ஆயர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின் வரலாற்றில் அண்மைக் காலங்களில் வரலாற்றுத் தடம்பதித்த மூன்று ஆயர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும், மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான, விழாக்கால ஒன்று கூடலும் இன்று (03.01.2018) புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. விழாக்கால செப வழிபாட்டைத் தொடர்ந்து

ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களும், மறைமாவட்ட திருத்தூதரக நிர்வாகி ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், மன்னார் மறைமாவட்டத்திற்கான மூன்றாவது ஆயர் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், வெவ்வேறு நல் நோக்கங்களை மனதிற் கொண்டு கௌரவிக்கப்பட்டுனர்.

மறைமாவட்டதில் பல தாக்கமான பணிகளை அர்பணிப்போடு செய்த ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களை வாழ்த்தியும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திருத்தூதரக நிர்வாகியாக அர்ப்பணிப்போடு மறைமாவட்டத்திற்குப் பணியாற்றி தான் முன்னர் பணியாற்றிய மறைமாவட்த்திற்குச் செல்லும் ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மன்னார் மறைமாவட்டத்திற்கான மூன்றாவது ஆயராகப் பணிப் பொறுப்பேற்றுள்ள ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை வரவேற்றும் இந் நிகழ்வு இடம் பெற்றது.

முதலில் மூன்று ஆயர்களும் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு அருட்பணி. ஜெறோம் லெம்பேட் அவர்களும், மறைமாவட்ட திருத்தூதரக நிர்வாகி ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு அருட்பணி.அ.இராயப்பு அவர்களும், புதிய ஆயர் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு அருட்பணி.ஜோ.பெ.தேவறாஜா அவர்களும் பொன்னாடை போர்த்திக் கொளரவித்தனர் அதனைத் தொடர்ந்து ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு அருட்பணி. போல் அவர்களும், மறைமாவட்ட திருத்தூதரக நிர்வாகி ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு அருட்பணி.அ.அகஸ்ரின் புஸ்பறாஜா அவர்களும், புதிய ஆயர் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் அவர்களும் மாலை அணிவித்தும் கௌரவித்தனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திருத்தூதரக நிர்வாகியாக அர்ப்பணிப்போடு மறைமாவட்டத்திற்குப் பணியாற்றி தான் முன்னர் பணியாற்றிய மறை மாவட்டத்திற்குச் செல்லும் ஆயர் பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு நன்றி தெரிவித்து அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மறைமாவட்ட அருட்பணியாளர் குழாமினால் உவந்தளிக்கப்பட்ட வாழ்த்து மடலை அருட்பணி. பெய்லன் சோசை அவர்கள் வாசித்தளிக்க அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் ஆயருக்கு வழங்கினார்.

தொடர்ந்து பேரருட் கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் தனது நன்றியுணர்வினையும், மறைமாவட்டத்தில் தான் பெற்ற மறக்கமுடியாத நல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். பின்னர் புதிய ஆயர் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் அருட்பணியாளர்களுக்கான திருவிழாக்காலச் செய்தியை வழங்கினார். முடிவில் அருட்பணியாளர் களுக்கு திருவிழாக்கால மகிழ்வுப் பொதிகளை பரிமாறினார். இந் நிகழ்வுகள் அனைத்தையும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களும் மன்னார் மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி. அ.இராஜநாயகம் அவர்களும்,ஆயரின் செயலர் அருட்பணி .இ.நீக்லஸ் அவர்களும் சிறப்பாகத் திட்டமிட்டு செயற்படுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *