அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது.

அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழா இன்று (08.12.2017) வெள்ளிக்கிழமை உலகெங்கும் நினவு கூர்ந்து கொண்டாடப்படும் வேளையில் தங்கள் பாதுகாவலியான அன்னை மரியாவை வெற்றி மாதா என்னும் நாமம் சூடி வழிபட்டு வரும் பேசாலை பங்குச் சமூகம் இன்று அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது. தமது கிராமியப் பண்பாட்டுக் கோலங்களையும் இணைத்து மிகவும் பக்தி அருட்சியோடு இத் திருவிழாவினைக் கொண்டாடினர்.

மேலும் அறிய அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது.

வங்காலை தூய ஆனாள் மத்திய மகாவித்தியாலயத்தின் 2017ம் அண்டிற்கான ஒளிவிழா 06.12.2017 புதன் கிழமை இப்பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாயைலின் அதிபர் திரு.ஜி. ஸ்பெல்வின் குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அறிய

பட்டித்தோட்டம் தூய நீக்கிலார் ஆலயத்தின் திருவிழா

எழுத்தூர்ப் பங்கின் துணை ஆலயமான பட்டித்தோட்டம் தூய நீக்கிலார் ஆலயத்தின் திருவிழா 06.12.2017 புதன் கிழமை காலை கொண்டாடப்பட்டது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றிச் செபித்தார். பங்குத்தந்தை அருட்பணி பி.இயேசுறாஜா அடிகளார் அனைத்து ஆன்மிக வழிபாடுகளையும் சிறப்பாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் ஆயத்தம் செய்திருந்தார்.

மேலும் அறிய பட்டித்தோட்டம் தூய நீக்கிலார் ஆலயத்தின் திருவிழா

டிசம்பர் 8 தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 98: 1. 2-3. 3-4

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்  உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

டிசம்பர் 08 – புனித அமல அன்னை

டிசம்பர் 08  – புனித அமல அன்னை

கருவான போதே கறையொன்றும் இல்லாள்!

1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் திருத்தந்தை 9ம் பத்திநாதர் “கன்னிமரி அமல உற்பவி” என்பது விசுவாச சத்தியமென வரையறுத்துக் கூறினார். “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுத்லேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும், சலுகையாலும் ஜென்மப்பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்.” இவ்வாறு இந்த சத்தியம் சரையறுக்கப்பட்டுள்ளது.

பல ந}ற்றாண்டுகளாகச் சிறிது சிறிதாகவே இந்தப் படிப்பினையில் நம்பிக்கை வளர்க்கப்பட்டு வந்தது. “போதிக்கும் திருச்சபை” கி.பி இரண்டாம் நூற்றாண்டில்” புதிய ஏவை” எனக் கன்னிமரிக்கப் புகழாரம் சூட்டியது. கி.பி 5ம் நூற்றாண்டில் ஏபேசு திருச்சங்கம் “இறைவனின் தாய்” என்ற பெயர் அவருக்கு முற்றிலும் பொருந்தும் என்ற அறிவித்தது. கி.பி 8வது நூற்றாண்டில் “அவர் மாசுபடாதவர்” என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். “அமல” என்ற சொல் சேர்க்கப்படாமல் “அவரது உற்பவம்” என்ற திருநாள் கீழைத் திருச்சபையில் கொண்டாடப்பட்டது. கி.பி 12ம் நூற்றாண்டில் காண்டர்பரி ஈட்மர் என்பவர் “அமல உற்பவம்” என்ற நூலை வெளியிட்டார். இது உலகமெங்கும் காட்டுத் தீயாக பரவிக் கன்னிமரியின் பாவமின்மையைப் பற்றிப் பெரும் வாக்குவாதங்களை உண்டு பண்ணியது.

இவ்வேளையில் பிரான்சிஸ்கன் கபையைச் சேர்ந்த டன்ஸ் ஸ்காட்டுஸ், புனித அக்வுPனாஸ் தோமையாரின் ஜயங்களைத் தெளிவுபடுத்தி, வெட்டொன்று துண்டு இரண்டாக்கினார். “கன்னிமரி அமல உற்பவி என்றால், கிறிஸ்துவின் மீட்புப் பயன் அவருக்குத் தேவையில்லாதது போல் ஆகிவிடுகிறது” என்பது அக்வீனாஸ் தோமையாரின் சிக்கல். “கிறிஸ்துவை மீட்பராகப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை, மற்றவர்கள் எல்லோரையும்விடக் கன்னிமரிக்கு மிகுதியும் தேவைப்பட்டது. ஏனெனில், மீட்பரின் அருங்கொடை முன்சென்று அவரைப் பாதுகாத்திராவிடில், அவர் ஜென்மப் பாவத்திற்குத் தப்பித்திருக்கமாட்டார்” என்று ஸ்காட்டுஸ் வரையறுத்துக் கூறினார். இவ்வாறு சுட்டியதின் மூலம் சிக்கல் அடியோடு அழிந்தது.

பாம்பின் தலையை மிதித்து நசுக்கப் பரமனால் முன்னுரைக்கப்பட்ட பாவை, இவை பொழுதேனும் பாம்பின் நச்சு வாடைக்கு உட்பட்டிருக்க முடியுமோ? இறைவனின் திருவுளத்திற்கு எதிராக அன்றோ அது அமையும்? இந்தத் திருநாள் உரோமைத் திருநாள் பட்டியலில் கி.பி 1476ல் இடம் பெற்றது. கி.பி 17வது நூற்றாண்டில் பெரும்பாலும் திருச்சபை முழுவதும் இது பரவிற்று. கி.பி 1846ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நாடுமுவதும் பாதுகாவலியின் திருநாளாகக் கொண்டாடத் தொடங்கினர். 8 ஆண்டுகளுக்குப்பின் “அமல உற்பவம்” திருத்தந்தை 9ம் பத்திநாதரால் வரையறுக்கப்பட்டது.