபாடு: இயேசு உயிர்த்தெழுந்து என்றும் நம்மோடு உடனிருக்கின்றார், நற்கருணை வழியாக அவருடைய பிரசன்னம் நமக்கு உயிரூட்டம் தருகின்றது என்பதையும்  குறித்துக் காட்டுகின்றன.

முதல் வாசகம்.

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.

தொடக்க நூலிலிருந்து வாசகம். 1: 1- 2: 2

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது கடவுள், ‘ஒளி தோன்றுக!” என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல்| என்றும் இருளுக்கு இரவு| என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள் ‘நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு விண்ணுலகம்| என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், ‘விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம்| என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல்| என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், ‘புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின் படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், ‘பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்: பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத் தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந் தது.

அப்பொழுது கடவுள், ‘திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளை யும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி ‘பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என் றுரைத்தார்.  மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், ‘கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத் தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், ‘மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத் தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவு ளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலு க்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், ‘மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலை யும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறை வெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித் திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 104: 1-2,5-6,10, 12-14,24,35

பல்லவி: ஆண்டவரே உமது ஆவியை நீர் அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள் ளவர். நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர் அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. பல்லவி:

பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர். அவை மலைகளிடையே பாய்ந்தோடும். நீரூற்று களின் அருகில் வானத்துப் பறவைகள் கூடு கட்டிக் கொள்கின்றன.அவை மரக்கிளைகளினின்று இன் னிசை இசைக்கின்றன. பல்லவி:

உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர். உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர் மானிடருக்கெனப் பயிர் வகைகளை வளரச் செய்கின்றர். இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய் கின்றீர். பல்லவி:

ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்து ள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா! பல்லவி:

இரண்டாம் வாசகம்.

இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிருந்து வாசகம். 14: 15- 15:1 

அந்நாள்களில்

ஆண்டவர் மோசேயை நோக்கி, ‘ஏன் என்னை நோக்கி அழவேண்டும்?  முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல் மேல் நீட்டி அத னைப் பிரித்து விடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, நானே ஆண்டவர்| என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.

இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம் பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம் பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.

மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், ‘இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர் தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ‘நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார்.

கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர் மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

பதிலுரைப்பாடல். விப. 15: 1-6,17-18,

பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்.

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார். குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல். அவரே என் விடுதலை, என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன். பல்லவி

போரில் வல்லவர் ஆண்டவர்,  ஆண்டவர்| என்பது அவர் பெயராம். பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார். அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். பல்லவி

ஆழங்களில் அவர்கள் கல்லைப் போல் மூழ்கிப் போயினர். ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது.  ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.பல்லவி

ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.பல்லவி

மூன்றாம் வாசகம்.

என்னிடம் வாருங்கள்: நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 55: 1-11

ஆண்டவர் கூறுவது:

தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.  கையில் பணமில்லாத வர்களே, நீங்களும் வாருங்கள்.  தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்.  நல்லுணவை உண்ணுங்கள். கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.

எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்.  கேளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன். தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இன மக்களை அழைப்பாய். உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக. அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்.  ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். எசா. 12: 2-6,

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அக மகிழ்வோடு தண்ணீர்  முகந்து கொள்வீர்கள். பல்லவி:

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் திருப்பெயரைப் போற்றுங்கள். மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள். அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி:

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள். ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார் அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள். இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி:

நான்காம் வாசகம்.

நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து வாசகம். 36: 16-28

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்கு சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று| என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர்  கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அன்று. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர்  என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள். உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதி நெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 51: 10-13,16-17,

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடா தேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன். பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது. நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே. கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்குரிய பதிலுரைப்பாடலும், செபமும் முடிந்தபின், பீடத்தில் விளக்குகள், திரிகள் பற்றவைக்கப்படும். அதன்பின் உன்னதங்களிலே என்னும்; வாழ்த்தொலி வழமைபோலப் பாடப்படும். அப்பொழுது ஆலயத்தின் மணிகள் ஒலிக்கும். அதன் பின்  புதிய ஏற்பாட்டின் திருமுக வாசகத்திற்கான சபை மன்றாட்டும், திருமுக வாசகமும் இடம்பெறும்.

