புனித பெரிய லியோ

இவர் உரோமையில் பிறந்தவர். உயர்ந்த கல்வி கற்றுக் கொள்ளும் வசதி பெற்றிருந்தார். பாப்பு முதல் செலஸ்டின் காலத்தில் லியோவைத் தியாக்கோனாக முதன் முதலாகச் சந்திக்கின்றோம். புனித சிரில் இவரிடம் நேரடியாகக் கடிதத் தொடர்பு கொண்டிருந்த திலிருந்து, இவரது பெருமை புலனாகிறது. காசியன் என்பவர் நெஸ்டோரியசின் தப்பறையைக் கண்டித்து எழுதிய நூலை லியோவுக்கு அர்ப்பணம் செய்தார். பிரான்சில் ஈற்றியஸ், ஆல்பினுஸ் என்ற பெருந் தலைவர்களின் போராட்டத்தின் போது, அங்கு விரைந்து அவர்களிடம் அமைதியை உண்டுபண்ணச் சென்றிருந் தார். உரோமையில் லியோ இல்லாதபோது, திருச்சபை யின் தலைவராக லியோ தேர்ந்தெடுக்கப்ட்ட அவர் ஆற்றிய 96 மறையுரைகள் இன்றுவரை கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளன. இம்மறையுரைகளில் பகிர்ந்து வாழ்தல், கிறிஸ்தவ வாழ்வில் சமூக நிதி இவை பற்றி அழுத்தம் கொடுத்திருப்பது நம் கவனத்தை மிகவும் ஈர்க்க வேண்டும். கிறிஸ்துவின் மனிதாவதாரம் பற்றிய தௌ;ளத் தெளிவான போதனைகளும் இவற்றில் அடங்கும்.

கீழைத் திருச்சபையில் இவர் காலத்தில் இருந்த சீர்கேடு கள் இவருக்கு அறைகூவலாக அமைந்தன. கி.பி 448ல் யூட்டிக்கஸ் என்ற மடாதிபரிடமிருந்து வந்த மடலில் நெஸ்டோரியன் தப்பறை மீண்டும் தலைதூக்கி விட்டதைக் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கொன்ஸ்டா ன்டி நோபில் பிதாப்பிதா புனித ஃப்ளேவியன் என்பவர் யூட்டிகசைத் திருச்சபைக்கப் புறம்பாக்கிவிட்டார். மன்னர் தியோடோசியஸ் இதற்கு உடந்தையாகியிருந்தார். யூட்டிக்கஸ் கிறிஸ்துவிடமுள்ள 2 தம்மை களையும் ஏற்க மறுத்துவிட்டார். இது நெஸ்டோரியசின் தப்பறை க்கு நேர்மாறான தப்பi. எபேசு நகரில் கூடிய கூடிய “திருட்டுப் பேரவை” Rotten Synod புனித ஃபிளேவியனைக் குற்றப்படுத்தி, யூட்டிக்கசுக்கு நற்சான்று அளித்து விட்டது! ஈராண்டுகளுக்குப்பின், கால்சீடன் நகரில் கூட்டப்பட்ட பொதுச் சங்கத்தில் 600 ஆயர்கள் கலந்து கொண்ட போது புனித ஃபிளேவியன் குற்றமற்றவர் என மெய்ப்பிக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்றுக்கொண்ட ஆயர்கள் “சிங்கராயர் மூலம் பேதுரு பேசிவிட்டார்.” என்று தங்களின் ஒரு மனதான  ஒப்புதலைத் தெரிவித்தனர். அன்று கிறிஸ்து வில் உள்ள 2 தன்மைகளும் இவ்வாறு தெளிவுபடுத்தப் பட்டன. இன்றுவரை கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையாக இது இருந்து வருகிறது என்பது தெய்வச் செயலே.

அடுத்த அறைகூலவாக திருத்தந்தை லியோவுக்கு அமைந்தது அற்றிலாவின் தலைமையில் ஹ{னர்கள் உரோமை நகரை நோக்கிப் படையெடுத்தது. அதை ஒருவிதமாகச் சமாளித்ததற்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து ஜென்செரிக் உரோமையைச் சூறையாடி ஏராள மான விலையேற்றப்பற்ற பொருள்களைக் கொள்ளை யடித்துக் கொண்டு போய்விட்டான். இறைவனின் பேணுதலில் ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். லியோ என்பது இச்சூழலைச் சமாளித்த விதத்திலிருந்து தெளிவாகிறது. திருச்சபையை வழிநடத்திய 21 ஆண்டு காலத்தில் அனைவருடைய நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *