நாளை 17ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் 2018ம் ஆண்டிற்கான அருட்பணித்திட்டமிடல் மாநாடு நாளை 17ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி மறுநாள் சனிக்கிழமை 18ந் திகதி மாலையில் நிறைவுக்கு வருகின்றது. தூய யோசேவ்வாஸ் அடிகளாரின் வாழ்வையும் பணியையும் எதிர்வரும் ஆண்டுகளிலே, நாம் நடக்கவேண்டிய ஆன்மிக வழித்தடங்களாக சிந்தித்துச் செயற்படும் மன்னார் மறைமாவட்டம்,

மேலும் அறிய நாளை 17ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகின்றது.

ஆன்மிக இயக்குனர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும்

ஜரோப்பிய மண்ணில் , புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணியாற்றி வரும்ஆன்மிக இயக்குனர்களுக்கான மூன்றாவது தியானமும் ஒன்றுகூடலும் ஜேர்மன் நாடடின் எசன் நகரில் நடைபெற்று வருகின்றது. அங்கு நடைபெறும் தியானத்தின் சில பதிவுகள்.

மேலும் அறிய ஆன்மிக இயக்குனர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும்

புனித ரோச் கொன்சாலஸ், அல்போன்ஸ் ரொதிரிகஸ் ஜான் காஸ்டில்லோ சே.ச

புனித ரோச் கொன்சாலஸ், அல்போன்ஸ் ரொதிரிகஸ் ஜான் காஸ்டில்லோ சே.ச

மறைசாட்சிகள் – (1576 – 1628)

சென்னையிலும் அதனை அடுத்த சுற்றுப்பறங்களிலு “குப்பம்” என்று கேள்விப்படுகிறோமல்லவா? அது போலவே தென் அமெக்காவில் பார்க்கவே, உருக்வே என்ற குப்பங்கள் இருந்தன. இவர்கள் வேட்டையாடுவது தவிர பிறதொழில் தெரியாத முரட்டுப் பழங்குடியினர். இவர்கள் மத்தியில் சேவை புரிந்து கிறிஸ்வின் ஒளிக்கு அவர்களைக் கொண்டு வந்த பெருமை இன்று நாம் நினைவுகூரும் 3 யேசுசபை மறைசாட்சிகளுக்கே உரியது.

முதலில் ரோச் என்ற மறைசாட்சியை எடுத்துக்கொள் வோம். இளைஞராயிருக்கும்போது குருவாக விருப்பம் தெரிவித்தார். தொடக்கத்தில் அவரது அருகில் இருந்த ஆயரிடம் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டார். பின்னர் யேசுசபை சமீபத்தில் தொடங்கிய பள்ளியில் மேலும் கல்வி கற்று 23வது வயதில் குருப்பட்டம் பெற்றார். முதன்முதலாக செல்விந்தியார் மத்தியில் இவர் பணிபுரிந்ததில் காட்டிய திறமையை அறிந்த ஆயர், மறைமாவட்டப் பேராலயத்திற்குப் பங்குக்குருவாக நியமனம்செய்தார். அடுத்து இவரைக் குருகுல முதல் வராக உயர்த்த ஆயர் திட்டமிட்டதை அறிந்து, உடனே யேசுசபைக் கதவைத்தட்டினார்.

1609ல் யேசுசபை நவசந்நியாசியானார். நவசந்நியாச நிலையில் இருந்தபோதே இவர் பராக்வேயில் ”குவைக் குரு” என்ற கொடிய பழங்குடியினரை மனந்திருப்ப அனுப்பப்பட்டார். விரைவில் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டார். பின்னர் மறைக்கல்வி கற்றுக்கொடுத் தார். ஒரு சிலரே கிறிஸ்தவர்களானாலும் எஞ்சியோரின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொண்டது ஒரு பெரிய சாதனையே. மறைக்கல்வியுடன் அவர்களுக்கு நிலத்தை உழுது பண்படுத்துதல், விதை விதைத்தல் போன்ற விவசாயத்தின் நுட்பங்களனைத்தையும் கற்றுக்தந்ததின் பலனை அவர்கள் உணர்ந்தனர். காலநடைப் பண்ணை யின் முறைகளையும் கற்றுக் கொண்டனர். இவ்வாறு இவர்கள் வழியே சென்று தனது வழியில் அவர்களைக் கிறிஸ்துவின் ஒளிக்குக்கொண்டு வருவதில் மாபெரும் வெற்றி கண்டார்.