புதிய ஏற்பாட்டின் திருமுக  வாசகம்.

இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 6: 3-11

சகோதரர் சகோதரிகளே,

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.

அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்துபோகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.  இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார் பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்.  அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்.  கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 118: 1-2,16-17, 22-23

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு| என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி:

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது. ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன். உயிர் வாழ்வேன். ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி:

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி:

நற்செய்தி வாசகம்

இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 1-10

ஓய்வுநாளுக்குப் பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘நீங்கள் அஞ்சாதீர்கள்.  சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை. அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்| எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.

அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்;.

  1. மீட்பும், ஆற்றலுமான தந்தையே இறைவா!

எமது திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், நல்ல மேய்ப்பர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வாழத் தடையாக இருக்கும்: பயம், விரக்தி, நம்பிக்கையின்மை, உலக ஆசைகள் என்னும் அழுக்குகளைக் கழுவி அவர்களை நம்பிக்கையின் வாழ்வுக்குள் அழைத்து, அன்புறவு வாழ்வில் அவர்கள் ஆர்வமுடையோராய் வாழ்வதற்கும், பாவம் என்னும் சாவிலிருந்து கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்களாக மாறவும் வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும்  எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ  வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவரான தந்தையே இறைவா!

உலகில் தீவிரமடைந்துள்ள கொடிய யுத்தம் நிறுத்தப்படவும், மனித வேதனைகளையும், அவலங்களையும் புரஜந்து கொள்ளுகின்ற,  மனித மாண்பை மதிக்கின்ற மனப் பக்குவத்தையும், நல்லெண்ணத்தையும்  அனைத்துத் தலைவர்களிடமும் உருவாக்கி, அவர்கள் அமைதியின் கருவிகளாகச் செயற்பட அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உம் படைப்புகளால் உலகை நிறைந்துள்ள தந்தையே இறைவா!

இவ்வுலகில் பெருகி வரும் வன்முறைகளும், பயங்கரவாதமும் ஒழிந்து,அனைத்து மக்களும் அச்சமின்றி, அமைதியாக வாழ இவ்வுலகை அமைதியின் இல்லமாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர், யுத்தக் களத்திலும், பாதுகாப்புப் பணியிலும் இருப்போர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Holy Saturday 2026Vigil

 

 

 

ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளி.

ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளி.

2026.04.03

முன்னுரை.

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரான நம் தந்தையாம் இறைவனை ஆரதிப்போம்;. இன்று புனித வெள்ளி. இறையன்பின் ஊற்று மானுடத்தை வந்தடைந்த நாள். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதை  நிரூபித்துக் காட்டிய நாள். அநியாயத் தண்டனை மரணம்  சரிவு அல்ல அது சாதனைக் களம் என்பதை உணர்த்திய நாள். எனக்காக அழ வேண்டாம்  உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள் என்னும் தன்ணுர்வுத் தேடலை ஆரம்பிக்கச் சொன்ன நாள். இறையன்பிலிருந்து என்னைப் பிரிக்கக் கூடியது எது? என்னும் இலட்சிய வேட்கையின் வீரத்தை வெளிப்படுத்திய நாள். அன்னை மரியாவை சீடத்துவத்தின், பரிசாக, பாதுகாவலியாகக் கொடுத்த நாள். உலகத்தின் சிந்தனைக் கருவூலங்களைச் சிதறடித்து  அவமானத்தின் சின்னமாம் சிலுவையை, மீட்பின் வழித்தடமாக மாற்றிய சரித்திர நாள்.  பாவக் கறையைக் கழுவித்துடைத்த தூய நாள். இறையரசுக்காய் அடையும் அவமானங்கள் ஆற்றல் மிக்க சக்திகளே என்பதை அடையாளப்படுத்திய நாள். பொறுமைக்கும் எல்லையுண்டு என்னும் மனித சிந்தனையை மாற்றிப்போட்டு, பொறுமையே பொறுமையின் எல்லை என்பதை புரியவைத்த நாள்.விரக்தியை விரட்டு விசுவாசப் புத்தகத்தைப் புரட்டிப்படி என்னும் யதார்த்தத்தை விதைத்த நாள். அநீதியின் வேர்கள் அறித்தெறியப்படும் என்னும் எச்சரிக்கையைப் பறைசாற்றிய நாள். உண்மைகள் உலர்ந்து போவதுமில்லை, ஊனமாகிப் போய்விடுவதுமில்லை என்னும் உண்மை கருவாகி, உருவான நாள். வெறுமையே அருள் நிறைவுக்கான திறவுகோல் என்பதை அர்த்தப்படுத்திய நாள். மன்னிப்பே மானுடத்தின் சுவாசம் என்பதை சுட்டிப்பாகச் சொன்ன நாள். எல்லாவற்றையும் கடந்து:  நேசத்தின் வாசகம் நம்மைத் தழுவிய நாள்.

