- தூய யோசேவ் வாஸ் என்னும் நாமம் கொண்ட, விடத்தல் தீவு தூய யோசேவ் வாஸ் மகாவித்தியாலத்தில் இன்று (10.11.2017) வெள்ளிக் கிழமை காலையில் தூய யோசேவாஸ் அடிகளார் நமது வாழ்வுக்குத் தரும் செய்தி என்னும் தலைப்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான கருத்தமர்வு நடைபெற்றது.
காலையில் விடத்தல் தீவு தூய யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியைத் தொடர்ந்து , அப்பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இக் கருத்தமர்வு நடைபெற்றது. விடத்தல்தீவு பங்குப் பணியாளர் அருட்பணி. செல்வநாதன் பீரிஸ் அவர்களின் வழிநடாத்துதலில் பாடசாலயின் அதிபர் திரு.மைக்கல் கிறிஸ்ரியான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஒழுங்குகளை அப்பாடசாலையின் சமயக் கல்விக்குப் பொறுப்பான ஆசிரியை செல்வி.மரியா அவர்கள் மேற் கொண்டிருந்தார். இக் கருத்தமர்வினை மன்னார் மறைமாவட்ட சமூக அருட்பணி மையமான கலையருவியின் இயக்குனர் அருட்பணி கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளார் வளவாளராக இருந்து வழிப்படுத்தினார்.