அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!
மன்னார் மறை மாவ ட்டத்தில் ‘மன்னா’ என்ற மாதாந்த கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரிய ராகக் கடந்த 15 வருடங் களுக்கு மேலாகப் பணி யாற்றிவரும் அருட் திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு ஊடகத் துறைக்கான தேசிய மட்ட சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனராகவும், தமிழ் மொழி மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் விளங்கும் அடிகளார் கிறிஸ்தவ ஊடகம் சாhந்;த காத்திரமான பங்களிப்பையும் பல வருடங்களாகச் செய்துவிருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இவ்விருதுக்கான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 15ஆம் திகதி (15.10.2017) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யில் இடம்பெற்றது. வடமாகாணத்தைச் சேர்ந்த 40 பேருக்கு ஊடகம், கல்வி, விளையாட்டு, கலை, எழுத்து, வர்த்தகம் போன்ற துறைகளில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. “அகில இலங்கை தமிழ்த்தின விருது விழா 2017” நிகழ்வின் போதே இந்தத் தேசிய சாதனையாளர் விருது வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ இராதாகிருஸ்ணன் அவர்களும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளரும் இணைந்து இவ்விருதுகளை வழங்கி வைத்தனர்.
மன்னா பத்திரிகை ஒரு மதாந்தக் கத்தோலிக்க செய்திப் பத்திரிகையாக இருந்தாலும் அது மன்னார் மறை மாவட்டத்திற்குள்ளும், இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும், வெளிநாடுகளில் உள்ள கத்தோலிக்க மக்கள் மத்தியிலும் விநியோகிக்கப்படும் பத்திரிகையாக உள்ளது. இலங்கையின் ஏனைய தமிழ் மறைமாவட்டங் களில் இருந்து வரும் கத்தோலிக்க பத்திரிகைகளில் வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும், தொகையிலும் உயர்ந்த நிலையில் நிற்கும் பத்திரிகையாக, பலரது பாராட்டையும் பெற்றுள்ள பத்திரிகையாக மன்னா விளங்குகின்றது. தமிழ் நேசன் அடிகளாரின் இந்த நீண்டகாலப் பத்திரிகைப் பணியைப் பாராட்டும் வகை யிலேயே ஊடகத்துறைக்கான இந்;த விருது வழங்கப் பட்டுள்ளது.
“அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகத்துறையில் ஆற்றிய மேன்மையான பணிகளையும், ஊடகத்துறை க்கு வழங்கிய முதன்மையான பங்களிப்பையும் பாராட் டும் வகையில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது” என விருதுக் கேடயத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.