Category Archives: Uncategorized

செபமாலைக் கன்னியர் துறவற இல்லச் சிற்றாலயம் :

கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – செபமாலைக் கன்னியர் துறவற இல்லச் சிற்றாலயம் : பட்டித்தோட்டம், மன்னார். 24/10/2020 காலை 06 .30 மணி.

மடுமாதா திருத்தலத்திலிருந்து

மடுமாதா திருத்தலத்திலிருந்து கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – . 24/10/2020 மதியம் 12.00மணி.

 

சிறுக்கண்டல் தூய அந்தோனியார் பங்கு சிறப்பான வரவேற்பை அளித்தது.

சிறுக்கண்டல்  தூய அந்தோனியார் பங்குச் சமூகம் மன்னார் தங்களது பங்கிற்கு முதல் தடவையாக வருகை தந்த ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு நேற்று 10.06.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பான வரவேற்பை அளித்தது. மேலும் அறிய சிறுக்கண்டல் தூய அந்தோனியார் பங்கு சிறப்பான வரவேற்பை அளித்தது.

அன்னை கன்னிமரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா

தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
முதல் வாசகம்

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : எசா 12: 2-3. 4. 5-6


பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.” மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

வலி சுமந்த திருமகன் திருப்பாடுகளின் காட்சி

வவுனியா, இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் 20 ஆண்டுகளுக்குப்பின் தமது பங்கில் இயேசுவின் திருப்பாடுகளைப் பிற்பலமாகக் கொண்ட வலி சுமந்த திருமகன் என்னும் திருப்பாடுகளின் காட்சியை அரங்கேற்றினர். மேலும் அறிய வலி சுமந்த திருமகன் திருப்பாடுகளின் காட்சி

சுகநல ஆராதனை , அருட்பணி அகஸ்ரின் முண்டேகாட், (குழந்தை இயேசு ஆலயம்)

சுகநல ஆராதனை , அருட்பணி அகஸ்ரின் முண்டேகாட், (குழந்தை இயேசு ஆலயம்) தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார். 19/02/2018.

பிப்ரவரி: 17 புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்

புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்
(கி.பி.13ம் நூற்றாண்டு)

இந்த எழுவரில் இருவர் திருமணமானவர். இருவர் விதவையர். மூவர் திருமணமாகாதவர். இவர்கள் எல்லாரும் தங்கள் நாடான இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் தனிமையான இடத்தில் ஒன்று கூடினர். தங்களின் உடமைகள் யாவற்றையும் துறந்து விட்டு செப தவ வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தனர் என்றால் வியப்பாக இல்லையா? 1233ல் முழுவீச்சில் உலகை துறந்தனர் இந்த அபூர்வ சகோதரர்கள் . பிளாரன்ஸ் நகர ஆயரின் வேண்டுகோளின் படி தங்கெளுக்கென சபை ஒழுங்குகளை அமைத்துக் கொண்டனர். நாளடைவில் வேறு பலரையும் இந்தச் சபையில் சேர்த்தனர். இவர்கள் மரியாயின் ஊழியர்கள்; என்றே அன்றும் இன்றும் அழைக்கப்படுகின்றனர். புனித டோமினிக் சபையினரின் உடையைப் போல் ஆனால் கறுப்பு நிறத்தில் அணிந்து கொண்டனர். இந்த சபையைச் சேர்ந்த கன்னியர்களும் நாளடைவில் பல மடங்களை நிறுவியுள்ளார்கள். 3ம் சபையினரும் உண்டு. 16வது நூற்றாண்டு முதல் வியாகுல அன்னைக்கு சிறப்பான வணக்கம் காட்டுவதுதான் இந்தச் சபையின் தனிச் சிறப்பு.

ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா

நானாட்டான் பங்கு தூய மரியா ( தூய அடைக்கல அன்னை )ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா Nanattan Parish St. Mary’s ( Our Lady of Good Health) Opening and Consecration 05/02/2018

நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் 24ந் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்றது. மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிநடாத்துதலோடு மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அறிய நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில்

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

இளந்துறவி – (கி.பி. 1550 – 1568)

இவர் போலாந்து நாட்டில் ராஸ்கோவ் என்ற நகரில் உயர்குலத்தில் தோன்றியவர். 1564 ஆம் ஆண்டு தம் சகோதரருடன் கல்வி கற்க வியன்னாவுக்கு அனுப்பப் பட்டார். சென்ற இடத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் வீட்டில் குடியிருந்தனர். ஒரு முறை இவர் கடும் காய்ச்சலால் படுத்த படுக்கையாகிவிட்டார். அந்நிலையில் தம் அண்ண னிடம் தமக்குத் திவ்விய நன்மைதர ஒரு குருவானவரை அழைத்து வருமாறு கேட்டார். பலமுறை கேட்டும் பயனில்லை. அண்ணன் எரிச்சலுடன் இவரைத் தடியால் அடித்துவிட்டு ஓடிவிட்டான்.

இந்நிலையில் புனிதர் நற்சாவுக்குப் பாதுகாவலியான புனித பார்பராவிடம் உருக்கமாக வேண்டினார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு நள்ளிரவு, இருள் படர்ந்திருந்த இவரது அறையில் எதிர்பாராமல் ஓர் ஒளி தோன்றியது. பார்பராவும், 2 வானதூதர்களும் தோன்றி னர். அந்த வானதூதர்களில் ஒருவர் கையில் திவ்விய நற்கருணையை ஏந்தி நின்றார். புனிதர் முழங்கால் இடடு அதனைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டார். உடனே நோய் நீங்கி நலமடைந்தார்.

இன்னொரு நாளும் ஒரு புதுமை நிகழ்ந்தது. மீண்டும் இவரது அறையில் ஓர் ஒளி தோன்றியது. உடனே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றினார். புன்முறுவலுடன் மரியன்னை சற்றே குனிந்து ஸ்தனிஸ் லாசிடம் தம் மகனைக் கொடுத்தார். தேவபாலனும் தம் கைகளால் புனிதரைத் தழுவினார். இந்த நேரத்தில் மரியன்னை புனிதரைப் புதிதாகத் தோன்றிய இயேசு சபையில் சேருமாறு கூறிவிட்டு மறைந்தார்.

தந்தையோ இதற்கு உடன்படவில்லை. எனவே புனிதர் தம் 17 வயதில் சாக்குத் துணியைத் தம்மீது போட்டுக் கொண்டு கால்நடையாக உரோமை நோக்கிப் புறப்பட் டார். முதலில் ஜெர்மணியை அடைந்து பீற்றர் கனிசியுசி டம் தம்மைச் சபையில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக உரோமை செல்வதே மேல் என்று கனிசியுஸ் சொல்லிவிட்டார். அதனால் மேலும் 800 கல் தொலைவு நடந்து உரோமையை அடைந்தார். அங்கே பிரான்சிஸ் போர்ஜியா இவரைச் சபையில் சேர்த்துக்கொண்டார். 9 மாதங்களே இவர் இளந்துறவுநிலையில் இருந்தார். அதற்குள் நோயினால் தாக்கப்பட்டார்.

இவர் மரியன்னையிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்த வர். தம் இறப்பு அண்மையிலிருப்பதை உணர்ந்தார். அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, தம் இறக்கப்போவதாகக் கூறிவந்தார். ஆகஸ்டு 14ம் நாள் நள்ளிரவில் அவரின் முகம் ஒளிர்ந்தது. அருகிலிருந்த ஒருவரிடம் “மரியன்னை கன்னியர் பலருடன் என்னை விண்ணகம் எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்” என்று சொல்லிப் புன்முறுவலுடன் தம் ஆன்மாவை இறைவ னிடம் கையளித்தார்.