மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 37 ஆண்டுகள் (1981) நிறைவுவிழாத் திருப்பலி எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெறும். அன்றைய தினம் காலை 7.00 மணிக்கு புதிய மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தோட்டவெளி ஆலயத்தின் முன்னே உள்ள பிரதான வீதி நுழைவாயிலில் இருந்து பவனியாக வரவேற்று அழைத்துவரப்படுவார்.
மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குகளைச் சேர்ந்த இறைமக்களும் இந்த மறைமாவட்ட விழாத் திருப்பலியில் கலந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வினோதப் பொருட்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.