புதிய ஆயரை

      Announcement-of-New-Bishop

(புதிய ஆயரின் நியமனம் பற்றி வத்திக்கான் வானொ லியின் செய்தியினை மேலுள்ள Announcement of New Bishop என்னும் இணைப்பை அழுத்துவதன்மூலம் கேட்கலாம்)

மன்னார் மறைமாவட்டத்திற்கான புதிய ஆயரை அறிவிக்கும் நிகழ்வு நேற்று (22.11.2017) புதன்கிழமை மாலை 04.30 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்றது.

மேலும் அறிய புதிய ஆயரை

புனித முதல் கிளமென்ட்

பாப்பு – (கி.பி.101)

பாரம்பரிய அடிப்படையில் கிளமென்ட் யூத சமயத்தி லிருந்து வந்த கிறிஸ்தவர். புனித பேதுரு மற்றும் பவுலின் சீடர். புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் (4,3) இவரையே ‘உடன் உழைப்பாளி’ என்று குறிப்பிடுகிறார். கி.பி, 2ம் நூற்றாண்டின் இறுதியில், புனித இரனேயுஸ், திருத்தூதர்களைள் கிளமென்ட் சந்தித்த தாகவும், அவர்களின் மறையுரை இன்னும் கிளமென்டின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடு கிறார். திருத்தந்நை புனித அனக்ளீடசுக்குப் பிறகு கி.பி 88 முதல் 100ம் ஆண்டு வரை, திருச்சபையின் தலைவராக கிளமென்ட் இருந்தார். கொடுங்கோலன் ட்ரேஜன் என்பவ னால் கிரிமியோவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயிரு ந்த 2000 கிறிஸ்தவர்களைச் சந்திக்கவும் அவர்களை உறுதிப்படுத்தவும் அப்போது இவரால் முடிந்தது. இவர் கடலில் எறியப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

முதல் நூற்றாண்டின் இறுதியில் பேதுருவின் வரிசை யில் வந்த 3வது திருத்தந்தை இவர். சிறப்பு நிறைந்த ஒரு சுற்றுமடலை கொரிந்தியருக்கு இவர் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்களிடையே நிலவவேண்டிய அமைதி, ஒற்றுமை இவற்றை வலியுறுத்தி எழுதியுள்ளார். கி.பி 101ம் ஆண்டில் மறைசாட்சியாக இறந்த இவரின் இறப்பு வேதனைகளைப் பற்றிக் கி.பி 4வது, 5வது நூற்றாண்டில் எழுதப்பட்டவை, ஆதாரம் அற்றவைபோல் தெரிகின்றன. புனித கிளெமென்டின் பேராலயம் உரோமையில் கட்டப் பட்டுள்ளது. நகரின் முதன்மையான பங்கு ஆலயங்களில் இதுவும் ஒன்று. இது இவரது இல்லத்தின் மேல் எழுதப் பட்டிருக்கிறது என நம்பப்படுகிறது.

புனித கொலம்பானுஸ்

மடாதிபர் (கி.பி 543 – 615)

கி.பி 6வது நூற்றாண்டின் இடைப்பகுதியில் அயர்லாந்து நாட்டில் பிறந்தவர் இவர். எல்லாப் படிப்புக்களையும் முடித்துக்கொண்டு துறவறத்தைத் தெரிந்துகொண்டார். 30 ஆண்டுகளாகத் தாயகத்தில் இருந்த துறவற மடத்தில் வாழ்ந்தார். பின்னர் கி.பி 590ம் ஆண்டில் 12 தோழர்களு டன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். அங்கு 20 ஆண்டு களின் கடும் உழைப்புக்குப்பின் இவரை நாடு கடத்த ஆணை பிறந்தது. காரணம் , அரச அவையில் நிலவிய ஒழுக்கக் கேடுகளை தலத்தந்தையர்கள் சாடாமல் இருக் கும்போது, இவர் மட்டும் கடுமையாகச் சாடினார் என்பதற் காகத்தான். தம் மனதில் பெரியதோர் குழப்பம் தோன்றிய வேளையில், நைந்த உள்ளத்துடன் திருத்தந்தைக்கு ஒரு மடல் எழுதியுள்ளார். “புனித பேதுருவின் அரியணைக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். ஏனெனில், உரோமை நகரம் என்பது புகழ் நிறைந்ததாகவே இருந்தாலும், எங்கள் பார் வையில் இந்த அரியணைதான் உரோமைக்குப் பெரும் புகழும் பெற்றுத்தருகிறது.” இவரை நாடு கடத்துவதற்காக அமைந்த கப்பல், வழியில் ஒரு சூறாவளியில் மாட்டிக் கொண்டு மீண்டும் ஊரில் தாம் நிறுவிய துறவு மடத்தில் இறந்தார். இவரது ஆன்மீக ஆவலின் காரணமாக பிரான்ஸ் நாடு மட்டுமின்றிச் சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளும் விசுவாசத்தில் பெரியதோர் ஊக்கம் பெற்றன.

