தூய யோசேவாஸ் அடிகளார் நமது வாழ்வுக்குத் தரும் செய்தி

  • தூய யோசேவ் வாஸ் என்னும் நாமம் கொண்ட,  விடத்தல் தீவு தூய யோசேவ் வாஸ் மகாவித்தியாலத்தில் இன்று (10.11.2017) வெள்ளிக் கிழமை காலையில் தூய யோசேவாஸ் அடிகளார் நமது வாழ்வுக்குத் தரும் செய்தி என்னும் தலைப்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான  கருத்தமர்வு நடைபெற்றது.

மேலும் அறிய தூய யோசேவாஸ் அடிகளார் நமது வாழ்வுக்குத் தரும் செய்தி

புனித பெரிய லியோ

இவர் உரோமையில் பிறந்தவர். உயர்ந்த கல்வி கற்றுக் கொள்ளும் வசதி பெற்றிருந்தார். பாப்பு முதல் செலஸ்டின் காலத்தில் லியோவைத் தியாக்கோனாக முதன் முதலாகச் சந்திக்கின்றோம். புனித சிரில் இவரிடம் நேரடியாகக் கடிதத் தொடர்பு கொண்டிருந்த திலிருந்து, இவரது பெருமை புலனாகிறது. காசியன் என்பவர் நெஸ்டோரியசின் தப்பறையைக் கண்டித்து எழுதிய நூலை லியோவுக்கு அர்ப்பணம் செய்தார். பிரான்சில் ஈற்றியஸ், ஆல்பினுஸ் என்ற பெருந் தலைவர்களின் போராட்டத்தின் போது, அங்கு விரைந்து அவர்களிடம் அமைதியை உண்டுபண்ணச் சென்றிருந் தார். உரோமையில் லியோ இல்லாதபோது, திருச்சபை யின் தலைவராக லியோ தேர்ந்தெடுக்கப்ட்ட அவர் ஆற்றிய 96 மறையுரைகள் இன்றுவரை கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளன. இம்மறையுரைகளில் பகிர்ந்து வாழ்தல், கிறிஸ்தவ வாழ்வில் சமூக நிதி இவை பற்றி அழுத்தம் கொடுத்திருப்பது நம் கவனத்தை மிகவும் ஈர்க்க வேண்டும். கிறிஸ்துவின் மனிதாவதாரம் பற்றிய தௌ;ளத் தெளிவான போதனைகளும் இவற்றில் அடங்கும்.

கீழைத் திருச்சபையில் இவர் காலத்தில் இருந்த சீர்கேடு கள் இவருக்கு அறைகூவலாக அமைந்தன. கி.பி 448ல் யூட்டிக்கஸ் என்ற மடாதிபரிடமிருந்து வந்த மடலில் நெஸ்டோரியன் தப்பறை மீண்டும் தலைதூக்கி விட்டதைக் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கொன்ஸ்டா ன்டி நோபில் பிதாப்பிதா புனித ஃப்ளேவியன் என்பவர் யூட்டிகசைத் திருச்சபைக்கப் புறம்பாக்கிவிட்டார். மன்னர் தியோடோசியஸ் இதற்கு உடந்தையாகியிருந்தார். யூட்டிக்கஸ் கிறிஸ்துவிடமுள்ள 2 தம்மை களையும் ஏற்க மறுத்துவிட்டார். இது நெஸ்டோரியசின் தப்பறை க்கு நேர்மாறான தப்பi. எபேசு நகரில் கூடிய கூடிய “திருட்டுப் பேரவை” Rotten Synod புனித ஃபிளேவியனைக் குற்றப்படுத்தி, யூட்டிக்கசுக்கு நற்சான்று அளித்து விட்டது! ஈராண்டுகளுக்குப்பின், கால்சீடன் நகரில் கூட்டப்பட்ட பொதுச் சங்கத்தில் 600 ஆயர்கள் கலந்து கொண்ட போது புனித ஃபிளேவியன் குற்றமற்றவர் என மெய்ப்பிக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்றுக்கொண்ட ஆயர்கள் “சிங்கராயர் மூலம் பேதுரு பேசிவிட்டார்.” என்று தங்களின் ஒரு மனதான  ஒப்புதலைத் தெரிவித்தனர். அன்று கிறிஸ்து வில் உள்ள 2 தன்மைகளும் இவ்வாறு தெளிவுபடுத்தப் பட்டன. இன்றுவரை கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையாக இது இருந்து வருகிறது என்பது தெய்வச் செயலே.

அடுத்த அறைகூலவாக திருத்தந்தை லியோவுக்கு அமைந்தது அற்றிலாவின் தலைமையில் ஹ{னர்கள் உரோமை நகரை நோக்கிப் படையெடுத்தது. அதை ஒருவிதமாகச் சமாளித்ததற்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து ஜென்செரிக் உரோமையைச் சூறையாடி ஏராள மான விலையேற்றப்பற்ற பொருள்களைக் கொள்ளை யடித்துக் கொண்டு போய்விட்டான். இறைவனின் பேணுதலில் ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். லியோ என்பது இச்சூழலைச் சமாளித்த விதத்திலிருந்து தெளிவாகிறது. திருச்சபையை வழிநடத்திய 21 ஆண்டு காலத்தில் அனைவருடைய நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார்.

பொதுக்காலம் 31ம் வாரம் – வெள்ளி கிழமை

முதல் வாசகம்

கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21

என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்த வர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆயி னும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன்.

நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால்தான் அவ்வாறு எழுதினேன். அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப் பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.

ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக்கொள்ள இடமுண்டு.

பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடை யாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவு ளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற் றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணிய மாட்டேன்.

இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறி விக்கும் பணியை முடித்துவிட்டேன். கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது.

ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால், “தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்   திபா 98: 1. 2-3,. 3b-4

பல்லவி: பிற இனத்தார் கண் முன்னே ஆண்டவர் மீட்பை வெளிப்படுத்தினார்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார். பல்லவி

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி .1 யோவா 2: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்தை யைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மை யாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந் திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதி யுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.

தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ் வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டி ருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதி யோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட் டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதி யுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.