அடுத்து 12 ஆண்டு அளவாக பிரேசில், உருகுவே போன்ற பகுதிகளிலும் யேசுசபை முத்திரை பதித்த குப்பங்களை உருவாக்கி வெற்றி கண்டார். தொற்றுநோய் பரவிய சமயங்களில் மக்களுக்கு மகத்தான சேவை செய்தது மக்களை அதிகம் கவர்ந்தது. இவரிடம் பலதரப்பட்ட திறமைகள் இருந்தமையால், ஆன்மாக்களைக் கவரப் பெரிதும் உதவியது. 1619ல் அடுத்திருந்த அடர்ந்த காட்டு மனிதர்களின் தலைவன் இந்த மக்களின் முன்னேற்ற த்தை நேரில் பார்வையிட்ட பின் உருக்வே பகுதிக்கு வரத் தந்தை கொன்சாலசுக்கு அழைப்புக் கொடுத்தான். அங்கு சென்று அடுத்தடுத்து, புதிதாக உதவிக்கு வந்திருந்த யேசு சபைக்குரு ஜான் காஸ்டில்லோவுடன் முன்குறிப்பிட்ட அமைப்பு ஒன்றை நிறுவினார். சிலநாள்கள் கழித்து, தந்தை காஸ்டிஸ்லோவை அங்கு நிறுத்திவிட்டு, இற்றப் புவா என்ற அமைப்பில் பணிபுரிந்த யேசு சபை குரு அல்போன்சஸ் ரொட்ரிகோசைச் சந்தித்தார்.

இருவரமாக காரோ என்ற பகுதியில் யேசுசபைக் குப்பம் ஒன்று தொடங்க விரைந்தனர். நவம்பர் மாதம் முதல் நாள் அங்கு சென்று நிறுவியதால் அதற்கு “சகல புனிதர் கள் குப்பம்” என்ற பெயர் சூட்டினார்கள். முதற்கண் அந்தக் கிராமத்தின் மையத்தின் ஒரு சிலுவை மரத்தை வைத் தார்கள். ஒருசில நாள்கள் சென்றபின் 3 குழந்தைகளுக் குத் திருமுழுக்குக் கொடுத்தார்க். ஆனால் அங்கு நெகு என்ற பெயர் கொண்ட ஒரு மந்திரவாதி, மருத்துவன், பணியாளர்களின் மீது ஆவேசம் அடைந்தான். அவர்கள் செய்தது எதுவும் அவனுக்குப் பிடிக்கவேயில்லை, அவர்களது போதனையின் முPதும் ஆத்திரம் அடைந் தான்.

இதனால் இவனுக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிலருடன் இவர் களை ஒழித்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினான். நவம்பர் 15ஆம் நாள் தந்தை கொன்சாலஸ் திருப்பலி  நிறைவேற் றியபின், சிற்றாலயத்தை விட்டு வெளியே வந்தார். அந்த சமயம் பார்த்து நெகுவின் அடியாட்களில் ஒருவன் கோடாரியால் தந்தையின் தலையைப் பிளந்தான். தந்தையும் கொலையுண்டவராக அவனது பாதங்களில் விழுந்து இறந்தார். பெரும் சப்தம் எழுவதைக் கேட்ட தந்தை ரொட்ரிகுவஸ் சிற்றாலயத்திலிருந்து வெளியே வரவே, அவரையும் அடியாட்கள் கொன்று தீர்த்தனர். பின்னர் இவர்களின் உடலை சிற்றாலத்திற்குக் கொண்டு வந்து எரித்துவிட்டனர்.

வேறொரு குப்பத்தில் பணிபுரிந்த தந்தை காஸ்டில்லோ மந்திரவாதி மருத்துவ நெகுவின் அட்டூழியத்தைப் பற்றிச் சிறிதும் கேள்விப்டவில்லை. நெகு இவர் பணியாற்றும் குப்பத்தை அறிந்து இவரையும் தீர்த்துக்கட்டத் திட்டமிட் டான். நெகுவின் அடியாட்கள் 2 யேசு சபை; பணியாளர்க ளையும் ஒழித்துக்கட்டிவிட்டோம் என்று பூரிப்புடன் அவனிடம் வந்து தெரிவித்தனர். அவ்வேளையில் “இன் னும் ஒருவர் உண்டு. அவரையும் தீர்த்துக் கட்டுங்கள்” என்று ஆணையிட்டான். அவ்வாறே அவர்கள் தந்தை இருந்த இடத்தை அடைந்தனர். தந்தை காஸ்டில் லோவுக்கு தனது தோழர்களிருவரும் தங்கள் குருதியைச் சிந்திய விவரம் தெரியாது. இந்த நிலையில் இவரைப் பார்த்த வெறியர்கள் இவரைக் கோடரியால் வெட்டி, உடலைச் சுட்டெரித்தனர்.

 

ஸ்காட்லாந்து நாட்டின் அரசி புனித மார்க்ரெட்

(கி.பி. 1050 – 1093)

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். ஸ்காட்லாந்து நாட்டு மன்னன் 3வது மால்கமுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். மன்னர், இயல்பாக முரட்டுத்தனம் படைத்தவர். ஆயினும் இவள் நாளடை வில் தன் இனிய பண்புகளால் அவரைப் பண்புள்ளவராக் கினார். இவர்களது பிள்ளைகளில் ஒருவர் புனித முதல் டேவிட். முரட்டுக்குணம் படைத்த தனது கணவரை மிகச் சாதுரியமாகத் திருத்தியதுபோல், தனது நாட்டின் பல தரப்பட்ட நலன்கiயும் கருத்திற் கொண்டு முன்னேற்றப் பாதையில் கொண்டுபோன பெருமை இவருக்குரியது. கலைகள், கல்வியில் முன்னேற்றம் மறைக்கல்வி இவை யாவற்றிலும் அக்கறை காண்பித்தார். பக்தியுள்ள குருக் கள் நாடு முழுவதும் பணிபுரிய முயற்சி எடுத்தார். தையல் கலைகளையும், பெண்கள் கற்றுக்கொள்ள வகுத்து, இதன் மூலம் தன்னைச் சார்ந்த பெண்கள் ஆலயத்தில் பீடங்களுக்கு தேவைப்பட்ட உடுப்புகள், துணிகள் இவற்றைத் தயாரித்துக் கொடுக்கவும் வழி வகுத்தார். இவற்றிற்கெல்லாம் மேலாக ஏராளமான கோவில்களைத் தனது கணவரின் ஒத்துழைப்புடன் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

இவரது ஆன்மீக வாழ்வில் மிகக் கடினமான தவ முயற்சி களைக் கையாண்டார். குறைந்த நேரமே நித்திரைக்கு ஒதுக்கினார். ஆண்டில் 2 முறை நோன்பு காலங்களாக அனுசரித்தார். ஒன்று திருவருகைக்காலம் மற்றொன்று தவக்காலம். இந்த நாள்களில் நள்ளிரவில் துயில் எழுவது ஆலயத்தில் காலை ஜெபம். கணவரும் திருவழிப்பில் பங்கேற்பார்! ஆலயத்திலிருந்து திரும்பி வந்தபின் ஏழைகளின் பாதங்களைக் கழுவி, அவர்களுக்குத் தான தர்மம் வழங்குவார்.

புனித கெர்ட்ருத்

கன்னி – (கி.பி. 1256 – 1302)

ஜஸ்லெபன் நகரில் தோன்றியவர். இளவயதில் ஹெல்ட்டா என்ற இடத்திலிருந்த சிஸ்டெர்சியன் சகோதரிகள் இவருக்கக் கல்வி கற்றுத்தந்தனர். கிறிஸ்து வின் பத்தினியென்றே தன்னைக் கருதினார். இயேசுவு டன் இணைந்த வாழ்வில் முன்னேறினார். அவரது திரு இருதயபக்தி தமதிரித்தவ பக்திக்குத் தாவி உச்ச நிலையை அடைந்தது. மறை நூலையும், திருவழிப்பாட் டையும் மிகவும் நேசித்தார். 25வது வயதில் கிறிஸ்து வின் நெருங்கிய உறவையும், அன்பையும் உணர்ந்தார். அப்போது முதல், அடுத்த 25 ஆண்டுகள் வரை இந்தக் காட்சியின் வழி ஊக்கம் பெற்று வந்தார்.

இவர் எழுதிய ஞானநூல்களில் பொதிந்து வைக்கப்பட் டுள்ள ஆழமான கருத்தக்களைப் படிக்கும் மறை வல்லுநர்கள் சொல்லொண்ணா வியப்பு அடைகிறார்கள். ஒரு சமயம் நற்செய்தியாளர் புனித யோவானின் திரு நாளன்று இவருக்குக் கிடைத்த ஒரு காட்சியில், யோவான் இவரை இயேசுவிடம் அழைத்தச் சென்றார். ஆண்டவரின் பக்கமாகச் சாய்ந்த நிலையில், கெர்த்ரூத் யோவானிடம் ஒரு கௌ;வி எழுப்பினார். “யேசுவின் திரு இருதய வற்றாத அன்பு பற்றி ஏன் உங்கள் நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடவில்லை?” அதற்கு மறுமொழியாக யோவான், “திருஇருதயத்துடிப்பக்களின்  இன்மையை நான குறிப்பிடவில்லை. இப்போது தான் மக்களிடம்  இந்த இறையன்பு இவ்வளவு அடிமட்டத்திற்குப் போய் விட்டது. இனிமேலாக இந்த அன்புத்தீ பற்றியெரிய வேண்டும்” என்று பதில் கொடுத்தாராம்.

“ஆண்டவரே, இவ்வுலகில் நீர் செய்த மிகப்பெரிய புதுமை என்னவெனில் நீசப்பாவியாகிய என்னை இப்பூமி இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது” புனித கெர்த்ரூதின் பொன்மொழி.

பொதுக்காலம், 32ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

ஞானம் – என்றுமுள்ள ஒளியின் சுடர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22 – 8: 1

ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் – எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.

ஞானம் – அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.

ஞானம் – கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.

ஞானம் – என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல்.

ஞானம் – ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.

ஞானம் – கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

ஞானம் – ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல். திபா 119: 89,90. 91,130. 135,175 (பல்லவி: 89)

பல்லவி: ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு.

ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. பல்லவி

உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது.

ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அவர்கள் உங்களிடம், `இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள்.

ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.