முத்தி. மைக்கிள் புரோ, சே.ச

குரு, மெக்சிக்கோ மறைசாட்சி (கி.பி 1801 – 1927)

தமது நெஞ்சைக் குண்டுகள் துளைத்தபோது “கிறிஸ்து அரசரே வாழ்க” என்று சொல்லித் தம் உயிரை நீத்தவர் தந்தை மைக்கிள் புரோ: மெக்சிக்கோவில் ஒரு சுரங்க பொறியியல் வல்லுநரின் மகனாகப் பிறந்தவர். 20வயது வரை தந்தையின் அலுவலகத்தில் பணிபுரிந்தார். இவரின் சகோதரி ஒருவர் துறவற வாழ்வைத் தெரிந்து கொண்டார். இதைப் பார்த்து,”நானும் ஏன் அக்காவைப் பின்பற்றக்கூடாது?” என்று கேள்வி எழுப்பி இயேசு சபை யில் சேர்ந்தார். தொடக்க முதல் ஒரு புனிதராக வாழ வேண்டும் என்ற அசையாத குறிக்கோளுடன் செயல் பட்டார்.

இவர் இயேசு சபையில் சேர்ந்த நாட்களில், மெக்சிக் கோவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் திருச்சபைக்குக் கொந்தளிப்பான காலமாக இருந்தது. கோவில்களைச் சூறையாடினார்கள். குருக்கள், கன்னியர் பற்பல சித்திர வதைக்கு உள்ளானார்கள். புரோ தங்கியிருந்த இளந் துறவு மடத்தைப் பகைவர் ஒரு நாள் நெருங்கினர். நூல கத்திற்குத் தீ வைத்தனர். தலைவர் சுவாமி குருமாணவர் களை “ அமெரிக்காவுக்குத் தப்பி ஓடுங்கள்” என்று சொல் லிவிட்டார்.

பல இன்னல்களுக்கும், வேதனையான பயணங்களுக்கும் பின் பெல்ஜிய நாட்டில் லுவேன் நகரில் மறை இயல் கற்க புரோ சென்றார். கி.பி 1925ல் குரப்பட்டம் பெற்ற பின், தாய கம் திரும்பினார். அங்கு முன்னிருந்ததைவிட, இப்போது கால்லஸ் என்பவள் தலைமையில், திருச்சபையின் நிலை மிக மோசமடைந்திருந்தது. கத்தோலிக்கக் குரு யாரானாலும் வேட்டையாடப்பட்டனர். இருப்பினும் மறைந்து வாழ்ந்த கத்தோலிக்கர்களின் இடம் அறிந்து மறைவாகச் சென்று அருட்சாதனங்களை வழங்கி கிறிஸ் தவர்களைப் பலவழிகளிலும் புரோ ஊக்குவித்து வந்தார். இவ்வேளையில் ஹம்பர்ட்,ராபர்ட் என்ற உடன்பிந்த இரு சகோதரர்களும் தந்தை புரோவுக்கு வலக் iகாக அமைந்து உதவினர். ஓராண்டுக்கும் மேலாகப் புரோ இவ்வாறு மறைவாகத் திருத்தொண்டாற்றி வந்தார்.

இந்தச் சூழலில் லூயிசெருருட்ரா என்ற இளைஞன் தனது காரில் ரு குண்டு வைத்து, மறையின் பகைவனான ஒபரேகோன் என்பவனைக் கொல்ல முடிவுசெய்திருந் தான். எதிர்பாராமல், என்ன காரணமோ, குண்டு வைத்திரு ந்த நிலையில் அந்தக் காரைத் தந்தை புரோவுக்கும் சகோதரருக்கும் விற்றுவிட்டான். அந்த வேளை பார்த்து ஒபரேகோனுக்குக் காயம் பெரிதில்லை என்றாலும், புரோவும் சகோதரர்களும் தான் கொலைக் குற்றவாளிகள் என்று முடிவு செய்துவிட்டனர்.

3 சகோதரரும் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு சிறைப்படுத்தினர். குணடமு வெடித்துச் சதி செய்த லூயி இதைக் கேள்விப்பட்டுத் தானே முன்வந்து, தவற்றை ஒப்புக்கொண்டாலும், பகைவரோ மற்ற 3 பேரையும் விட்டுத் தயாராயில்லை. கி.பி. 1927 நவம்பர் 23 அன்று போர்வீரர் சிலர் தந்தை புரோவைச் சிறைக்கு வெளியே அழைத்து வந்தனர். வெளிமுற்றத்திற்கு வந்தபோது, வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. தந்தையோ தம்முடன் எப்போதும் எடுத்துச்செல்லும் பாடுபட்ட சுரூபத்தை ஒரு கையிலும், ஜெபமாலையை இன்னொரு கையிலும் பிடித்துக் கொண்டிருந்தார். “உனது கடைசி விருப்பம் யாதோ? என்று கொலைஞர்கள் கேட்பதற்கு, “செபிக்க சிலமணித் துளிகள் மட்டும் தேவை” என்றார். தம் கண்களைக் கட்ட வேண்டாம் என் றும் கேட்டுக் கொண்டார். அவர் புன்முறுவலுடன் தம் இரண்டு கைகளையும் சிலுவை அடையாளமாக விரித்து வைத்த நேரம், குண்டு இவரது இதயத்தை துளைத்தது! தருத்தந்தை 2ம் ஜான்பால் புரோவுக்கு முத்தி பேறு பெற்ற பட்டம் அளித்தார்.

ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம் -வியாழன்

முதல் வாசகம்

எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29

அந்நாள்களில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.

மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, “நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், “மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்” என்று கூறினார்.

மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார்.

அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார்.

இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.

பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, “திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்” என்று உரத்த குரலில் கத்தினார்.

அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள். அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் :திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 23b)

 பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். பல்லவி

பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.’ வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.  துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா?

ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.