அருட்பணியாளர் குழு பொது நிலையினரைச் சந்தித்தது

இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர் குழு இன்றுமாலை 03.00 மணிக்கு மன்னார் குடும்பம், பொது நிலையினர் பணி மையத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகளிலிருந்த வந்திருந்த மேலும் அறிய அருட்பணியாளர் குழு பொது நிலையினரைச் சந்தித்தது

பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு வரவேற்பு.

மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ர பிரஜைகளின்( முதியோர் சங்கம்) சங்கம்  இன்று 17.01.2018 புதன் கிழமை காலை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை தமது சங்கத்திற்கு அழைத்து சிறப்பான வரவேற்பை வழங்கியது. மேலும் அறிய பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு வரவேற்பு.

பரிவுள்ளத்தோடு இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர்

உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்திருக்கின் றோம். பயணத்தை ஆரம்பியுங்கள் நாங்கள் உங்களுக்கு வலுவூட்டு கின்றோம், நாம் அனைவரும் இறைமக்கள் நம்மை யாரும் பிரிக்க முடியாது, நிலைத்த, உறுதியான, நீடித்த, தொடர்ச்சியான, உயிரித் தொடர்பை நாம் உருவாக்க வந்திருக்கின்றோம், என்னும் பரிவுள்ளத்தோடு இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது. மேலும் அறிய பரிவுள்ளத்தோடு இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர்

ஆண்டின் பொதுக்காலம், வாரம் 2 – புதன்

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

அந்நாள்களில் தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார். மேலும் தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார். தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான். அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?” என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்;அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 144: 1. 2. 9-10

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!
போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே!பல்லவி

என் கற்பாறையும் கோட்டையும் அவரே!
எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே!
மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! பல்லவி

இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்;
பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!
உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா. : மாற்கு 3:1-6

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஜனவரி:17 புனித வனத்து அந்தோனியார்

ஜனவரி:17
புனித வனத்து அந்தோனியார் மடத்துத் தலைவர்(கி.பி251-356)

எகிப்து நாட்டைச் சார்ந்த இத் தவமுனிவரே கிறிஸ்தவ துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பேற்றோரை இழந்த நிலையில் இவர் 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தையும் துறந்து விட்டு இயேசுவைப் பின் செல்ல உதவியாக இருந்தது என்ன தெரியுமா? இயேசுவின் திருத்தூதர்கள் அனைத்தையும் துறந்தபின், அவரைப் பின் சென்றார்கள் என்ற சொற்களே (மத் 19, 21). தம் சகோதரிக்கு மட்டும் ஒரு சிறு தொகையைக் கொடுதடது விட்டு எஞ்சியதை ஏழைகளுக்கு ஈந்தார். பின் துறவற வாழ்வை மேற்கொண்டார். தம் ஊருக்கு அருகிலேயே கடும் உழைப்பு, மறைநூலை ஊன்றிப்படித்தல், செபம் ஆகியவற்றில் நாள் தோறும் நேரத்தைச் செலவிட்டார்.

நாளடைவில் ஊரைவிட்டு மிகத் தொலைவில் உள்ள இடத்தைச் தேடிச் சென்றார். அங்கு புனித அத்தனாசியாரின் நண்பரானார். நாளடைவில் பலரும் இவரை அனுகவே ஆங்காங்கே குழுக்களாக துறவு வாழ்வு மேற்கொண்டனர். அவ்வவ்ப்போது அலெக்சாண்டிரியா நகருக்குச் சென்று அங்கு வேதகலகத்தில் சாவை எதிர்நோக்கி வாழ்ந்த மறைசாட்சிகளை விசுவாச சத்தியத்தில் உறுதிப்படுத்தினார். புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

இந்த குறிப்புக்களின் பயனாகப் பலரும் பாலை நிலத்திற்கும் காடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தப செப வாழ்வு வாழ்ந்து இறைவனடி சென்றனர். இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது. ஆனால் நித்தியம் நிலையான பேரின்பம் என்பது எத்துணை மேலானது என்று தியானிப்பது நிறையப் பலன் தருகிறது என்று இவர் கொடுத்து வந்த மறையுரை புனித அகுஸ்தீனாரை மிகவும் கவர்த்திழுத்தது. இதை அகஸ்டின் தமது சரிதையில் குறிப்பிடுகிறார். இவர் தமது 105வது வயதில் செங்கடலுக்கருகில் கி.பி 356 ஆம் ஆண்டு கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.