புனித சார்லஸ் பொரோமேயோ

புனித சார்லஸ் பொரோமேயோ

ஆயர் – (கி.பி. 1538 – 1584)

கி.பி 16- வது நூற்றாண்டில் திருச்சபையின் மங்காத மாணிக்கமாகத் திகழ்ந்தவர் புனித சார்ரஸ். இவரது காலத்தில் திருச்சபையின் பெரிய சீர்திருத்தங்கள் பேஸ்ரீதவைப்பட்டன. இவற்றைப் பெருமளவில் செயல் படுத்தி இவர் வெற்றிகண்டார். தம் மறைமாநிலமான மிலானில் ஆன்ம ஈடேற்ற அலுவலில் இரவுபகலாக திரிதெந்தீன் சங்கத்தைப் புதுப்பித்து, இறுதியில் ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டார். அப்போது திருத்தந்தையாக இருந்த 4ஆம் பத்திநாதருக்கு சங்கத்தைத் திறமையுடன் நடத்துவதற்குப் பெரிதும் உதவிபுரிந்தார்.

தமது 27-வது வயதிலிருந்து 46-வது வயது முடிய மிலான் நகர் ஆயராகப் பணியாற்றியபோது, எல்லா ஆயர்களுக் கும் சிறப்பான முன்மாதிகையாகத் திகழ்ந்தார். ஸ்விஸ்  நாட்டுக்குப் பயணமாகிப் பல பகுதி மக்களையும் சந்தித்து, கத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் நிலைநாட்டிய பெருமை இவருக்கு உண்டு. திருச்சபை முழுவதிலும் திரிதெந்தின சங்கத் தீர்மானங்களைச் செயல்படுத்தத் திறம்பட முயன்றார். ஏழைகளின் பேணுதலுக்கு ஏராள மான பணத்தைச் செலவழித்தார். தம்மைப் பொறுத்த மட்டில் கடுமையான எளிமைத் தனத்தில் வாழ்தார். பிளேக் தொற்றுநோய் பரவிய நாள்களிலும் கடுமையாக உழைத்துத் தொண்டு புரிந்தார். இத்தகைய அரும்பெரும் முயற்சிகள் அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதிக் கவே தமது 46-வது வயதில் காலமானார். இவர் எழுதிய நூல்களைத் தெளிவாகப் படித்து முடித்தபின் திருத் தந்தை 23-ஆம் அருளப்பர் இவரை “ஆயர்களுக்கு ஆசிரியர்” என அழைக்கத் தயங்கவில்லை.