செபவழி

செபங்கள்

(அடிப்படைச் செபங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்)

01. திருச்சிலுவை அடையாளச் செபம் (சிறியது)

தந்தை மகன் தூய ஆவி என்ற மூவொரு இறைவனை சிலுவை அடையாளத்தில் பொருத்தியே இச்செபம் அமைகிறது. நெற்றியிலும் நெஞ்சிலும் இடப்பக்க, வலப்பக்க தோள்மூட்டுக்களிலும் இச்சிலுவை அடையாளம் பொறிக்கப்படுகின்றது. மூவொரு இறைவனின் திருப்பெரைக் கொண்டு யேசுவின் வல்லமையுள்ள சிலுவையால் ஒருவர் தன்னையே புனிதப்படுத்திக் கொள்வதே இத் திருச்சிலுவை அடையாளச் செபமாகும். அவசியமான வேளைகளில் ஒருவர் தன்னையே ஆசீர்வதிக்கும் செயலாகவும் இது அமைகின்றது. அத்தோடு இறைவனின் துணையில் நம்பிக்கை வைத்து ஒரு நிகழ்வை தொடங்குவதையும் இதனால் குறிப்பிடலாம்.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

02. திருச்சிலுவை அடையாளச் செபம் (பெரியது)

திருச்சிலுவை அடையாளச் செபம் பெரியதாக வரும்போது மிகவும் பொருள் அமைகின்றது. இது நான்கு சிலுவை அடையாளங்களை ஒருவரில் பொறிப்பதாய் அமைகின்றது. நெற்றியிலே முதலாவது வாயிலே இரண்டாவதும் நெஞ்சிலே மூன்றாவதும் உடல் முழுவதும் நாலாவதுமாய் நான்கு சிலுவை அடையாளங்கள் பொறிக்கப்படுகின்றன. நெற்றியிலே போடப்படுவது சிந்தனையை புனிதப்படுத்துவதாயும் வாயிலே போடப்படுவது வார்த்தையை புனிதப்படுத்துவதாயும் நெஞ்சிலே போடப்படுவது செயற்பாடுகளை புனிதப்படுத்துவதாயும் உடல் முழுவதையும் உள்ளடக்குவது ஆள் முழுவதையும் புனிதப்படுத்துவதாயும் அமைகின்றது.

திருச்சிலுவை அடையாளத்திலே எங்கள் சத்துருக்க ளிடம் இருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளும். எங்கள் சர்வேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

03. மூவொரு இறைவனைப் புகழ்தல்

மூவொரு இறைவனைப் புகழும் செபமானது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியானது மூவொரு இறைவன் தந்தை மகன் தூய ஆவியின் மகிமையை தேடுவதாய் அமைகின்றது. ஒரு மனிதனுடைய வாழிவின் இலக்கு அதுவேயன்றி வேறெதுவுமாய் இருக்க முடியாது என்பதை நாம் மனமார ஏற்றுக்கொள்ள வேண்டும். இச்செபத்தின் இரண்டாம் பகுதியானது இறைவனின் இந்த மகிமைக் காலங்களைக் கடந்தது என்ற உண்மையை உணர்த்துகின்றது. இறைவன் காலங்களுக்கு அப்பால் இருப்பவர் இவர் மகிமையும் அவ்வாறே உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்றவாறு இப்பகுதி அமைகின்றது.

பிதா, சுதன், பரிசுத்த ஆவிக்கு மகிமை உண்டாவதாக ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

04. இயேசு கற்றுத்தந்த செபம்

இயேசு கற்றுத்தந்த இச்செபம் வானகத்தந்தையை நோக்கி செபமாக அமைகின்றது. இச்செபத்தில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி வானகத் தந்தையா னவர் விழித்துரைக்கப்படுவதையும், இரண்டாவது பகுதியில் அவரிடம் வேண்டுதல் செய்யப்படுவதையும் அவதானிக்கலாம். செபத்தின் முதல் பகுதியில் வானகத்தந்தையானவர் அழைக்கப்பட்டு அவரது மூன்று முக்கிய நிலைப்பாடுகள் விழித்துரைக்கப் படுகின்றன. இரண்டாவது பகுதியில் நான்கு வேண்டுதல்கள் அவரிடம் கோரப்படுகின்றன.

ஏழு மண்டலங்களுக்கு அப்பால் இறைவன் உறைகின் றார் என்ற யூத மரபின் பின்னணியிலே தான் “பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே” என்ற விழிப்பும் அமைப்பும் இடம்பெறுகின்றது. முதல் நிலைப்பாடு அவர் புனிதத்தின் “முழுமை” என்பதை ஒத்துக்கொள்வதாயும், இரண்டாவது நிலைப்பாடு அவரது ஆட்சி முறையும் பூமிக்குத் தேவையென்பதை உறுதி செய்வதாயும், மூன்றாவது நிலைப்பாடு அவரது திருவுளம் விண்ணுலகோர் மத்தியிலும் நிறைவுபெற வேண்டுமென்று விரும்பப்படுவதாயும் அமைகின்றது.

இரண்டாவது பகுதியிலுள்ள நான்கு விண்ணப்பங்களும் நம்முடைய அவசியத் தேவைகளைக் குறித்துக் காட்டுவதாய் உள்ளன. முதலாவது விண்ணப்பம் தேவைகள் அனைத்தும் இந்த வேண்டுதலில் அடங்கும். இரண்டாவது விண்ணப்பம் மன்னிப்பில் மையம் கொண்டுள்ளது. வானகத்தந்தையின் பெருந்தன்மை, மன்னிப்பதிலேதான் உண்டு என்பது வலியுறுத்தப்பட்டு, அதன் பொருட்டு மற்றவர்களையும் குறிப்பிடுகின்றது.

மன்னிப்பதில் தயக்கம் தாமதம் கூடாது என்பதை அறிவுரையாகத் தருகின்றது. மூன்றாவது விண்ணப்பம் இறைவன் நம்மைச் சோதனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாகும். இது பாவச் சோதனையைக் குறிக்கின்றது என்பதைவிட இறையரசுக்கு எதிரான சோதனையைக் குறிக்கின்றது எனக் கொள்வதே சிறந்தது. இயேசுவும் இத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்பட்டாரென்பது உண்மை. இறுதியான வேண்டுதல் தீமையிலிருந்து நாம் மீட்க்கப்பட வேண்டும் என்பதாகும். தீமை என்பது உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்று நிலைகளிலும் நமக்கு ஏற்படலாம். நோய்வாயிலும், உளவியல் தாக்கங்களிலும், பாவத்திலிருந்தும் விடுதலை அளிக்க வல்லவரான வானகத் தந்தையானவர் அவற்றைத் தரவேண்டு என்பதே அந்த வேண்டுதலாகும்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராட்சியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்பபடுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

05. மங்கள வார்த்தைச் செபம்
மங்கள வார்த்தைச் செபம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி இயேசுவின் மனித அவதாரத்தின் மட்டில் மரியன்னையைப் புகழ்வதாகவும், இரண்டாவது பகுதி அவளது பரிந்துரையை வேண்டுவதாயும் அமைகின்றது. இச்செபத்தின் முற்பகுதியில் மரியாள் “அருள் நிறைந்தவள் எனப்படுகிள்றாள்” அருள் என்பது இறைவனின் துணை, இறைவனின் ஆசீர்; என்பதாகும். இறைவனின் துணை நிறைவாகப் பெற்றவர் என்பதே அந்த வாழ்த்து இந்த வாழ்த்து இறைதூதர் வழியாக மரியாளுக்கு வந்ததை லூக்கா நற்செய்தி குறிப்பிடுகின்றது.

மரியாள் பெண்களுள் ஆசீர் பெற்றவராகவும் அவருடைய வயிற்றில் கருவாகும் இயேசுவும் ஆசுPர் பெற்றவராகவும் இந்த வாழ்த்து மேலும் அமைகின்றது. இயேசுவின் மனித அவதாரமே இங்கு மையமாக உள்ளது.

1. செபத்தின் இரண்டாவது பகுதியானது மரியாளே இறைவனுடைய தாய் என குறிப்பிடுகின்றது. அவர் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட உயரிய அந்தஸ்தை முன்னிட்டு இறைவனின் பிள்ளைகளாகிய நாம் பாவ நிலையிலிருந்து விடுதலை பெற அவரது உதவியை நாடுவதாகவும் இப்பகுதி அமைகின்றது.

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கத்தர் உம்முடனே பெண்களுள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசுPர்வதிக்கப்பட்டவரே
அர்ச்சியஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.

06. பரிசுத்த ஆவியானவருக்கு செபம்
இச் செபம் பரிசுத்த ஆவியானவரை நோக்கியதாக இருந்தாலும் மூவொரு இறைவனையும் உள்ளடக்கியே அமைக்கப்பட்டுள்ளது. இச்செபத்தில் இரு பகுதிகள் உண்டு. முதல் பகுதியில் பரிசுத்த ஆவியானவரும் வானகத் தந்தையும் குறிப்பிடப்படுகின்றனர். ஆவியானவர் அழைக்கப்பட்டு இறைவனை நம்புகின்றவர்களான எங்கள் மனங்களில் அவர் நிறைந்து இருந்து எம்மை அன்பு மயமாக்க வேண்டுமென வேண்டப்படுகின்றார். வானகத் தந்தையானவர் இந்த ஆவியானவரை எங்களின் மத்தியிலே அனுப்பி வைப்பதால் நாம் புதுப்படைப்பாக மாற முடியும் என்பதால் அவரும் அதை செய்யுமாறு வேண்டப்படுகின்றார்.
செபத்தின் இரண்டாம் பகுதியில் வானகத் தந்தையானவர் தமது ஆவியானவரின் வெளிச்சத்தால் தம்முடைய மக்காகிய நமக்கு பல விடயங்களை சொல்லித் தருகின்றார். மேலும் அந்த ஆவியானவரின் கனிகள் கொடைகள் வரங்களினால் நாம் நன்மையானவற்றில் பற்றுதல் கொண்டு அவரின் ஆறுதலைப் பெற்று ஆனந்தமாயிருக்க தந்தையே வழி செய்யும். அவர் மேலும் வேண்டப்படுகின்றார். இந்த வேண்டுதலை இயேசுநாதர் தான் எங்கள் சார்பாக தந்தையிடம் கொண்டு செல்ல வேண்டுமென இயேசுவையும் நாம் வேண்டுகின்றோம்.

பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும் உமது விசுவாசங்களின் இருதயங்களை நிரப்பி உமது நேசத்தின் அக்கினியை அவர்களிடத்தில் பற்றியெரியச் செய்தருளும். ஆண்டவரே உமது பரிசுத்த ஆவியை எங்களிடத்தில் அனுப்பியருளும் அப்போது எங்கள் இருதயங்கள் புதுப்பிக்கப்படும்.

செபிப்போமாக
பரிசுத்த ஆவியின் பிரகாசத்தினால் விசுவாசிகளின் இருதயங்களை படிப்பித்தருளின சர்வேசுரா நாங்களும் அதே பரிசுத்த ஆவியின் வரத்தினால் நல்லவைகளை விரும்பவும் அவருடைய ஆஞதலை எப்போதும் பெற்று அக்களிக்கவும் பண்ணியருளும் இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து மூலமாக ஏற்றுத் தந்தருளும் ஆமென்.

07. விசுவாச அறிக்கை (இது ஒரு செபமல்ல)
1. நமது வானகத் தந்தையானவர் உரகம் முழுவதையும் உண்டாக்கினார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுகி ன்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம்.பரோலகத்தை யும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதா வாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.

2. நமது வானகத் தந்தையானவரின் ஒரே மகனாக இருப்பவர்தான் நமது ஆண்டவர் இயேசுக்கிறிஸ்து என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் ஃ ஏற்றுக்கொள்கின் றோம்.அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.

3. இயேசு கன்னிமரியாளின் வயிற்றில் மனிதனாகக் காரணமாக இருந்தவர் பரிசுத்த ஆவியானவர் என்பதை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
இவர், பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து புனித கன்னி மரியிடமிருந்து பிறந்தார்.

4. யூதேயாவின் உரோமைச் சிற்றரசனாயிருந்த போஞ்சியோ பிலாத்துவின் அதிகாரத்துக்கு உட்பட்டே இயேசு பாடுகள் பட்டார், சிலுவையில் அறைப்பட்டார், மரித்தார், அடக்கம் செய்யப்பட்டடார் என்பதை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
போஞ்சியோ பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

5. யூதருடைய கொள்கைப்படி இறந்தவர்கள் செல்லும் “செயோல்சி” என்ற பாதாளத்துக்குச் சென்று இயேசு இறந்தவர்களிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்;த்தெழுந்தார்.

6. இயேசு உயிர்த்து 40 நாட்களுக்குப்பிறகு பரலோகத்துக்கு எழுந்து சென்றார் என்பதையும், அங்கு வானகத்தந்தையின் அதிகாரத்தைப் பெற்று அவர் வலது பக்கம் வீற்றிருக்கின்றார் என்பதையும் ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

7. வானகத்துக்கு எழுந்து சென்ற இயேசு வாழ்வோரை யும் இறந்தோரையும் தீர்ப்பிடுவதற்காக மீண்டு வரு வார் என்பதை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளு கின்றோம். இவ்ரிடத்திலிருந்து சீவியரையும் மரித்த வரையும் நடுத்தீர்க்க வருவார்.

8. இயேசு விண்ணகம் சென்றபின் திருத்தூதர் மேலும் மரியாள் மேலும் எழுந்து வந்து பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன்.

9. திருச்;சபை ஒன்றாகவும் புனிதமானதாகவும், பொது வானதாகவும், அப்போஸ்தலரைத் தொடர்ந்து வருவதா கவும் இருக்கின்றது எனவும், புனிதர்களும் திருச்சபை யின் உறுப்பினர்கள் எனவும் ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளுகின்றோம். ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும் விசுவசிக்கின்றேன்.

10. கத்தோலிக்க திருச்சபையில் இறைவன் வழங்கும் பாவமன்னிப்பை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக் கொள்ளுகின்றோம். பாவப் பொறுத்தலையும் விசுவசிக்கின்றேன்.

11. நாம் இறந்தாலும் ஒருநாள் உயிரிபெறுவோம் என்பதை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக்கொள்ளு கின்றோம்.உடலின் உயிர்ப்பையும் விசுவசிக்கின்றேன்.

12. இறைவனை நம்புவோருக்கு நிலையான வாழ்வு உண்டு என்பதை ஏற்றுக்கொகின்றேன் ஃ ஏற்றுக் கொள்ளுகின்றோம். நித்திய வாழ்வையும் விசுவசிக்கின்றேன், ஆமென்.

08. மூவேளைச் செபம்
மூவேளைச் செபம், பாஸ்கா காலத்துக்குரியது ஒன்றும், ஏனைய காலங்களுக்குரியது ஒன்றுமாக இரு செபங்கள் உள்ளன. இவை ஒருநாளில் காலை, மதியம், மாலை என்ற மூன்று பொழுதுகளில் சொல்லப்படும் செபங்களாகும்.
பாஸ்கா காலம் தவிர்ந்த ஏனைய காலங்களுக்குரிய மூவேளைச் செபம் இயேசுக்கிறிஸ்து நாதருடைய மனித அவதாரத்தை மையப்படுத்தியதாக இருக்கின்றது. செபத்தின் முதல் பகுதி மூன்று துணுக்குகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு துணுக்கம் கிறிஸ்துவின் மனித அவதாரச் செய்தி ஒன்றைத் தந்து “அருள் நிறைந்த மரியாயே” என்ற செபத்தோடு நிறைவு பெறுகின்றது. ஆண்டவரின் தூதாட செய்தி சொல்ல மாழயாள் கருத்தாங்கினாள் என்றும், அதற்கு மரியாள் தன்னைத் தாழ்த்தி “ஆகட்டும்” என்று பதில் சொன்னாள் என்றும், இதன் விளைவாகவே இயேசு மனித உடல் எடுத்து நம்மைப்போல் ஆனார் என்பதையும் இந்த முதல் பகுதி குறிப்பிடுகின்றது.
மரியாளின் பரிந்துரையை வேண்டிக்கொண்டு இரண்டாவது பகுதி தொடங்குகின்றது. இதில் மீண்டும் கிறிஸ்துவின் மனித அவதாரம் நினைவு கூறப்பட்டு அவரது பாஸ்கா உயிர்ப்பு வாழ்வு கிடைக்க வேண்டுமென மன்றாடி இயேசுவின் வழியாகத் தந்தையிடம் இச்செபம் அனுப்பி வைக்கப்படுகின்றது. “ஆமென்” என்ற சொல் ஆகட்டும் என்று பொருள்படுகின்றது.
பாஸ்கா காலத்திற்குரிய மூவேளைச் செபத்தின் முதல் பகுதி இயேசுநாதருடைய உயிர்ப்பின் ஆறு துணுக்குகளைக் கொணடுள்ளது. ஒவ்வொரு துணுக்கின் முடிவிலும் “அல்லேலூயா” என்று சூறப்படுகின்றது.
இயேசுவின் உயிர்ப்பினால் மரியாள் விண்ணக மகிழ்ச்சி பெற்றாள் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் அவள் இயேசுவை கருத்தாங்கியதே இயேசுவே தன் முன்கூற்றுப்படி உயிர்த்தெழுந்தார். அவர் தம் உயிர்ப்பின் வழியாக எங்களுக்காகப் பரிந்து பேசுகின்றார். இது மரியாளுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்கு காரணம் ஆண்டவருடைய உயிர்ப்புத்தான் என்றும் எபிரேயச் சொல், “இறைவன் புகழ் பெறுவாராக” என்ற உண்மை வலியுறுத்தப்பட்டு, மரியாளின் துணையால் மனுவுலக வாழ்வுபெற இயேசுக்கிறிஸ்து வழியாக தந்தையாம் இறைவனுக்கு இச்செபம் ஒப்படைக்கப்படுகின்றது.

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்.
அவள் தூய ஆவியினால் கருத்தரித்தாள்.
(அருள் நிறைந்த மரியே……)

இதோ ஆண்டவருடைய அடிமை.
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்.
(அருள் நிறைந்த மரியே……)

வார்த்தை மனுவுருவானார் எங்களிடையே குடிகொண்டார்
(அருள் நிறைந்த மரியே……)

இயேசு கிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக.
இறைவனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி!
உமது திருக்குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து மனிதன் ஆனதைத் திருத்தூதர் சொன்னதினாலே அதை அறிந்திருக்கிற நாங்கள் அவருடைய பாடுகளினாலம், சிலுவையினாலும் உயிப்பின் மகிமையை அடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை அதே கிறிஸ்துநாதர் மூலமாக ஏற்றுத்தந்தருளும், ஆமென்.

பாஸ்கா காலத்தில்
விண்ணக அரசியே மனம் களிகூரும் – அல்லேலூயா!
ஏனெனில் இறைவனைக் கருத்தாஙகப் பேறுபெற்றீர் – அல்லேலூயா!
கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர் – அல்லேலூயா!
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா!

செபிப்போமாக
இறைவா!
உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகம் களிகூரத் திருவுளமானீரே. அவருடைய திருத்தாயாராகிய புனித கன்னி மரியாளின் துணையால் நாங்கள் என்று நிலையான பேரின்ப வாழ்வைப்பெற அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

09. உத்தம மனஸ்தாபச் செபம்
இச்செபபமானது பாவமன்னிப்பு அருட்சாதனத்தின் போது சொல்லப்படும் செபமாகும். இச்செபம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவது பகுதியில் துக்கப்படும் மனநிலையும், இரண்டாவது பகுதியில் மனம்மாறித் தீர்மானம் எடுத்த தெளிந்த மனநிலையும், மூன்றாவது பகுதியில் மன்னிப்பு வேண்டல் மனநிலை யும், அழுத்தம் பெறுகின்றன. துக்கப் படும் முதல் நிலையில் ஆண்டவருடைய அன்புக்குப் பிரமாணிக்கம் இல்லாமல் பாவம் செய்துவிட்டேன் என்று ஒத்துக் கொள்ளுதல் வலியுறுத்தப்படுகின்றது. தீர்மானம் எடுக்கும் இரண்டாவது பகுதியில் ஆண்டவரின் உறுதியோடுதான் தீர்மானம் எடுக்கப்படுகின்றது என்பது அழுத்தம் பெறுகின்றது. மன்னிப்பு வேண்டும் பகுதியில் “நம்பிக்கையோடு வருகிறேன் பொறுத்துக்கொள்ளும்” என்று இரந்து வேண்டுதல் வேண்டுகோளாக விடுக்கப்படுகின்றது.

