மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தனது பணிக் குருத்துவத்தின் 50வது ஆண்டு பொன் விழாவை 06.01.2023 வெள்ளிக்கிழமை நினைகூர்ந்தார். மேலும் அறிய பணிக்குருத்துவத்தின் 50வது ஆண்டு பொன்விழா
கொக்குப்படையான் புனித யாக்கோப்பு ஆலயத் திறப்பு விழா
மன்னார் மறைமாவட்டத்தின் சிலாவத்துறைப் பங்கு அருட்பணி எல்லைக்குள் இருக்கும் கொக்குப்படையான் கிராமத்தில் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு 2021.08.07 சனிக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டு திருமரபு ஒழுங்கிற்கமைய ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய கொக்குப்படையான் புனித யாக்கோப்பு ஆலயத் திறப்பு விழா
மன்னார் மறைமாவட்டத்தில் 50வது புதிய பங்கு உருவாக்கம்.
மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த மழுவராயர்கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயம் தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்காக அறிவிக்கப்பட்டு மேலும் அறிய மன்னார் மறைமாவட்டத்தில் 50வது புதிய பங்கு உருவாக்கம்.
புதிய நூல் வெளியீடு.
குடும்பங்களின் பாதுகாவலரான புனித யோசேப்புப் பற்றிய “ மீட்புத் திட்டத்தில் நல்ல தந்தை புனித யோசேப்பு” என்னும் தலைப்பில் அருட்கலாநிதி அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ அடிகளாரால் உருவாக்கப்பட்ட நூல் 24.07.2021 சனிக்கிழமை மாலை மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் அறிய புதிய நூல் வெளியீடு.
ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம்.
மறைந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவாக மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம்.
குருத்துவ அருட்பொழிவு.
புனித டொன்பொஸ்கோவின் சலேசியன் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் யேசுதாசன் செபஞானம் 24.07.2021 சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பணிக்குருவாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார். மேலும் அறிய குருத்துவ அருட்பொழிவு.
பணிப் பொறுப்பேற்க்கும் திருநிகழ்வு.
மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட குருமுதல்வர் மற்றும் ஆயரின் சிறப்புப் பணி முதன்மைக் குருக்களுக்கான அருட்ப்பணிப் பொறுப்புக்களை முறைப்படி வழங்கும் திருநிகழ்வு இன்று ( 23.07.2021) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மேலும் அறிய பணிப் பொறுப்பேற்க்கும் திருநிகழ்வு.
பணிக்குருத்துவ அருட்பொழிவு
பணிக்குருத்துவ அருட்பொழிவுத் திருவழிபாட்டுத் திருப்பலி. ஆயர் இல்லம்: மன்னார். 08.07.2021.
புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருச் செபமாலைத் தியானமும், நற்கருணை வழிபாடும்
உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருச் செபமாலைத் தியானமும், நற்கருணை வழிபாடும்
மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது.
உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது.