புனித பெரிய ஆல்பர்ட்

புனித பெரிய ஆல்பர்ட்

ஆயர், மறைவல்லுநர் – (கி.பி 1193 – 1280)

ஜெர்மனியில் டான்யூப் நதியோரத்தில் லவிங்கன் என்னும் இடத்தில் தோன்றினார். பதுவை  நகரிலும், பாரிசிலும் கலைகள் பல கற்றார். பிறகு தொமிக்கன் சபையில் சேர்ந்தார். அங்கு படிப்பு சற்றே கடினமாகத் தோன்றவே, ஒரு நாளிரவில் யாருக்கும் தெரியாமல் ஓடிவிட எண்ணினார். யாரும் பார்க்காத முறையில் சுவர் ஏறிக் குதிக்க முயன்றார். அப்போது மரியன்னையின் குரலைக் கேட்டார். “அல்பர்ட்! உனக்கு அனைத்து வரங்களையும் பெற்றுத் தர என்னால் இயலும் என்பது உனக்குத் தெரியாதா? உன் அறைக்குப்போ” என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் தன் அறைக்குச் சென்றார். அன்று முதல் படிப்பு அவருக்கு எனிமையாக இருந்தது மட்டுமன்று. முதல் மாணவராகவே தேர்ச்சி பெற்று வந்தார்.

இவர் பெதிகம், வேதியல், வான சாஸ்திரம், மினராலஜி தாவரஇயல், பயாலஜி முதலிய கலைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார் என்பதைவிட நமக்கு வியப்பை உண்டுபண்ண வேண்டியது, அரிஸ்டாட் டிலின் தத்துவ ஞானத்தையும், கிறிஸ்தவ வேதக்கலையையும், ஒருமுகப் படுத்தினார் என்பது மட்டுமே. அரிஸ்டாட்டி லின் தத்துவ ஞானத்தைக் கிறிஸ்தவ ஒளியில் காண்பித்து விட்டார் என்பதை இவரது மிகப்பெரிய சாதனை என்று கூறலாம். இவரது மாணவர் புனித தாமஸ் அக்வினாசின் போதனைகளும் எழுதியவைக ளும் தாக்குதலுக்கு உள்ளனபோது, அதுவும் பாரிஸ்நகர் ஆயர் ஸ்டீபன் இத்ற்குக் காரணமாயிருந்த சூழலில், பாரிஸ் விரைந்தார். ஆல்பர்ட், தாமஸ் அக்வினாசின் கருத்தக்கள் முற்றிலும் சரியானவையே என்று வெற்றிகரமாக வாதாடினார்.

பலகுருமடங்களிலும் திறம்படக் கற்றுத்தந்தார். ரீகன்ஸ்பர்க் நகரின் ஆயராக உயர்வு பெற்றபின், எங்கெல்லாம் ஒற்றமை சீர்குலைந்திருந்ததோ அங்கே யெல்லாம் அதனை நிலைநாட்ட அரும்பெரும் முயற்சி கள் செய்தார். பல அரிய பெரிய நூல்கள் எழுதியுள்ளார். பிரான்ஸ் நாட்டினரையும், ஜெர்மனி நாட்டினரையும் பொஹிமியா சிலுவைப் போருக்கத் தயாரித்தார்.

அரிஸ்டாட்டில் என்ற புகழ்வாய்ந்த தத்துவ ஞானி தந்த ஞானத்தைக் கிறிஸ்தவ நற்செய்தியின் ஒளியில் ஒளிரச் செய்த பெருமை இவருக்குரியது. இவருக்கு மறைவல் லுநர்  பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. மேலம் இவர்புனித அக்வீனால் தோமையாரின் ஆசிரியர். இவரது காலத்தில் மரியன்னையைப் புகழ்ந்து இவர் எழுதிய அளவுக்கு வேறுயாரும் அவ்வளவு விரிவாக எழுதவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *