புனித சில்வெஸ்டர்

டிசம்பர் 31

புனித சில்வெஸ்டர்  திருத்தந்தை (கி.பி 335)

கிறிஸ்துமஸ் வாரத்தில் இந்தத் திருநாள் அமைந்தாலும், இந்தப் பெருவிழாவுடன் இதற்குத் தனித்தொடர்பு எதுவுமில்லை. திருச்சபையில் இந்தத் திருநாள் மிக, மிகத் தொன்மை வாய்ந்தது. இந்த நாளில்தான் இந்தத் திருநாள் எனப் பல காலமாக ஒரு வழக்கம் நிலை பெற்றுவிட்டது.

இவரை நினைவுகூரும் போது, புதைகுழி வளாகத் திருச்சபையில் புதிய யுகம் தோன்றியதை உணரலாம். பேராலயங்கள் இவர் காலம் தொடங்கி ஏராளமாகக் கட்டப்பட்டன. கி.பி 325ல் நிசெயா திருச்சங்கம் வெற்றி நடைபோட்டது. இவரது காலத்தில்தான். இத்தனையையும் அரசன் கொன்ஸ்தான்தைன் மன்னனோடு ஒருங்கிணைந்து செயலாற்றியதனால் ஏற்ப்பட்ட வெற்றி. திருச்சங்கத்தில் 320 ஆயர்கள் சிறப்பாகத் கீழத்திசைத் திருச்சபையில் இருந்து கலந்துகொண்ட நிகழ்வில்தான் ஆரியுசினுடைய தப்பறைகள் கண்டனம் செய்யப்பட்டன. நீண்ட விசுவாசப் பிரமாணமும் இந்தத் திருச்சங்கத்தில் தான் தொகுக்கப்பட்டது. நீண்ட விசுவாசப்பிரமாணமும் இந்தத் திருச்சங்கத்தில் தான் தொகுக்கப்பட்டது. திருச்சபையை இவர் கண்காணித்து வந்த காலமும், முதல் கத்தோலிக்க மன்னன், முதல் கொன்ஸ்தான்டைன் காலமும் ஏக காலமாக சென்றன. வலிமை வாய்ந்த ஓர் அரசனின் கொற்றக்குடையின் திருச்சபைக்குப் பேரமைதி கிடைத்தது மடடுமல்ல: பல சலுகைகளும் கிடைத்தன. கத்தோலிக்கம்தான் நாடு தழுவிய வேதம் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்க விடுமுறையாக நடை முறைக்கு வந்தது. அரசன், ஆயர்களைத் தனக்குச் சமமானவர்களாகவும் ஆன்மீகக் காரியங்களில் முழுப் பொறுப்பு உள்ளவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்ட பொற்காலம் இது.

பாப்பரசர் சில்வெஸ்டர் இறந்தபின் இவரது உடல், முதலில் புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் உரோமை நகரில் இவரது பெயரால் எழுதப்பட்ட ஆலயத்திற்கு இவரது புனித பண்டங்கள் எடுத்துச் செல்லப்ட்டு அங்கே அவை இன்றுவரைப் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டின் இறுதி நாள் பற்றிய சிந்தனை

தேவதூதர் இருவர், ஆளுக்கொரு கூடையுடன் விண்ணினின்று இறங்கி மண்ணின் மைந்தர்களிடம் வலம் வந்தார்களாம். ஒருவர் வைத்திருந்த கூடையில் “மன்றாட்டுகள்” என்று வெளியில் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு கூடையில் “பெற்ற வரங்களுக்கு நன்றி” என்று எழுதப்பட்டிருந்தது.

மக்கள் மத்தியில் இவ்விண்ணவர் உலா வந்தபோது, மக்கள் தேவைப்பட்ட வரங்களைப் பெற்றுக்கொள்ள இறைவன் கிருபை புரிய வேண்டும் என்று மன்றாடி அதில் சீட்டுகள் எழுதிப்போட முதல்வரின் கூடை என்பதை உணர்ந்த மக்கள், அவசர அவசரமாக மன்றாட்டுக்களை எழுதி அக்கூடையில் திணித்தார்கள்.

இறுதியில் இந்த இரண்டு விண்ணவரும், விண்ணகத்திற்குப் புறப்பட்டுந் செல்லும்போது, முதல் கூடை நிரம்பி வழிந்தது. 2வது கூடையில் சீட்டுக்கள் அடிமட்டத்தில் இருந்தன. முதல் விண்ணவர் ஆச்சரியமடைந்து, என்ன இது, என் கூடை நொடிப் பொழுதுக்குள் நிரம்பிவிட்டது. ஏன் உங்கள் கூடையில் “நன்றி” என்ற சீட்டுக்கள் அத்திபூத்தாற்போல் இருக்கின்றன” என்று கேள்வி எழுப்பினாராம்.

அதற்கு 2வது விண்ணவர், மக்களுக்கு மன்றாட்டுக்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளத் தெரிகிறது. அவற்றைக் கொடுத்து உதவிய எல்லாம் வல்லவருக்கு நன்றி சொல்ல நாவு இல்லையே” என்று ஆதங்கத்துடன் கூறிக்கொண்டிருக்க இருவரும் விண்ணகத்துக்கள் நுழைந்தனராம்.

இது எந்த ஆண்டில் எந்த இடத்தில் நடந்தது என்று கேட்டுவடக் கூடாது. நமக்கு மன்றாட்டுக்களை இறைவன்பால எழுப்பும் அளவுக்கு, அவற்றைப் பெற்றுக்கொண்டதற்கு, வாழ்நாளெல்லாம் நன்றி மனப்பான்மையோடு வாழத் தெரிவதில்லை.

“நன்றி நன்றி, இயேசுவே, நன்றி என்றும் நன்றி உமக்கு, கோடி நன்றி பாடினாலும் இன்னும் பாடி மகிழ்வேன் நான்” என்று அமரர் யேசு சபைத் தந்தை ஜி. அம்புரோஸ் அடிகளாரின் பாடலைத் தினமும் அடிக்கடி பாடி நமது நன்றி உணர்வை வெளிப்படுத்தலாமே.

வறட்சியைத் தணிக்க மழை கொட்டுகிறது. இது ஆண்டவரின் வரப்பிரசாதம் என்று நம்மில் எத்தனை பேர் உணர்ந்து நன்றி கூறுகிறோம். பயணம் இனிதே முடிந்து, ஆபத்தின்றி திரும்பிவரும்போது “நன்றி இறiவா” என்கின்றோமா?

இன்று ஆண்டின் கடைசி நாள் இதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்திருந்தால், இன்று நாம், நம் குடும்ப சிதமாக ஆண்டவர் முன் தெண்டனிட்டு நள்ளிரவு முதல் விடியும் வரை நன்றிக் கீதம் பாடுவோம். அந்த அளவுக்கும் நம் நன்றி மனப்பான்மை விரியுமா? “மற்ற 9 பேர் எங்கே?” என்ற கேள்வி எழுப்பிய ஆண்டவர், நன்றிகெட்ட தனத்தை எப்படி உணர்ந்தார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுகூர வேண்டும்.

“ஆண்டவரின் இரக்க செயல்களை நினைத்து, என்றென்றும் பாடி மகிழ்வேன்” என்ற திருப்பாடலை இன்று முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்போம் (சங்கீதம் 89, 1).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *