. கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி

இம்மாதம் 18ந் திகதி தொடக்கம் 25ந் திகதிவரை ( 18-25.01.2018) முன்னெடுத்துச் செல்லப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி கத்தோலிக்க மற்றும் பிரதான கிறிஸ்த சபைகள் 23.01.2018 செவ்வாய்க்கிழமை வவுனியா அங்கிலிக்கன் ஆலயத்தில் ஒன்றுகூடி செபத்திலும், கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 16.30 மணி தொடக்கம் 18.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் கத்தோலிக்க திருச்சபையினதும்;, கத்தோலிக்க திருச்சபையோடு நெருங்கிய தொடர்புடைய, பல்லாண்டு காலமாக நல்லுறவைப் பேணி வரும் பிரதான பிரதான கிறிஸ்தவ சபைகளினதும் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர்.

„ஆண்டவரே உமது வலக்கை வலிமையில் மாண்புற்றது“ விப.15:16 என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந் நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *