மன்னார் மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியாகப் பணியாற்றி பணி ஓய்வு பெறும் ஆயர் பேருட்கலாநிதி ஜோசவ் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் தான் இறுதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மறைமாவட்டமான திருகோணமலை மறைமாவட்டத்திற்குச் சென்றார்.நேற்றைய தினம் (09.01.2017 செவ்வாய்க்கிழமை) மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை தலைமையிலான மன்னார் மறைமாவட்டக் குருக்கள் ஆயர் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை அழைத்துச் சென்றனர்.
ஆயர் அவர்களை திருமலை ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை, திருமலை மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி றோபேட் கிங்சிலி அடிகள், அருட்பணி. போல் றொபின்சன், அருட்பணி. டண்ஸ்ரன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆயர் கிங்சிலி ஆண்டகை அவர்கள் திருமலை மறைமாவட்டத்தின் அருட்பணி மையத்தின் வதிவிடத்தில் தற்போது தங்கியிருக்கின்றார்.