மன்னார் மறைமா வட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தில் வேப்பங்குளம் தூய சூசையப்பர் பங்கில் இன்று பொங்கல் விழா சிறப்புத் திருப்பலியோடு இடம்பெற்றது. வண்ணக் கோலங்களாக கட்சியளித்த இவ்விழாவில் பங்கு மக்களும், இளைஞர்களும் பங்கேற்று அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் செயற்படுத்தியிருந்தனர். பங்குமக்கள் இவ்விழாவில் கலந்து கொடைகளையும், ஆசீரையும் அள்ளி வழங்கும் இறைவனுக்கு நன்றி கூறினர். பங்குப் பணியாளர் அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா சிறப்பாகவும், அர்த்தச் செழுமை நிறைந்த விதத்தில் அனைத்து வழிபாடுகளையும், நிகழ்வுகளையும் ஆயத்தம் செய்திருந்தார். அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அருட்பணி.றமேஸ் அ.ம.தி அடிகளாரும் கலந்து திருப்பலி ஒப்புக் கொடுத்து சிறப்பித்தார்.