கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது  தேசிய மாநாடு இன்று மன்னார் மடுமாதா திருத்தலத்தில் எழுர்ச்சியோடு ஆரம்பமானது. இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும்  வருகைதந்திருந்த சிங்களம் மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர் இளம் பெண்கள் பலர் மடுத்தாயாரின் திருச் சந்தியிலிருந்து மாபெரும் செபமாலை அடையாளத்தைக் கையிலேந்தியபடி மடுமாதா திருத்தலத்தில் அமைநதுள்ள தியான இல்லத்தை நோக்கி திருச் செபமாலை செபித்துக் கொண்டு பவனியாக வந்தனர்.

மேலும் அறிய கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

புனித ஆண்ட்ரூ டுங்-லாக்

புனித ஆண்ட்ரூ டுங்-லாக்

தோழர்கள், மறைசாட்சிகள் (கி.பி 1820 – 1862)

வியட்நாமில் கி.பி 1820 முதல் வரை நடந்த வேதகலகத்தில் மறைசாட்சிகளாக இறந்த 117 பேரில் குருவாகிய புனித ஆண்ட்ரு ஒருவர். இவர்கள் கி.பி 1900 முதல் 1951 வரை நான்கு வெவ்வேறு காலங்களில் முக்திப் பேறு பட்டம் பெற்றவர். இறுதியில் திருத்தந்தை 2ம் ஜான்பால் இவர்களுக்குப் பனிதர் பட்டம் அளித்தார்.

புனித ஆண்ட்ரூ காலத்தில் வியட்நாம் 3 சிறிய நாடுகளாகக் காட்சியளித்தது. அவை தனித்தனி சிற்றரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. போர்த்துக்கீசியர் வழியாக இங்குக் கிறிஸ்தவம் தோன்றியது. கி.பி 1615 இல் இயேசு சபையினர் டா நாங் என்ற நகரை மறைபரப்புத்தளமாகத் தேர்வு செய்தனர். ஜப்பானிலிருந்து வெளியேற்ப்பட்ட கத்தோலிக்கர்களின் ஆன்மீகப் பொறுப்பை ஏற்றிருந்தனர். மூன்று சிற்றரசர்களில் ஒருவன் வெளிநாடுகளிலிருந்து வந்த மறைப்போதகர்களை வெளியேற்றியதோடு, கிறிஸ்தவத்தைத் தழுவிய வியட்நாம் மக்கள் அதனை மறுதலிக்குமாறு தூண்டினான். அவர்கள் பாடுபட்ட சுரூபத்தை மிதிக்கக் கட்டளையிட்டான். இதனால் கிறிஸ்தவர்களுடைய இல்லங்களில் ஒளிந்து வாழ்வதற்கான பதுங்குக் குழிகள் தோண்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் கி.பி 19ம் நூற்றாண்டிலும் 3 முறை அச்சத்தை மூட்டும் போராட்டங்களைச் சந்தித்தனர். 1820க்குப் பிறகு 60 ஆண்டுகளாக ஒரு இலட்சத்திலிருந்து 3 இலட்சம் கிறிஸ்தவர்கள் வரை வதைக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். போராட்டத்தின் தொடக்க நாள்களில் மறைபரப்பு சபைக் குருக்களும், ஸ்பெயின் நாட்டு டொமினிக்கன் சபைக் குருக்களும், 3ம் சபையினரும் கொல்லப்பட்டனர்.

கி.பி 1954ல் ஒன்றரை இலட்சம் கத்தோலிக்கர் இந்த நாட்டில் வாழ்ந்தனர். மீண்டும் மீண்டும் கிறிஸ்தவர்களுக்குத் தொல்லை கொடுத்ததின் பொருட்டு ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் தென்பகுதிக்குச் சென்றுவிட்டனர். வடபகுதியில் எஞ்சியிருந்த கத்தோலிக்கரில் பலர் சிறையில் வாடினர். தென் பகுதியில் வாழ்ந்த மக்கள் முழு உரிமையுடன் வாழ்ந்தனர்.

இதனால் பலரும் வட பகுதிகளிலிருந்து இப்பகுதியில் வந்து குடியேறினர். இப்போதுகூடப் பொது உடைமையினர் ஆட்சியில் தான் இந்த நாடுகள் இருக்கின்றன. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட இங்குள்ள கத்தோலிக்கர் தம் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும் ஒரே குறிக்கோளுடன் வெவ்வேறு நாடுகளுக்கு அகதிகளாக ஓடிப்போயினர். பல படகுகளில் இவ்வாறு தாய் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, பலர் கடலில் மூழ்கி உயிர் துறந்தனர்.

ஒரு முறை சென்னைக் கடற்கரைக்குக்கூடச் சில படகுகள் இத்தகைய கத்தோலிக்கர்களை ஏற்றிக்கொண்டு வந்தன. இந்திரா காங்கிரஸ் ஆளும் பட்சியாக இருந்தபோது அவற்றைக் கரை சேர அனுமதிக்கவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை! சென்னையில் இத்தகையவர்கள் படகிலேயே திண்டாடியதைப் பார்த்தவர்கள் பலர் உண்டு. எனவேதான் இவர்கள் இன்றுவரை டீழுயுவு PநுழுPடுநு என்று அழைக்கப்படுகிறார்கள். எந்த ஒரு அச்சுறுத்தம் ஆற்றலும் திருச்சபைi நசுக்க இயலாதென்பதை வியட்நாம் கிறிஸ்தவர்கள் அன்றும் இன்றும் வாழ்ந்து காட்டுகின்றனர். கிறிஸ்து அரசர் வாழ்க!

ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம்– வெள்ளி

முதல் வாசகம்

புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59

அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள்.

எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது.

அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.

மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் :1 குறி 29: 10b. 11b. 11-12. 12b (பல்லவி: 13b)

பல்லவி: மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே.

 எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீராக! பல்லவி

 ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி

ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப்பெற்றுள்ளீர். செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. பல்லவி

 நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.

அவர்களிடம், “ `என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார்.

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.