எனவே, சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்காமல், நம் ஆண்டவர்  யேசுவின் பாடுகளை நினைவூட்டும் இந்தத் தூய வெள்ளிக்கிழமையின் ஆன்மிகக் கருவூலங்களை நன்கு உள்வாங்கியவர்களாக, தூய்மையான அன்பை வாழ்ந்து – பகிர்ந்து – பரிசளிக்கும் சீடர்களாக மாறுவோம்.

இன்றைய வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது.

முதலாவது: இறைவாக்கு வழிபாடு- இறையரசுக்காகத் துன்பங்களையும், பாடுகளையும் அனுபவிக்கும் உன்னத பணியாளன் இயேசுவின் மனப்பக்குவத்தை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு விளக்கிக் கூறுகின்றன.

இரண்டாவது: திருச்சிலுவை ஆராதனை –  சிலுவை சிலருக்கு அவமானச் சின்னம். சிலருக்கு மடைமை. கிறிஸ்தவர்களாகிய நமக்கோ வெற்றியின் சின்னம். இயேசுவைச் சுமந்ததனாலும் இயேசு அதைச் சுமந்ததனாலும் சிலுவை புதிய அத்தியாயத்திற்குள் நுழைகின்றது.

மூன்றாவது: திருவிருந்து பகிர்ந்தளிக்கும் நிகழ்வு.

முதல் வாசகம்.

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிலிருந்து வாசகம்.  52:13 -53: 12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார் அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறு வார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர் அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந் ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது. மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்  அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர் ஏனெ னில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர் தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட் டது?

இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார். நாம் பார் ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இக ழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார், காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார், அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார், நம் துன்பங் களைச் சுமந்து கொண்டார், நாமோ அவர் கடவுளால் வதைக் கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறு மைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந் தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட் டார் சிறுமைப்படுத்தப்பட்டார். ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை. அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர்  உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக் களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை. வஞ் சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள். செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார். அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார் எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்  ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார். நேரியவரா கிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார் அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்.அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார். கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார். ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார். கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 31: 1,5,11-12,14-16,24

பல்லவி: தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.  உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.  உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்.  வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர். பல்லவி:

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன். என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்.  என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன். உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். பல்லவி:

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நீரே என் கடவுள் என்று சொன்னேன்.என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது.  என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி:

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும். உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.  தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4: 14- 16.5: 7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலை மைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்.  எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக் கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச் சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி,  தமக்குக் கீழ்ப்படிவோர் அனை வரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம். பிலிப்பியர். 2:8-9

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி.

யோவான் எமுதியபடி  நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகள்: 18:1-19:42

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Good Friday 2026