பொதுக்காலம், 32ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்; அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும்பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்; அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.

ஞானம் மனிதநேயமுள்ள ஆவி; ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்; நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே. ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் – திபா 139: 1-3. 3b-6. 7-8. 9-10

பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தும் ஆண்டவரே.

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.  நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர். பல்லவி

என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர். எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர். என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி

நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. பிலி 2: 15-16

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!

அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.

எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.

ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.”

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஆண்டவர் கூறியது: கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

தேசியமட்ட சாதனை

புனித ஜோசப்வாஸ் தேசிய தினத்தை முன்னிட்டு கிறீஸ்தவ மத அலுவல்கள் சுற்றுலாத்துறை அமைச்சினால் 28.10.2017 அன்று கம்பஹா மாவட்டத்தில் திருச்சிலுவைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற தேசிய நிலைப் போட்டிகளில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து பல பங்குகளின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியங்கள் பங்கேற்றிருந்தன. மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி ச.ஜெயபாலன் அடிகளார் இவர்களை இப்போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கமூட்டி அழைத்துச் சென்றார்.

மேலும் அறிய தேசியமட்ட சாதனை

உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத் திருநிகழ்வு

இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை (12.11.2017) பொன்தீவுகண்டல் தூய அந்தோனியார் ஆலயப் பங்கில் 22 இளம் வயதினருக்கு உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத்தை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் வழங்கினார்.

மேலும் அறிய உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத் திருநிகழ்வு

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

இளந்துறவி – (கி.பி. 1550 – 1568)

இவர் போலாந்து நாட்டில் ராஸ்கோவ் என்ற நகரில் உயர்குலத்தில் தோன்றியவர். 1564 ஆம் ஆண்டு தம் சகோதரருடன் கல்வி கற்க வியன்னாவுக்கு அனுப்பப் பட்டார். சென்ற இடத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் வீட்டில் குடியிருந்தனர். ஒரு முறை இவர் கடும் காய்ச்சலால் படுத்த படுக்கையாகிவிட்டார். அந்நிலையில் தம் அண்ண னிடம் தமக்குத் திவ்விய நன்மைதர ஒரு குருவானவரை அழைத்து வருமாறு கேட்டார். பலமுறை கேட்டும் பயனில்லை. அண்ணன் எரிச்சலுடன் இவரைத் தடியால் அடித்துவிட்டு ஓடிவிட்டான்.

இந்நிலையில் புனிதர் நற்சாவுக்குப் பாதுகாவலியான புனித பார்பராவிடம் உருக்கமாக வேண்டினார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு நள்ளிரவு, இருள் படர்ந்திருந்த இவரது அறையில் எதிர்பாராமல் ஓர் ஒளி தோன்றியது. பார்பராவும், 2 வானதூதர்களும் தோன்றி னர். அந்த வானதூதர்களில் ஒருவர் கையில் திவ்விய நற்கருணையை ஏந்தி நின்றார். புனிதர் முழங்கால் இடடு அதனைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டார். உடனே நோய் நீங்கி நலமடைந்தார்.

இன்னொரு நாளும் ஒரு புதுமை நிகழ்ந்தது. மீண்டும் இவரது அறையில் ஓர் ஒளி தோன்றியது. உடனே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றினார். புன்முறுவலுடன் மரியன்னை சற்றே குனிந்து ஸ்தனிஸ் லாசிடம் தம் மகனைக் கொடுத்தார். தேவபாலனும் தம் கைகளால் புனிதரைத் தழுவினார். இந்த நேரத்தில் மரியன்னை புனிதரைப் புதிதாகத் தோன்றிய இயேசு சபையில் சேருமாறு கூறிவிட்டு மறைந்தார்.

தந்தையோ இதற்கு உடன்படவில்லை. எனவே புனிதர் தம் 17 வயதில் சாக்குத் துணியைத் தம்மீது போட்டுக் கொண்டு கால்நடையாக உரோமை நோக்கிப் புறப்பட் டார். முதலில் ஜெர்மணியை அடைந்து பீற்றர் கனிசியுசி டம் தம்மைச் சபையில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக உரோமை செல்வதே மேல் என்று கனிசியுஸ் சொல்லிவிட்டார். அதனால் மேலும் 800 கல் தொலைவு நடந்து உரோமையை அடைந்தார். அங்கே பிரான்சிஸ் போர்ஜியா இவரைச் சபையில் சேர்த்துக்கொண்டார். 9 மாதங்களே இவர் இளந்துறவுநிலையில் இருந்தார். அதற்குள் நோயினால் தாக்கப்பட்டார்.

இவர் மரியன்னையிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்த வர். தம் இறப்பு அண்மையிலிருப்பதை உணர்ந்தார். அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, தம் இறக்கப்போவதாகக் கூறிவந்தார். ஆகஸ்டு 14ம் நாள் நள்ளிரவில் அவரின் முகம் ஒளிர்ந்தது. அருகிலிருந்த ஒருவரிடம் “மரியன்னை கன்னியர் பலருடன் என்னை விண்ணகம் எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்” என்று சொல்லிப் புன்முறுவலுடன் தம் ஆன்மாவை இறைவ னிடம் கையளித்தார்.

 

புனித ஜோசப்பாத்

புனித ஜோசப்பாத்

ஆயர், மறைசாட்சி – (கி.பி. 1580 – 1623)

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களையே அழித்துக்கொள் ளும் கொடுமையைக் கேட்டிருக்கிறீர்களா? மூளை சிதற அடித்து இந்தப் புனிதரைக் கொன்றவர்கள் கிறிஸ்தவர் கள்தாம்.

கி.பி 1967ல் திருத்தந்தை 6-ஆம் சின்னப்பர் கிழக்கித்திய திருச்சபையின் பிதாப்பிதாவாகிய முதல் அத்தன கோரசைக் கட்டித் தழுவினார். ஒருவர் ஒருவருக்கு அமைதியின் முத்தம் அளித்தனர். பிரிவினை என்னும் வடு நீங்கிவிட்டதாக இது காட்டுகிறதென்று உலகிற்கு அறிவித்தனர். பிரிவினை இன்று நீங்கிவிட்டது.

ஜோசபாத், உக்ரெய்ன் நாட்டின் பிறந்தவர். பாசில் சபையில் சேர்ந்து பிறகு குருவானார். விரைவில் இவர் சிறந்த மறைபோதகர் என்ற புகழ் பெற்றார். தொடக்கத் திலேயே இவர் ஒரு பெரிய சிக்கலைச் சமாளித்தார். பிரிவினைச் சபையாருடன் நெருங்கிய நட்பு கொண்டி ருந்தார்.

அவர்களில் சிலர் இதனால் இவரை ஜயுற்றனர். “திருவழி பாட்டு முறைகளிலும் மற்ற சட்டதிட்டங்களிலும் இவர் ஓடுருவுகிறார். நாளடைவில் உரோமன் கத்தோலிக்கரு டன் நம்மை ஒன்றாக்கி விடுவார்” என்று அஞ்சினர். உண்மையில் இவர் தமது திறமையினால் பிரிவினை சபைச் சகோதரர் பலரையும் ஒரே மந்தையில் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் “ஸ்லாவோனிக்” என்று அழைக் கப்படும் அவர்களின் வழிபாட்டு முறைகளைப் பெரிதும் பாராட்டினார்: ஆதரித்தார். ஆனால் அதனை அழிக்க முயன்றார் என்பது இவருடைய பகைவர்களின் பெரியதொரு குற்றச்சாட்டு.

விரைவில் பிரிவினை  சபையின் ஆட்சிப் பீடத்தில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது. “இவர் இலத்தீன் கிறிஸ்தவர்களாக மாற்ற முயலுகிறார்” என்று இவர் மீது குற்றஞ்சாட்டினர். அப்போதிருந்தபோலந்து நாட்டு ஆயர் கள் இவருக்குப் போதிய ஆதரவு அளிக்கவில்லை. தமது மறைமாநிலமாகிய போலோக்குக்குப் போகக் கூடாது என்று இவரைத் தடுத்தனர். ஆனால் இவர் துணிச்சலுடன் சென்றார். ஒரு பிரிவினை சபைக் குருஇவரை இழிவாகத் திட்டியபடியே இவரை அப்புறப்படுத்தினார். இதற்குள் பிரிவினைச் சபையார் ஒன்றுகூடி ஆயரின் இல்லத்தி னுள் புகுந்தனர். மூளை சிதறுமாறு அடித்து இவரின் தலையைப் பிளந்தனர். இறுதியில் சுட்டனர். இவரது உடலை ஆற்றில் எறிந்தனர். கிழக்கத்திய திருச்சபையின் முதல் புனிதர் இவர்.