என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்துக்குப் பாத்திரராய் இருக்கின்ற தேவரீருக்கப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினாலே முழுமனதுடனே துக்கப்படுகின் றேன். இனிமேல் சுவாமி தேவரீருடைய உதவி யினாலேநான் ஒரு போதும் பாவம் செய்யேன் என்றும், பாவங்களுக்கு அடுத்த காரணங்களை எல்லாம் விட்டுவிடுவேன் என்றும் கெட்டிமனதுடனே வாக்குப் பண்ணுகிறேன்.
எங்கள் நாயகன் இயேசு கிறிஸ்து பாடுபட்டு அடைந்த மட்டில்லாத பெறுபேறுகளைப் பொறுப்பீர் என நம்புகின்றேன். என் பாவங்களைப் பொறும் சுவாமி, என் பாவங்களைப் பொறும் சுவாமி, என் பாவங்களை யெல்லாம் பொறுத்தருளும் சுவாமி, ஆமென்.

10. இறைவனின் பத்துப் போதனைகள் (இது ஒரு செபமல்ல)
இறைவனின் பத்துப் போதனைகளின் தொகுப்புகளும் தொடக்ககாலத்தில் “பத்துக் கற்பனைகள்” என்றும் பின்னிட்ட காலத்தில் “பத்துக்கட்டளைகள் என்றும்” அழைக்கப்பட்டன. நாம் இவற்றைப் “பத்துப் போதனைகள்” என்று குறிப்பிடுகின்றோம்.
கற்பனைகள் என்ற சொல் கற்பிக்கப்பட்டவை என்றும் சொல்லிக்கொடுக்கப்பட்டவை என்றும் முதலில் பொருள்பட்டது. அது பத்துக் கட்டளைகள் என மொழிபெயர்க்கப்பட்டபோது தன்னுடைய பொருள் இழந்து சட்டங்கள் என மொழிபெயர்க்கப்பட்டபோது தன்னுடைய பொருள் இழந்து சட்டங்கள், ஒழுங்குகள் என்று பொருள்படலாயிற்று.
இவற்றை நாம் 10 போதனைகள் என்று அழைப்பதே சிறந்தது. இப்பத்துப் போதனைகளில், முதல் மூன்று போதனைகளும் இறைவனைப் பற்றியவை. நான்காவது போதனை பெற்றோரைப் பற்றியது. ஏனைய ஆறு போதனைகளும் அயலாரைப் பற்றியவை.
1. இஸ்ராயேலரின் “ஓரே கடவுள்” கொள்கைகளிலிருந்து உருவான போதனையே முதலாவது போதனையாகும். பல கடவுள் கொள்கை கொண்ட மக்கள் மத்தியில் வாழ்ந்த இஸ்ராயேலருக்கு இது முதல் போதனையாக இருந்தது. அவர்களுக்கு வேறு கடவுள் இல்லை என்பது அழுத்திக் கூறப்படுகிறது.
உனக்குக் கடவுள் நாமே வேறு கடவுள் உனக்கு இல்லை

2. ஆள் ஒருவரை அவரது பெயர் குறிக்கின்றது. இறைவனின் பெயர் இறைவனையே குறிப்பதாகும். அவரைப் பெறுமதி குறைந்தவராக ஆக்கிவிடக்கூடாது என்று குறிப்பிடுவது இந்த இரண்டாம் போதனை. அவருக்கு ஆகக்கூடியது என்று குறிப்பிடுவது இந்த இரண்டாம் போதனை. அவருக்கு ஆகக்கூடியது உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தப் படிப்பினை.
இறைவனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.

3. இறைவனை நினைவுகூர்வதற்கு இஸ்ராயேலர் சில நாட்களை ஒதுக்கிவைத்திருந்தனர். அந்த நாட்களை ஓய்வு நாட்கள் என அழைத்தனர். அந்த நாட்களைப் புனிதமாகக் கடைப்பிடிப்பது இஸ்ராயேலரின் முக்கிய சமயக் கடமையாகும். கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஞாயிறு தினங்கள் ஆண்டவரின் உயிர்ப்பை நினைவுபடுத்துகின்ற நாட்களாகும். இந்த ஞாயிறு தினங்களைப் புனிதமாகக் கடைப்பிடிப்பது கிறிஸ்தவர்களின் கடமை என்பதை இந்த மூன்றாம் போதனை அழுத்திக் கூறுகின்றது.
இறைவனுடைய திருநாட்களைப் புனிதமாய்க் கடைப்பிடித்து வா

4. நமது பெற்றோரே நமது தெய்வம். அவர்கள் இறைவன் சார்பாக நம்மை உண்டாக்கியவர்கள் என்பதால் இறைவனைப் பற்றிய போதனைக்கு அடுத்ததாகப் பெற்றோர் பற்றிய போதனை இடம்பெறுகின்றது. இறைவனுக்கு அடுத்த இடத்தில் பெற்றோரை நாம் மதித்து மரியாதை செய்ய வேண்டும் என்பதை இந்த நான்காம் போதனை குறிக்கின்றது.
தந்தையையும் தாயையும் வணங்கி மரியாதை செய்

5. கொலை செய்யாதே என்ற போதனை ஒருவருடைய உயிரின்மேல் வேறு ஒருவருக்கு உரிமை இல்லை என்பதை எடுத்துக் கூறுகின்றது. மேலும் மானிட உயிர்கi மனிதர்கள் மதிக்க வேண்டும் எனவும் போதிக்கின்றது.
கொலை செய்யாதே

6. பாலுணர்வு என்பது இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கொடையாகும். இது திருமணத்தினால் புனிதமடைய வேண்டும். எனவே திருமணம் எனும் அருட்சாதனத்திற்குப் புறம்பே ஒருவரோடு கொள்ளும் உடலுறவும் ஒருவரை காம இச்சையுடன் நோக்குவதும் தவறு என்பதை இப்போதனை எடுத்துக் கூறுகின்றது.
மோக பாவம் செய்யாதே

7. களவு செய்தல் என்பது பிறருக்குச் சொந்தமான ஒரு பொருளை அவருக்கு; தெரியாமல் வேறொருவர் தமக்கு உரியதாக்குவதாகும் இது ஒரு தகாத செயல் என்பதை வலியுறுத்திக் காட்டுகின்றது.
களவு செய்யாதே

8. பொய் பேசுதல் என்பது உண்மையை மறுத்துரைப்ப தாகம். உண்மைக்கச் சாட்சிகளாயிருக்கவே நாம் படைக்கப்பட்டோம் என்பதை இப்போதனை வலியுறுத்துகின்றது. பொய்மைக்கு சான்று பகரக்கூடாது என்ற எதிர்முகச் செய்தி உண்மைக்குச் சான்று பகர வேண்டும் என்பதை அழுத்திக் கூறுகின்றது. பொய்ச்சான்று சொல்லாதே

9. பிறர் தாரத்தை விரும்பாதே என்ற போதனை திருமணம் ஆனவர்கள் தம்பதிகளாக கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் மட்டுமே உரியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றது. அவ்வாறு திருமணமானவர்கள் அவர்களது உரிமையிலும் உடமையிலும் இருந்து பிரிந்து வேறு ஒருவரைத் தன்னுரிமையாக்குவது முறைகேடானது என்று இப்போதனை குறிப்பிடுகின்றது. பிறர் தாரத்தை விரும்பாதே

10. பிறர் உடமையை விரும்பாதே என்ற போதனை பிறருக்கு உரிய பொருள் பண்டங்களிலும், சொத்து உடைமைகளிலும் வேறு எவருக்கும் உரிமை இல்லை என்பதை எடுத்துக் கூறுகின்றது. அவ்வாறு பிறருக்கு உரியவற்றைத் தன் உரிமை ஆக்கிக்கொள்வது பாவம் என்று இப்போதனை கூறுகின்றது. பிறர் உடமையை விரும்பாதே

11. திருச்சபையின் ஒழுங்குகள்.
1. ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் உண்டு. ஆறு நாட்கள் நமக்கென இருந்தாலும் ஞாயிறு என்ற ஒரு நாளை இறைவனுக்கென ஒதுக்க வேண்டுமென திருச்சபை போதிக்கின்றது. திருச்சபையினால் சிறப்பாகக் குறிப்பிடப்பட்ட திருநாட்களிலும் ஞாயிறு தினங்களில் இறைவனுக்கு முதல் இடமும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த ஒழுங்கு குறித்துக் காட்டுகின்றது.
ஞாயிறு தினங்களிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் பங்குபற்ற வேண்டும்.

2. பாவமன்னிப்பு அருட்சாதனத்தை அடிக்கடி ஒரு மாதத்திற்கு ஒருமுறை என்றாலும் பெறவேண்டும். இது இறைவனின் இரக்கத்தை அதிகமாக வழங்கும் அருட்சாதனம். கவலையீனத்தினாலோ அல்லது வேறு எக்காரணத்தினலோ இந்த அருட்சாதனத்தைப் பெறவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறை யென்றாலும் (கட்டாயமாகப்) பெறவேண்டுமென்று திருச்சபை கூறுகின்றது.
வருடத்தில் ஒருமுறை என்றாலும் பாவமன்னிப்புப் பெறவேண்டும்.

3. தேவநற்கருணை என்னும் அருட்சாதனத்தை அடிக்கடி ஒவ்வொரு வாரமும் இயலுமாயின் ஒவ்வொரு நாளும் பெறுவது நல்லது. ஆனால் இது எல்லாருக்கும் எல்லா இடங்களிலும் சாத்தியமானது அல்ல. ஆண்டுக்கு ஒரு முறை என்றாலும் அதுவும் பாஸ்கா காலத்தில் அதைப் பெறவேண்டும் என்று திருச்சபை வலியுறுத்துகின்றது.
வருடத்தில் ஒருமுறை என்றாலும் பாஸ்கா காலத்தில் தேவநற்கருணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. உண்ணா நோன்பு மாமிசத் தவிர்ப்பு நாட்களைக் கடைப் பிடிக்குமாறு திருச்சபை போதிக்கின்றது. திருநீற்றுப் புதன், பெரிய வெள்ளி ஆகிய தினங்கள் கட்டாய நோன்பு நாட்களாக இருந்தபோதிலும், விரும்பியவாறு உண்ணா நோன்பு நாட்களை ஒருவரின் வசதிக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.
உண்ணா நோன்பின் நோக்கம் இறையரசை மையம் கொண்டதாக இருக்க வேண்டும். வருடத்திலுள்ள எல்லா வெள்ளிக்கிழமைகளும் மாமிசம் உண்ணாத நாட்களாகக் கடைப்பிடிப்பது நன்று. தவிர்க்க முடியாததாயின் அதற்கு விதிவிலக்குண்டு. இருந்தபோதிலும் வெள்ளிக்கிழமை ஆண்டவரின் இறப்பை நினைவுபடுத்தும் நாளாக இருப்பதனால் மாமிசம் உண்பதை அந்நாட்களில் தவிர்ப்பது ஏற்றதாகும்.
உண்ணா நோன்பு, மாமிசத் தவிர்ப்பு நாட்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

5. கத்தோலிக்க திருச்சபையின் சட்டக்கோவையின்படி 16 வயதுடைய ஆணும் 14 வயதுடைய பெண்ணும் திருமணம் எனும் திருவருட்சாதனத்தைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுடையவர்கள். நமது நாட்டுச் சட்டப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் 18 வயது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்குக் குறைவான வயது திருமணத்திற்கு ஏற்றதல்ல என நாட்டுச்சட்டம் கூறுகின்றது. இதனையே இலங்கைத்திருச்சபையும் கடைப்பிடிக்கின்றது. திருமண ஒப்புதல் உறுதியானதாக இருக்க வேண்டும் என்றே இந்த ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அத்தோடு தந்தை – மகள், தாய் – மகன், சகோதரன் – சகோதரி உறவிசகோதரன் – சகோதரி உறவிலும் ஞானத்தாய் ஞானமகன் உறவிலும் திருமணம் முற்றாக தடைவிக்கப்பட்டுள்ளது. இதைவிட இரத்த உறவின் மூன்றாம் வரிசையிலும் திருச்சபையின் உத்தரவு திருமணத்தி;ற்கு கோரப்படுகின்றது. அதாவது இரத்த உறவின் மூன்றாம் வரிசையில் கூட திருச்சபையின் உத்தரவு திருமணத்திற்கு கோரப்படுகின்றது. அதாவது இரத்த உறவின் மூன்றாம் வரிசையில் கூட திருச்சபை திருமணங்களை ஊக்குவிப்பதில்லை என்பதே அதன் பொருள்.
குறைவான வயதிலும் தடைவிதக்கப்பட்ட உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.

6. திருச்சபையின் மேய்ப்புப்பணிக்கு இறைமக்களின் பொருள் உதவி அவசியத் தேவையாய் இருக்கின்றது. வருமானத்தின் பத்திலொரு பகுதி இறைவனுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற பழைய ஏற்பாட்டின் ஒழுங்கிலிருந்தே திருச்சபையின் மேய்ப்புப்பணக்கு இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற ஒழுங்கு வந்துள்ளது. திருச்சபை ஆன்மீக சமூகப்பணிகள் செய்ய மக்கள் அறிந்து செயற்பட வேண்டும்.
திருச்சபையின் மேய்ப்புப்பணிக்கு நம்மால் இயன்ற உதவி செய்தல் வேண்டும்.

கடன் திருநாட்கள்
1. இறைவனின் அன்னை கன்னி மரி விழா (தை 1ம் திகதி)
2. ஆண்டவரின் திக்காட்சி விழா (இயேசுவின் பிறப்பின் பின்வரும் ஞாயிறு)
3. ஆண்டவரின் பாஸ்கா விழா
4. ஆண்டவரின் விண்ணேற்பு விழா
5. புனித மரியாளின் விண்ணேற்பு விழா (ஆவணி 15ம் திகதி)
6. புனித மரியாளின் அமல உற்பவ விழா (மார்கழி 8ம் திகதி)
7. ஆண்டவரின் பிறப்பு விழா (மார்கழி 25ம் திகதி)
8. ஆண்டவரின் திருவுடல், திருஇரத்த விழா
உண்ணா நோன்பு நாட்கள்
1. திருநீற்றுப் புதன்
2. பெரிய வெள்ளி
மாமிசத் தவிர்ப்பு நாட்கள்
எல்லா வெள்ளிக்கிழமைகள்

12. காலைச் செபம்
“காலையும் மாலையும் கடவுளை வணங்கு” என்பது தமிழ் மரபு காலையில் கண் விழித்ததும் கடவுளிடம் எவ்வாறு செபிக்க வேண்டும் என்ற ஒரு உதாரண செபமே இது. இதைப் போன்று இறைவனோடு காலையில் பேசுகின்ற பழக்கம் குழநடதைப் பருவத்திலிருந்தே உருவாக வேண்டும் செபிக்கும் போது மூவொரு இறைவனை நோக்க0pயதாக செபம் அமைவதே நன்று. புனிதர்கள் தமது செபத்திற்கு துணை செய்வார்களாக.

என்னை அன்பு செய்யும் வானகத் தந்தையே!
உமது அன்பின் பொருட்டு எனக்கு இந்த நாளைத் தந்துள்ளீர் இன்று நான் சந்திக்கப்போகும் எல்லா மனிதர்களையும் உம்மிடம் ஒப்படைக்கின்றேன். இன்று எனக்கு நிகழ இருப்பவை அனைத்தும் உமது எண்ணப்படி நடக்கட்டும் நீர் எனக்கு தரப்போகம் அனைத்திற்கும் இப்பொழுதே நன்றி கூறுகின்றேன்.

அன்பான இயேசுவே உம்மைப் போன்று நானும் வானகத் தந்தையின் விருப்பப்படி வாழ எனக்கு உதவி செய்யும். அன்பான ஆவியானவரே இன்று நீர் என்னுள்ளத்தில் நல்ல எண்ணங்களை தூண்டிவிடும் போது அவற்றை நான் விழிப்புடன் அவதானித்து அன்புச் செயல்கள் செய்ய எனக்கு உதவி செய்யும், ஆமென்.

13. மாலைச் செபம்
மாலை செபத்தின் சிறப்புத் தன்மை நன்றி கூறுவதில் தங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ விடயங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். அனைத்துக்கும் நன்றி கூறும்போது மூவொரு இறைவனை மையம்கொண்டே இந்த நன்றிகள் இடம்பெற வேண்டும். இங்கே தரப்பட்ட மாலைச் செபமும் ஒரு மாதிரி மாலைச்செபமே. சுயமாகச் செபிக்கும் நிலை குழந்தைகளுக்கு இயல்பாக உருவாக வேண்டும் என்றே இவ்வாறான செபம் அறிமுகம் செய்யப்படுகின்றது.

என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே!
இந்த நாளின் முடிவில் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
நீர் என்னோடு இருந்ததை நான் உணர்ந்தேன்.
நான் உம்மை நினையாத போதும் நீர் என்னை நினைத்தீர்
இப்போது உமக்கு மீண்டும் நன்றி கூறுகின்றேன்.

என்னுடைய அம்மாவிற்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய அப்பாவுக்கா நன்றி கூறுகின்றேன. என்னுடைய சகோதரர்களுக்காக, என்னுடைய நண்பர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னை நேசிக்கின்ற அன்பான இயேசுவே! நான் நித்திரை செய்யும் போது என்னோடு இரும். எனக்கு நல்ல ஓய்வைத் தந்து என்னை இந்த இரவில் பாதுகாரும். என்னை நேசிக்கும் பரிசுத்த ஆவியானவரே! இந்த நாள் முழுவதும் நீர் எனக்கு தந்த நல்ல சிந்தனைக்கு நன்றி கூறுகின்றேன். இந்த இரவு முழுவுதும் நீர் என்னோடு இருந்து நாளைக் காலையில் என்னை உம் நினைவால் எழுப்பிவிடும். ஆமென்.

14. ஓ என் இயேசுவே
இந்தச் செபம் பாரம்பரியச் செபங்களில் ஒன்று. திருச்செபமாலையின் ஒவ்வொரு மறைநிகழ்ச்சியிலும் 10 அருள் நிறை மரியே என்ற செபம் சொல்லி முடிந்ததும் இச்செபம் சொல்லப்படுகின்றது. இச்செபத்தில் இயேசுவிடம் நான்கு வேண்டுதல்கள் கேட்கப்படு கின்றன. பாவங்களை மன்னிக்கவும், நித்திய நெருப்பிலிருந்து மீட்கவும், விண்ணகப்பாதையில் நடாத்திடவும், இறை இரக்கம் வேண்டியோருக்கு உதவிடவும் இந்த மன்றாட்டுக்கள் இடம்பெறுகின்றன.

ஓ என் இயேசுவே,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரகநெருப்பில் நின்று இரட்சித்தருளும். சகல ஆன்மாக்களையும் பரலோக பாதையில் வழிநடத்தி யருளும். எமது இரக்கம் அதிகமாக வேண்டியவர்களுக்கு விசேஷ உதவி செய்தருளும்.

15. சமாதானத்திற்காகச் செபம்
புனித பிரான்சீஸ் அசீசியார் இந்தச் செபத்தை தன் சொந்தச் செபமாக ஆக்கியிருந்தார். இந்தச் செபத்தின் பொருட்செறிவைக் கண்ட பிரான்சிஸ்கன் சபையினர் இச்செபத்தை தம் சபையின் செபமாக்கிக் கொண்டனர். அவர்கள் வேதபோதகப் பணிக்கெனச் சென்ற இடமெல்லாம் இறைமக்களுக்கு இச்செபத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இச்செபத்தில் இரு பகுதிகள் உண்டு. முதல் பகுதியில் சமாதானத்தின் கருவியாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை செப உருவில் இறைவனிடம் கேட்பதாய் அமைகின்றது. இரண்டாம் பகுதியில் ஒருவர் சமாதாத்துக்காகச் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை வரிசைப்படுத்தி இறைவனிடம் வரம் வேண்டப்படுகின்றது. இது ஒவ்வொரு நாளும் வாழ்வாக்கப்பட வேண்டிய செபமாகும்.

ஆண்டவரே!
என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும். வெறுப்புள்ள இடத்தில் அன்பையும் மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும் ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும் அவநம்பிக்கை உள்ள இடத்தில் நம்பிக்கையையும் இருள் உள்ள இடத்தில் ஒளியையும் துன்பம் உள்ள இடத்தில் இன்பத்தையும் நான் விதைத்திட அருள் தாரும்.

நான் ஆறுதல் தேடுவதைவிட ஆறுதல் அளிக்கவும் பிறரால் புரிந்துகொள்ளப்படுவதை விட பிறரை புரிந்து கொள்ளவும் அன்பு செய்யப்படுவதை விட அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும் ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிப்பதன் மூலம்தான் மன்னிப்படைய முடியும். மடிவதன் மூலம்தான் முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்க முடியும். ஆமென்.

புனித பிரான்சிஸ் அசீசியார்

16. பரிபூரண பலனுள்ள செபம்
இந்தச் செபம் திருச்சிலுவையின் முன்நின்று செபிக்கப் படவேண்டிய செபமாகும். இச்செபம் இயேசு சிலுவை யில் பட்ட தேவனையைக் குறித்துக் காட்டுவதோடு, அவர் மட்டில் உறுதியான விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற புண்ணியங்களை உருவாக்குகின்றது. மேலும் அவரது பாடுகளுக்கு என் பாவங்களே காரணம் என்பதை குறித்துக்காட்டி உண்மையான மனஸ்தாபத்தையும் மனந்திரும்புதலையும் இரந்து வேண்டிக்கொள்வதாய் இச்செபம் அமைகின்றது.

மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே!
அடியேன் தேவரீருடைய சமூகத்தில் முழந்தாளி லிருந்து சாஸ்டாங்கமாக விழுந்து “என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளை எல்லாம் எண்ணினார்கள்” என்று தேவரீரைப் பற்றி முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின் வாக்கியமாக வசனித்ததை என் கண்முன்பாகக் கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையு; மிகுந்த மனவுருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில் திடமான விசுவாசம் நம்பிக்கை இறையன்பு என்ற புண்ணியங்களையும் என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தiயும் அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனை யையும் என் இதயத்தில் பதியச் செய்தருள வேண்டு மென்று என் நல்ல இயேசுவே தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி பிராத்திக்கின்றேன் சுவாமி ஆமென்.

17. அதிதூதரான மிக்கேல் செபம்
அதிதூதரான மிக்கேல் லூசிபேர் என்ற சாத்தானின் தலைவனுக்கு எதிராகப் போர்தொடுத்து வெற்றி கண்டவர். இறைவனுக்கு அசையமாட்டோம் என்று அகங்காரம் பிடித்த பேய், மனிதராகிய எம்மையும் குழப்பி இறைவனுக்கு பணியக்கூடாது என்று கங்கணம் கட்டித் திரிகின்றது.சாத்தானின் கண்ணியிலே சிக்குண்டு இறைவனை விட்டுப்பிரியாதிருக்கவே மிக்கேல் அதிதூதரை நாம் அழைக்கின்றோம். மிக்கேல் தூதரை நோக்கி இச்செபத்தை அடிக்கடி சொல்லுவதனால் சாத்தான் நம்மை அண்டிவராது என்பது உண்மை.

அதிதூதரான புனித மிக்கேலே!
யுத்தநாளில் எங்களைக் தற்காரும் பசாசின் துஷ்டத்தனத்திலும், கண்ணிகளிலும் நின்று எங்களைக் காத்தருளும். இறைவன் அதைக் கடிந்துகொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகிறோம். வானுலக சேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீரும், ஆன்மாக்களை நாசஞ்செய்யும்படி உலகெங்கும் சுற்றித்திரியும் சாத்தானையும், மற்றும் பசாசுக்களையும் தேவ வல்லமையைக் கொண்டு நரக பாதாளத்திலே தள்ளிவிடும், ஆமென்.

18. கிருபை தயாபரத்துச் செபம்
இது மரியாளின் பரிந்துரைக்கான பாரம்பரியச் செபங்களில் ஒன்றாகும். இச்செபத்தின் முதல்பகுதி மரியாளை வாழ்த்துவதாய் அமைகின்றது. இரண்டாவது பகுதி செபிப்பவர்களுடைய அவலநிலையை எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாவது பகுதியிலே மரியாளின் இரக்கம் வேண்டப்படுகின்றது. அத்தோடு மரணத்தின் பிற்பாடு இயேசுவை முகமுகமாய்க் காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது.

கிருபை தயாபரத்தக்கு மாதாவாயிருக்கின்ற எங்கள் இராக்கினியே வாழ்க!
எங்கள் சீவியமே மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க!
பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மை பார்த்து கூப்பிடுகிக்றோம். இந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம்.

ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே உம்முடைய தயாளமுள்ள திரு இரக்க கண்களை எங்கள் பேரில் திரப்பியருளும் இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியான இயேசுநாதருடைய பிரத்தியச்சமான தரிசனத்தையும் எங்களுக்கு பெற்றுத் தந்தருளும்.

கிருபாகரியே தயாபரியே பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்கத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

19. மிகவும் இரக்கமுள்ள தாயே
தேவமாதாவை நோக்கி புனித பேனாட் இயற்றிய செபம் இது. மரியாளிடம் சென்றால் கைவிடப்பட மாட்டார்கள் என்ற அசையாத நம்பிக்கை இச்செபத்தின் துலாம் பரமாகத் தெரிகின்றது.

மிகவும் இரக்கமுள்ள தாயே!
இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக் களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோது; கேள்விப்பட்தில்லை கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, தயவுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்ட உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகின்றோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கக் காத்துக்கொண்டு உமது சமூகத்தில் நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே, எங்கள் மன்றாட்டைப் புறக்கணிக்காமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே ஆமென்.
(-புனித பேணாட்-)

 

20. திருச்செபமாலைத் தியானம்
திருச்செபமாலைத் தியானம் கத்தோலிக்கத் திருச்சபை யின் மிகப்பழமை வாய்ந்த ஒர் சிறப்பான பக்தி முயற்சி யாகும். இது கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளை மையப்படுத்தி மரியாவுடன் அவற்றை இணைத்துத் தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திருச்செபமாலைத் தியானம் ஐந்து மகிழ்ச்சி நிறை மறைநிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு மறைநிகழ்ச்சித் தியானமும் கிறிஸ்துவின் வாழ்வில் இடம்பெற்ற ஓர் அருள் நிகழ்வைக் குறித்து நிற்கின்றது. முதல் ஐந்து மகிழ்ச்திதரும் மறைநிகழ்ச்சிகளில் கிறிஸ் துவின் பிறப்பும், பாலப்பருவமும் பற்றிய நிகழ்வுகள் தியானிக்கப்படுகின்றன. ஐந்து துக்கம் தரும் மறை நிகழ்ச்சிகளில் கிறிஸ்துவின் பகிரங்க வாழ்வின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் தியானிக்கப்படுகின்றன. ஐந்து மகிமைதரும் மறைநிகழ்ச்சிகளில் கிறிஸ்துவும் மரியாவும் நிலைவாழ்வில் மகிமைபெறும் நிகழ்வுகள் தியானிக்கப்படுகின்றன. ஐந்து ஒளியின் மறை நிகழ்ச்சிகளில் இயேசுவின் பகிரங்க வாழ்வின் நிகழ்வு கள் தியானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மறை நிகழ்ச்சித் தியானமும் 1 பர ….. 10 அருள் ….. திரி செபங்களையம் “ஓ என் இயேசுவே” என்ற செபத்தையும் கொண்டுள்ளது. இருபது மறைநிகழ்ச்சிகளையம் தொடர்ச்சியாகத் தியானிக்கும் பொது அது முழுச் செபமாலைத் தியானமாக அமைகின்றது.

ஆரம்பச் செபம்
எங்கள் அனைவருக்கும் தாயாக விளங்கும் புனித மரியே, உமக்கு மிகவும் பிரியமான திருச்செபமாலைத் தியானர்ih இப்போது ஆரம்பிக்கின்றோம். உமது திருமகனின் மறை உண்மைகளைச் சிந்தித்தத் தியானிக்க எங்களுக்கு உதவி செய்யும்.
01. மகிழ்ச்சி தரும் மறைநிகழ்ச்சிகள்
• முதலாவது மறைநிகழ்ச்சி
கபிரியேல் என்ற இறைவனின் தூதர் மரியாவின் வீட்டு க்கு வந்து அவர் இயேசுவின் தாயாகப் போகிறார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்தார். நாமும் மரியாவைப் போன்று உள்ளத்தி.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”ல் தாழ்ச்சியுள்ள வர்களாய் இருப்பதற்கு வரம் வேண்டுவோம்

• இரண்டாம் மறைநிகழ்ச்சி
எலிசபெத்து கருத்தாங்கி ஆறு மாதம் ஆனது என்ற செய்தி கேட்ட மரியா, முதிர்ந்த வயதிலுள்ள அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று சக்கரியாவின் வீட்டுக்கு விரைந்து சென்றார்.
நாமும் மரியாவைப் போன்று மற்றவர்களுக்கு உதவிசெய்யும் மனத்தோடு வாழ வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• மூன்றாம் மறைநிகழ்ச்சி
யெருசலேம் நகர் மக்கள் வெள்ளத்தால் வழிந்தது. அங்கு பேறுகால மரியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. சூசை மரியாவைப் பெத்தலேகெமுக்கு கூட்டிச்சென்றார். அங்கே மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிறந்தார்.
நாமும் இயேசு பாலனைப்போன்று எளிமையையும் ஏழ்மையையும் நேசிக்க வரம் வேண்டுமோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• நான்காம் மறைநிகழ்ச்சி
மரியாவும் சூசையும் பாலனைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குப் போனார்கள். சிமியோன் என்ற வயது முதிர்ந்த குருவானவர் பாலனைக் கையில் ஏந்தி அவரை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.
நாமும் அந்தச் சிமியோன் செய்வதைப்போன்று எம்மையே இறைவனுக்கு கொடுத்து வாழ வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• ஐந்தாம் மறைநிகழ்ச்சி
மரியாவும், சூசையும், சிறுவன் இயேசுவும் கோவிலுக்குப் போனார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது இயேசுவைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவரை மீண்டும் ஆலயத்தில் கண்டார்கள்.
நாமும் மரியாவையும் சூசையையும் போன்று இயேசுவை விட்டுப்பிரியாதிருக்க வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

02. துக்கம் தரும் மறைநிகழ்ச்சி
• முதலாவது மறைநிகழ்ச்சி
இறுதி இராவுணவு முடிந்தபின் இயேசு சீடரோடு தோட்டத்திற்குப் போனார். அங்கே அவர் செபித்துக்கொண்டிருந்தபோது அவரது இரத்தம் வியர்வையாக வெளிவந்தது.
நாமும் துன்பப்படும் இயேசுவைப் போன்று துன்பத்தில் கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• இரண்டாம் மறைநிகழ்ச்சி
யூதர் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அவரது கரங்களைத் தூனோடு கட்;டினார்கள். எல்லோரும் அவரை அடித்தார்கள். அவருக்கு உடலில் பல காயங்கள் ஏற்பட்டன.
நாமும் துன்பப்படும் இயேசுவைப் போன்று பொறுமையை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• மூன்றாம் மறைநிகழ்ச்சி
அடி காயங்களுள்ளான இயேசுவுக்கு போர்வீரர்கள் சிவப்பு ஆடையை உடுத்தினார்கள். செங்கோலாக மூங்கில் தடியைக் கொடுத்தார்கள். முட்களால் முடிபின்னி தலையில் இறுக்கினார்கள்.
நாமும் துன்புறும் இயேசுவைப் போன்று, துன்பங்களைத் தாங்கும் சக்திபெற வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• நான்காம் மறைநிகழ்ச்சி
இயேசுவின் தோள்மேல் பாரமான சிலுவையை யூதர்களும் போர்வீரர்களும் வைத்தார்கள். கல்வபரி மலையின் உச்சிக்கு ஏறிப்போகும்படி அவர்கள் அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
நாமும் சிலுவை தாங்கிச் செல்லும் இயேசுவைப்போல் வாழ்வின் துன்பங்களைப் பொறுமையோடு தாங்க வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• ஐந்தாம் மறைநிகழ்ச்சி
இயேசு சிலுவையோடு மலை உச்சிக்கு வந்தார். அவரை அதில் கிடத்தி ஆணிகளால் அறைந்தார்கள். சிலுவையை உயர்த்தி நட்டார்கள். மரண வேதனையின் பின் இயேசு உயிர் நீத்தார்.
நாமும் பலியான இயேசுவைப்போன்று துன்பத்தில் கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

 

03. மகிமைதரும் மறைநிகழ்ச்சி
• முதலாவது மறைநிகழ்ச்சி
இயேசுவின் மரணித்த திருவுடலை கல்லறை ஒன்றில் வைத்தார்கள். மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். சீடருக்கும் தம் தாய்க்கும் அவர் காட்சி கொடுத்தார்.
நாமும் உயிர்த்த இயேசுவைப்போன்று புதுவாழ்வின் தோற்றம் பெற வரம் வேண்டுவோம்.

1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• இரண்டாம் மறைநிகழ்ச்சி
இயேசு தம் சீடரோடு ஒரு மலைக்குச் சென்றார். அவர்களோடு பேசி, அவர்களை ஆசீர்வதித்தபின் அவர்களிடம் இருந்து புறப்பட்டு விண்ணுலகம் சென்றார்.
நாமும் விண்ணகம் சென்ற இயேசுவைப் போன்று வானகத்தந்தையிடம் செல்லும் விருப்பம் பெற வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• மூன்றாம் மறைநிகழ்ச்சி
சீடரும் மரியாவும் மாடி வீட்டில் இருந்தார்கள். பெருங்காற்று வீசியது. நெருப்புச் சுவாலைகள் தோன்றின. பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.
நாமும் அதெ ஆவியானவரால் ஒவ்வொரு நாளும் ஆட்கொள்ளப்பட வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• நான்காம் மறைநிகழ்ச்சி
மரியாவின் இவ்வுலக வாழ்வு முடிவுற்றது. தன் மகனிடம் போக வேண்டிய காலம் வந்தது. அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
நாமும் விண்ணகம் சென்ற மரியாவைப்போன்று இயேசுவோடு ஒன்றித்து வாழ வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• ஐந்தாம் மறைநிகழ்ச்சி
மரியா மாசில்லாமல் பிறந்தார். அவர் இயேசுவின் தாயானார். அவர் திருச்சபைக்குத் தாயாக இருக்கின்றார் இதனால் அவர் விண்ணகத்தில் அரசியாக முடிசூட்டப்பட்டார்.
நாமும் மகிமை அடைந்த மரியாவைப்போன்ற விண்ணுக்குரியவர்களாய் வாழவும் அதன் பலனால் விண்ணரசன் மகிமை அடையவும் வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

 

04. ஒளிதரும் மறநிகழ்ச்சி
• முதலாவது மறைநிகழ்ச்சி
இயேசு தனது மறைந்த வாழ்வைத் துறந்து பகிரங்க வாழ்விற்குப் பயணிக்கிறார். யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானால் திருமுழுக்குப் பெற்று விண்ணகத்தந்தையினால் இவர் என் அன்பார்ந்த மகன் என வெளிப்படுத்தப்படுகின்றார்.
நாம் திருமுழுக்குப் பெற்ற போது இறைவன் எம்மையும் தன் அன்பார்ந்த மகனாக ஃ மகளாக ஏற்றுக்கொண்டார். எனவே அவருக்கு உகந்தவர்களாய் வாழ வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• இரண்டாம் மறைநிகழ்ச்சி
இயேசு காணாவூர்த் திருமணத்தில் அன்னை மரியாளின் பரிந்துரையால் தண்ணீரை இரசமாக்கி மணமக்களை மகிழ்வித்தார்.
நாமும் எம் வாழ்வில் தீந்துபோகும் இறை இயல்புகளான அன்பு, மன்னிப்பு என்பவற்றை மாதாவின் பரிந்து பேசுதல் மூலம் பெற்று வாழ வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• மூன்றாம் மறைநிகழ்ச்சி
இயேசு தனது பகிரங்க வாழ்வின் தொடக்கத்தில் முதன் முதலாகக் கூறியது. “இறையாட்சி நெருங்கிவிட்டது மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதாகும்.
நாமும் இறையரசில் நுழைய நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிடாது நாளாந்தம் மனம்திரும்ப, குறிப்பாக ஒப்புரவு அருட்சாதனத்தைத் தகுந்த முறையில் பெற்று வாழ வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• நான்காம் மறைநிகழ்ச்சி
இயேசு தபோர் மலையில் சீடர்களின் முன் மறுரூபமானார். தனது சிறுமை நிறைந்த சிலுவைச் சாவால் சீடர்கள் மனம் சோர்ந்து போகக்கூடாது எனத் தம் தெய்வீக மகத்துவத்தை காட்டத்திருவுள்ளமானார்.
நாமும் எம் இறுதி நாட்களில் இத்தகைய மகத்துவம் மிக்க உருமாற்றம் பெற விசுவாச வாழ்வில் நிலைத்து இயேசுவின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

• ஐந்தாம் மறைநிகழ்ச்சி
இயேசு தனது நிளைவாக நற்கருணையை ஏற்படுத்தி, அதை நிறைவேற்றக் குருத்துவத்தையும், திருப்பலியின் மூலம் அதனைப் பெற்று மகிழச் செய்தார்.
நாமும் திருப்பலியில் பங்கெடுத்து தகுந்த நிலையில் நற்கருணையை உட்கொண்டு, திருப்பலியை நிறைவேற்றும் அனைத்துக் குருக்களையும் எம்மையும் இறைவன் ஆசீர்வதிக்க வரம் வேண்டுவோம்.
1 பர ….. 10 அருள் ….. திரி, “ஓ என் இயேசுவே”

முடிவுச் செபம் (காணிக்கைச் செபம்.)
அந்தியந்த மகிமையுள்ள பரலோக பூலோக அரசியான பரிசுத்த தேவமாதாவே! உம்முடைய திருப்பாதத்தை நாங்கள் வணங்கி இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றோம் இதை நீர் கை ஏற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறைநிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் நற்போதனையின்படி நடந்து இவ்வுலகில் சகல விக்கினங்களுக்கும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்முடனே உம்முடைய திருக்குமாரனுடைய Nhட்ச முகதரிசனத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே ஆமென்.

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.

பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக. உம்மைப்புகழ்கின்றோம், உம்மை வாழ்த்துகின்றோம், உம்மை ஆராதிக்கிறோம், உம்மை மகிமைப்படுத்துகின்றோம், உமது மேலான மாட்சிமையின் பொருட்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா, வானுலக அரசே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா, ஏக சுதனாய் nஐயனித்த ஆண்டவரே, இயேசுக் கிறிஸ்துவே. ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் இயேசுக் கிறிஸ்துவே, நீர் ஒருவரே பரிசுத்தர், நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர், பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

 

21. திருச்சிலுவைத் தியானம்
தபசு காலத்தில் திருச்சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியை அடிக்கடி செய்வார்கள். குழந்தைகளும் தமக்கும் ஏற்ற விதத்தில் இலகுவாய் இப்பக்திமுயற்சியை செய்யக்கூடியதாக இத்திருச்சிலுவைத் தியான நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பச் செபம்
எங்களை அன்பு செய்யும் இயேசுவே! முன்னொரு நாள் நீர் நடந்து வந்த சிலுவைப்பாதையின் நிகழ்வுகளை நாங்கள் இப்பொது தியானிக்க உமக்கு முன்பாக இருக்கின்றோம். உம்முடைய பாடுகளைத் தியானித்து நீர் எங்களுக்குப் பெற்றுத்தந்த எல்லாப் பலன்களையும் எங்களுடையதாக்கி, இன்று நாங்கள் எங்களையே புதுப்பித்துக்கொள்ள உதவி செய்யும்.
அன்பான தாயே! உம்முடைய நேசமுள்ள மகனோடு நீர் சிலுவையின் பாதையில் அன்று நடந்து சென்றீர். இப்போது திருச்சிலுவைத் தியானத்தில் எங்களோடு இருந்து இப்பக்தி முயற்சியை ஆர்வத்தோடு நிறைவு செய்ய உதவிசெய்யும்.

முதலாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.
எல் : அதைனென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி.

இயேசு மரணத்திற்குத் தீர்வையிடப்படுகின்றார்

அன்பான இயேசுவே! யூதசங்கத்தார் உமக்கு மரணதண்டனை விதித்தார்கள். பிலாத்துவும் அதற்கு ஒத்துக்கொண்டான். அது உமக்கு மிகவும் வேதனையாயிருந்தது.
நாங்கள் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் வேதனை கொடுக்காதிருக்க எங்களுக்கு உதவி செய்யும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

இரண்டாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

இயேசுவின் மீது பாரமான சிலுவையைச் சுமத்துகின்றார்கள்.
அன்பான இயேசுவே! நீர் எங்களுக்காக பாரமான சிலுவையைத் தூக்கிக்கொண்டு கல்வாரி மலைக்கு களைப்போடு சென்றீர்.
நாங்கள் மற்றவர்களுக்குச் சுமைகளைக் கொடுக்காதிருக்க எங்களுக்கு உதவி செய்யும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய …………

முன்றாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

பாரமான சிலுவையோடு முதல்முறை இயேசு விழுகின்றார்.
அன்பான இயேசுவே! சிலுவையைச் சுமக்க முடியாமல் கரடுமுரடான பாதையில் கால்கள் தடுமாறி கீழே நீர் விழுந்துவிட்டீர்.
நாங்கள் எல்லோரும் பலவீனம் உள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள உதவிசெய்யும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய …………

நான்காம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

இயேசு சிலுவையின் பாதையில் தனது அம்மாவைச் சந்திக்கின்றார்.
அன்பான இயேசுவே! நீர்; சிலுவையோடு எழுந்து மலைமீது ஏறிப்போகும்போது உமது அம்மாவைச் சந்தித்தீர். அவருடைய அன்பைக் கண்டுபொண்டீர்.
நாங்களும் உம்மைப்போன்று அன்னை மரியாளின் தாய்க்குரிய அன்பை நாள்தோறும் சுவைக்க அருள்தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய …………

ஐந்தம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

சிலுவையைத் தூக்க சீமோன் வற்புறுத்தப்படுகின்றார்.
அன்பான இயேசுவே! அறிமுகம் இல்லாத சீமோனை சிலுவையின் பாதையில் சந்தித்தீர். யூதர் அவரைக் கட்டாயப்படுத்த அவரும் உமக்கு உதவி செய்தார்.
நாங்களும் சீமோனைப் போன்று உதவி செய்யும் மனநிலையில் வாழ எங்களுக்கு அருள் தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய …………

ஆறாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

இயேசுவின் திருமுகத்தை வெரோணிக்கா துடைக்கிறாள்
அன்பான இNசுவே! வெரோணிக்கா என்ற பெண் உமது வேதனையைக் கண்டு, உமது திருமுகத்தைத் துடைத்தாள். நீரோ அத்துணியிலே உமது திருமுகத்தைப் பதியச் செய்தீர்;.
உம்மை என்றும் எமது மனங்களில் நிறுத்திக்கொள்ள அருள் தாரும்
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய …………

ஏழாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

இயேசு தட்டுத்தடுமாறி இரண்டாம் முறை விழுகின்றார்.
அன்பான இயேசுவே! நீர் இரண்டாவது தடவையாக சிலுவையோடு விழுந்த போது மிகவும் பலவீனப்பட்டிருந்தீர். மிகவும் சிரமப்பட்டே எழுந்தீர்.
நீர் மீண்டும் எழுந்ததைப்போன்று, நாங்களும் பாவத்திலிருந்து எழுந்திருக்க எழுந்திருக்க எங்களுக்கப் பலன் தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

எட்டாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

இயேசு அழுவோர் கூட்டத்திற்கு ஆறுதல் கூறுகின்றார்.
அன்பான இயேசுவே! உமது சிலுவையின் பாதையில் பெண்களையம், பிள்ளைகளையும் சந்தித்தீர். அவர்கள் உமக்காக அழுதார்கள். நீரோ அவர்களைத் தேற்றினீர்.

நாங்களும் எங்கள் குற்றங்களுக்காகத் துக்கப்பட்டு மனந்திரும்ப உமது அருளைத் தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

ஒன்பதாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய
இயேசு சிலுவையின் பாதையில் மூன்றாம் முறையும் விழுகின்றார்.
இன்பான இயேசுவே! நீர் மூன்றாவது முறையாக சிலுவையின் கீழ் விழுந்த போது உம்மால் எழும்பவே முடியவில்லை. மற்றவர்கள் உம்மைத் த}க்கிவிட்டார்கள்.
நாங்களும் எங்கள் பாவத்திலிருந்து எழும்ப முடியாதபோது நீர் எங்களைத் தூக்கிவிடும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

 

பத்தாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய
இயேசுவின் ஆடைகள் உரியப்பட, அவர் அவமானப்படுகின்றார்.
அன்பான இயேசுவே! நீர் மலையுச்சியை அடைந்தபோது உமது ஆடைகள் உரியப்பட்டன. அப்போது நீர் பெரிதும் அவமானப்பட்டீர். கொலைக்காரர் உம்மைப் பார்த்துச் சிரித்தார்கள்.
இன்னும் எம்மத்தியில் மானபங்கப்படுவோருக்காக அனுதாபபப்படவும், அவர்கள் வேதனையைக் குறைக்கவும் எமக்கு அருள் தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

பதினோராம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய
இயேசு ஆணிகளால் சிலுவையில் அறையப்படுகின்றார்.
அன்பான இயேசுவே! உமது கைகளையும், கால்களையும் ஆணிகளால் சிலுவையில் அறைந்தபோது அளவில்லாத வேதனை அனுபவித்தீர். அந்த வேதனையிலும் பொறுமையாயிந்தீர். நாங்கள் உம்மைப்போன்று துன்ப வேளையில் பொறுமையைக் கடைப்பிடிக்க எங்களுக்கு உதவி செய்யும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

 

பன்னிரெண்டாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய
இயேசு சிலுவையில் உயிர் விடுகின்றார்.
அன்பான இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் மூன்று மணிநேரம் தொங்கி, உமது உயிரைத் தந்தையிடம் கொடுத்தீர், உமது சாவ ஒர் படுகொலை.
நாங்கள் இன, மத, பேதமின்றி மற்றோர் உயிரை மதிக்கவும், பேணிக்காக்கவும் அருள் தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி. (சற்று நேரம் அமைதியாக மன்றாடுவோம்.)

ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….
பதின்மூன்றாம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய
உயிர் நீத்த இயேசுவின் உடல் மாதா மடியில் வளர்த்தப்படுகின்றது.
அன்பான இயேசுவே! உமது திருவுடலை சிலுவையிலிருந்து சூசையும், நிக்கோதேமுவும் இஙக்கினார்கள். அதை மிக்க மரியாதையோடு மாதாவின் மடியிலே வைத்தார்கள்.
துக்கம் நிறைந்த தாயோடு இணைந்து நாங்களும் தம் உற்றார் உறவினரை இழந்து தவிக்கின்ற மக்களின் துயரில் பங்குகொள்ள அருள் தாரும்.
1பர…., 1 அருள்….., 1 திரி.
ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

 

 

 

பதினான்காம் நிலை
ஒரு : திவ்விய இயேசுவே
எல் : அதைனென்றால் உம்முடைய

இயேசுவின் திருவுடல் கல்லறைக்குள் அடக்கம் செய்யப்படுகின்றது.
அன்பான இயேசுவே! உமது திருவுடல் துணிகளால் பொதிந்து அடக்கம் செய்யப்பட்டது. அவ்வேளையில் ஒருசிலரே உமது அடக்கச் சடங்கில் கலந்து கொண்டனர்.
உம்மை நம்பி இறப்போருக்கு நிலையான வாழ்வு கொடுக்க உம்மை அன்போடு வேண்டுகின்றோம்.
1பர…., 1 அருள்….., 1 திரி.
ஒரு : எங்கள் பேரில் தயாவியிரும் சுவாமி
எல் : எங்கள் பேரில் தயாவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய……….

முடிவுச் செபம்
எங்களை அன்பு செய்யும் இயேசுவே!
முன்னொரு நாள் உமக்கு நடந்த சிலுவைப் பாதையின் நிகழ்வுகளை நாங்கள் இப்போது தியானித்தோம். நீர் எங்களோடு இருந்ததை உணர்ந்தோம். உம்முடைய பாடுகள் மரணத்தின் பலன்களை எல்லா மக்களுக்கம் ஏராளமாய்த் தந்து, உயிர்ப்பு வாழ்வுக்கு கூட்டிச்செல்ல உமது துணையை வேண்டுகின்றோம்.

அன்பான தாயே! அம்மா! உம்முடைய மகனோடு நீர் சிலுவையின் வேதனையை அனுபவித்தீர். எங்களுடைய வாழ்விலும் சுமையான சிலுவைகள் அழுத்தம் தரும்போது அன்போடு துணைசெய்ய எழுந்து வாரும். ஆமென்.

ஐஏ. திருப்பலிச் செபங்கள்.
திருப்பலி எமது வாழ்வின் ஊற்று. அதுவே கிறிஸ்தவர்களின் வாழ்வின் மையமாக அமைய வேண்டும். நாம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தி முயற்சிகளும் எம்மைத் திருப்பலியின்பால் ஈர்க்க வேண்டும். திருப்பலி எம் மீட்பராம் கிறிஸ்துவுடன் இணைந்து நமது பரமதந்தைக்கு நன்றி சொல்வதாகவும் அமைகின்றது.

எல்லோரையும் ஆசீர்வதித்தல்
குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல் : ஆமென்.

வாழ்த்துதல்
குரு : நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக,
எல் : உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வேண்டுதல்
குரு : சகோதர! சகோதரிகளே! திருப்பலி ஒப்புக்கொடுக்க நாம்தகுதிபெறும் பொருட்டு, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதரர் சகோதரிகளே உங்களிடமும், நான் பாவியென்று ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில், என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன். என் பாவமே! என் பாவமே! என்பெரும் பாவமே! ஆகையால் எப்போதும் கன்னியான தூய மரியாளையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதரர், சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லாத வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல் : ஆமென்.

குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்

குரு : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்

குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.

 

 

 

இறைவனைப் புகழ்ந்து பாடுதல்

குரு : உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.

எல் : பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக.
உம்மைப்புகழ்கின்றோம், உம்மை வாழ்த்துகின்றோம்,
உம்மை ஆராதிக்கிறோம், உம்மை மகிமைப்படுத்துகின்றோம்,
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு,
உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா,
வானுலக அரசே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா,
ஏக சுதனாய் nஐயனித்த ஆண்டவரே, இயேசுக் கிறிஸ்துவே. ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் இயேசுக் கிறிஸ்துவே,
நீர் ஒருவரே பரிசுத்தர், நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர், பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

 

சபையோர் சார்பாக குரு மன்றாடுதல்
குரு : செபிப்போமாக ……………
எல் : ஆமென்

இறைவன் நம்மோடு பேசுதல்
வாசகர் : (முதலாம் வாசகம் முடிவில்) இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
எல் : இறiவா உமக்கு நன்றி

 

நற்செய்தி
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம்மோடும் இருப்பாராக.
குரு : (பெயர்) எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.
எல் : ஆண்டவரே உமக்கு மகிமை
(நற்செய்தி வாசித்தல்) நற்செய்தி முடிவில்
குரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி.
எல் : கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசத்தை அறிக்கையிடுதல்
குரு : ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
எல் : வானமும் பூமியும், காண்பவை, காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே, சர்வேசுரனின் ஏக சுதனாய்ச் செனித்த ஒரே ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவையும், விசுவசிக்கின்றேன். இவர் யுகங்களுக்கெல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர். உண்டாக்கப்ட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவம் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காகப் போஞ்சியோ பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வருகின்றார் அவரது அரசுக்கு முடிவிராது.
பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும், உயிரளிப்பவருமான, பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன். இவர் பிதாவோடும், சுதனொடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறுகின்றார். தீர்க்கதரிசிகள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையையும் விசுவசிக்கின்றேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்தானத்தையும், ஏற்றுக்கொள்ளுகின்றேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கு மறுவுலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

அப்பத்தை பிரசன்னப்படுத்தல்
குரு : ஆண்டவரே! அனைத்துலகின் இறiவா உம்மை போற்றுகின்றோம். ஏனெனில், உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக் கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொக்கின்றோம். இது எ;களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.
எல் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!
இரசத்தைப் பிரசன்னப்படுத்துதல்.
குரு : ஆண்டவரே! அனைத்துலகின் இறiவா உம்மைப் போற்றுகின்றோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைப்பும் தந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்ம பானமாக மாறும்.
எல் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!
குரு : சகோதரரே! நாமனைவரும் ஒப்புக்கொடுக்கும் அத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்
எல் : ஆண்டவர், தமது திருப்பெயரின்புகழ்ச்சிக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கைகளிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
காணிக்கை மீது குரு மன்றாடுதல்
குரு : வானகத்தந்தையே…………………..
எல் : ஆமென்.
நற்கருணை மன்றாட்டு சிறுவருக்கானது.
குரு : ஆண்டவர் உம்மோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்
எல் : அது தகுதியும் நீதியும் ஆனதே
குரு : அன்புமிக்க எங்கள் தந்தையே, எங்கள் ஆணடவர் இயேசுக்கிறிஸ்துவோடு சேர்ந்து நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம், மனமகிழ்ந்து உம்மைப் போற்றுகின்றோம்.
எல் : எங்களை அன்பு செய்யும் தந்தையே, நாங்கள் உம்மை வாழ்த்துகின்றோம்.
குரு : நீர் எங்கள்மீது வைத்த அன்பு மிகப் பெரியது அதனால்தான் எங்களை உம்மிடம் அழைத்துவர உம் திருமகன் இயேசுவை எங்களுக்குத் தருகின்றீர்.
எல் : எங்களை அன்பு செய்யும் தந்தையே, நாங்கள் உம்மை வாழ்த்துகின்றோம்.
குரு : இன்று நீர் எங்களை அன்பு செய்கின்றீர், அதனால்தான் எங்களை உம்மிடம் அழைத்துவர உம் திருமகன் இயேசுவை எங்களுக்குத் தருகின்றீர்.
எல் : எங்களை அன்பு செய்யும் தந்தையே, நாங்கள் உம்மை வாழ்த்துகின்றோம்.
குரு : நீர் எங்களைத் தொடர்ந்து அன்பு செய்கின்றீர், ஆகவே எங்களைக் கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பமாக ஒன்றுசேர்க்கின்றீர்.
எல் : எங்களை அன்பு செய்யும் தந்தையே, நாங்கள் உம்மை வாழ்த்துகின்றோம்.
குரு : இத்தனை அன்புக் கொடைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றொம், உம்மைத் தாழ்ந்து பணிந்து வணங்கும் தூதர், புனிதர் அனைவரோடும் சேர்ந்து நாங்களும் உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்.
எல் : தூயவர், தூயவர், தூயவர் மூவுலகிறைவனாம் ஆண்டவர் வானமும் வையமும் யாவுனும் மாட்சிமையால் நிறைந்துள்ளன, உன்னதங்கிலே ஓசான்னா!
குரு : தந்தையே! நீர் அனுப்பிய இயேசு மெய்யாகவே ஆசி பெற்றவர், அவர் சிறுவர்கட்கும், ஏழைகட்கும் நண்பர். நாங்கள் உம்மை அன்பு செய்வது எப்படி என்றும், எங்களுக்குள் ஒருவர் ஒருவரை அன்பு செய்வது எப்படி என்றும், கற்றுத்தர அவர் உலகிற்கு வந்தார். அன்பு செய்யத் தடையான தீமையையும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு எதிரான பகை உணர்ச்சியையும், எங்கள் உள்ளத்திலிருந்து அகற்றிவிட, இயே சுவந்தார். நாங்கள் உமது உயிரைப் பெற்றுவாழ, தூய ஆவி என்றும் எங்களோடு இருப்பார் என இயேசு வாக்களித்தார்.
எல் : ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசிபெற்றவரே. உன்னதங்களிலே ஓசான்னா!
குரு : இறiவா! எங்கள் அன்பான தந்தையே, எங்கள் காணிக்கையான இந்த அப்பமும், இரசமும் எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தாகவும் மாறிட, உம்முடைய தூய ஆவியை அனுப்பியருள வேண்டுமென்ற உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் ஆண்டவர் இயேசு, தாம் பாடுபடுவதற்கு முந்தினநாள் அளவற்ற தம் அன்பைக் காட்டினார். எவ்வாறெனில், அவர் தம் சீடர்களோடு அமர்ந்து அராவுணவை உண்ணும்போது, அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி அதைப்பிட்டுத், தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது.
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ஏனெனில், இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
எல் : எங்களுக்காகக் கையளிக்கப்பட்ட இயேசுவே போற்றி!
குரு : அவர் திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அதைத் தம் சீடர்களுக்கு அளித்து கூறிதாவது.
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள். ஏனெனில் இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும், எல்லோருக்காகவும் சிந்தப்படும்.
எல் : எங்களுக்காகக் கையளிக்கப்பட்ட இயேசுNவு போற்றி!
குரு : பின்னர் இயேசு அவர்களிடம், “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். எங்கள் அன்புத் தந்தையே! உலக மீட்பராம் இயேசுவின் இறப்பையும், உயிர்ப்பையும் நாங்கள் நினைவுகூருகின்றோம், அவர் எங்கள் பலியாகுமாறு, தம்மையே எங்கள் கையில் தந்துள்ளார். இந்தப்பலி எங்களை உம்மோடு அன்புறவு கொள்ள செய்கின்றது.
எல் : எங்களை அன்பு செய்யும் தந்தையே, நாங்கள் உம்மை வாழ்த்துகின்றோம்.
குரு : அன்பான எங்கள் தந்தையே! நீர் எங்கள் எளிய வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, இத்திருவிருந்தில் பங்குகொள்ளும், எங்கள் அனைவருக்கம் உம்முடைய அன்பின் ஆவியைத் தந்தருளும், இவ்வாறு எங்கள் திருத்தந்தை …… எங்கள் ஆயர் ………, ஏனைய ஆயர்கள், உம் மக்களுக்குப் பணிபுரிவோர் அனைவரும், இறைமக்களாகிய நாங்களும், உமது திருச்சபையில் மேன்மேலும்ஒன்றித்திருக்கச் செய்தருளும்.
எல் : எங்கும் உமது மகிமை விளங்கிட எல்லோரும் ஒருடலாய் இருப்போம்.
குரு : எங்கள் அன்புக்குரியவர்களையும்…., நாங்கள் போதுமான அளவு அன்பு செய்தவர்களையும்….. நீர் மறந்து விடாதேயும். எங்களைவிட்டுப் பிரிந்து, அமைதியில் இளைப்பாறும் அனைவரையும் ……. நீர் நினைவுகூர்ந்து, உமது வான்வீட்டில் வரவேற்றருளும்.
எல் : எங்கும் உமது மகிமை விளங்கிட எல்லோரும் ஒருடலாய் இருப்போம்.
குரு : இறைவனின் அன்னையும், எங்கள் தாயமான, புனிதமிக்க கன்னிமரியாளோடு எங்களையும் ஒருநாள் உமது அரசில் ஒன்று சேர்த்தருளும், அங்கு ஆண்டவர் கிறிஸ்துவின் நண்பர்களாக நாங்கள் அனைவரும் முடிவில்லா விழாக் கொண்டாடி உம்மைப் புகழ்ந்து பாடுவோம்.
எல் : எங்கும் உமது மகிமை விளங்கிட எல்லோரும் ஒருடலாய் இருப்போம்.
குரு : அவர் வழியாக, இவரோடு இவரில் எல்லாம்வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும், மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியது.
எல் : ஆமென்.

ஆண்டவர் கற்பித்த செபம்
குரு : மீட்பராம் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைபடிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.
எல் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராட்சியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்பபடுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
குரு : ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலைபெற்று, யாதொரு கலக்கமுமின்றி, நலமாயிருப்போமாக. நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பihம் இயேசுக்கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
எல் : ஏனெனில் அரசம் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, “அமைதியையே உங்களுக்கு விட்டுச்செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்” என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, எங்களுக்கு அமைதியையும், ஒற்றுமையையும், அளித்தருள திருவுளம் கொள்வுPராக. என்றென்றும் வாழ்ந்து ஆ;சி செய்கின்றவர் நீரே.
எல் : ஆமென்
குரு : ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு என்றும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக
குரு : ஒவருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக்கொள்ளுவோம்.
எல் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் (2)
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

செம்மறியின் திருவிருந்து
குரு : இதோ இறைவனின் செம்மறி. இவரே உலகின் பாவங்களைப் போக்குகின்றவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.
எல் : ஆண்டவரே தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தருதியற்றவன் ஃ ள், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும். எனது ஆன்மா குணமடையம்.
ஆசீர் வழங்குதல்.
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.
குரு : சென்றுவாருங்கள் திருப்பலி முடிந்தது.
எல் : இறiவா உமக்கு நன்றி.