தமது விடுதியில் ஒளிவிழாவைக் கொண்டாடினர்.

மன்னார் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கிக் கல்விபயிலும் மாணவிகள் இன்று 09.12.2017 சனிக்கிழமை தமது விடுதியில் கிறிஸ்து பிறப்பையொட்டிய ஒளிவிழாவைக் கொண்டாடினர். தூய சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபரும் மாணவியர் விடுதியின் பொறுப்பாளருமான அருட்சகோதரி கில்டா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக  இவ்விழா நடைபெற்றது.

மேலும் அறிய தமது விடுதியில் ஒளிவிழாவைக் கொண்டாடினர்.

வாழ்த்துக்களும் செபங்களும்.

இன்று தனது எண்பத்தோராவது அகவைக்குள் நுழையும் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களும் செபங்களும்.

மேலும் அறிய வாழ்த்துக்களும் செபங்களும்.

திருவருகைக் காலம் முதல் வாரம் சனி

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26

இஸ்ரயேலின் தூயவராம் ஆண்டவராகிய இறைவன் கூறுவது: சீயோன்வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார். என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும். நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும். முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும். கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவு நாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும். ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்றுதிரண்டாற் போல ஏழு மடங்காகும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 147: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்.பல்லவி

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ள வர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்;  பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35 – 10: 1, 6-8

அக்காலத்தில் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார். இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

டிசம்பர் 09 – புனித ஜுலான் டியேகோ (1474 – 1548)

டிசம்பர் 09 –  புனித ஜுலான் டியேகோ (1474 – 1548)

2002ம் ஆண்டு ஜுலை 30ம் நாள் மெக்சிக்கோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த குவாடலூப் மரியன்னையின் ஆலய வளாகத்தில் 5 இலட்சத்திற்கும் மேலாக கருப்பின (இந்திய) மக்களும் வெள்ளையர்களும் மகிழ் ஒலி சகிதம் ஒன்று கூடினார். இதன் காரணம் கருப்பினத்தைச் செர்ந்த ஜுவான் டியேகோவுக்குப் புனிதர் பட்டம் அளிக்கும் சடங்கு நடைபெறவிருந்தது. இதற்காகத் திருத்தந்தை 2ம் ஜான் பால் வந்துவிட்டார். டியேகோவுக்கத் திருமணமான நிலையில் குழந்தைபேறு இன்றி, மனைவி இறந்துவிட்ட நிலை. இவர் புதிதாகக் கிறிஸ்துவின் ஒளி பெற்ற கிறிஸ்தவர். 1524ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கள் வேதபோதகர்கள் இவரைத் திருமறைக்குக் கொண்டு வந்தனர்.

1531ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9ம் நாள் டெப்பெயாக் என்ற மலைப்பாதையின் வழியாக அருகிலிருந்த ஊர் ஆலயத்திருப்பலியில் பங்கேற்க விரைந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மலையிலிருந்து ஓர் குரல் அவர் பெயரைச் சொல்லி அழைத்தது. மலைமேல் சிறிது தூரம் ஏறியபோது கருப்பு நிறத்தில் 14 வயது சிறுமி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். “நான் கன்னிமரி” எனக் கூறி ஜுவானிடம் பேச ஆரம்பித்தார். “நேரே ஆயரிடம் சென்று தான் நின்றுகொண்டிருக்கம் இடத்தில் ஒரு ஆலயம் கட்டச் சொல்” என்று பணித்தார். “மேலும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தப் பகுதி இறைவனின் அளப்பரிய இரக்கத்தின் உற்றாக அமையும்” என்று உறுதி அளித்தார், கருமை நிற மாமரி. “இவ்விடத்தில் இருந்து கொண்டு மக்களின் அபயக்கரலைக் கேட்டு அவர்கள் துயரனைத்தையும் நீக்கிக்கொண்டிருப்பேன்” என்ற வார்த்தைகளைத் தெளிவாகக் கெட்டு திகிலுற்றார் ஜுவான்

மரித்தாய் கூறியவாறு ஜுவான் ஆயரை அணுகினார். மரியன்னை கூறியவற்றைப் பிழைபடாமல் கூறினார். “சரி இன்னொரு நாள் வா, இதுபற்றிப் பேசிக்கொள்வோம்” என்று சிறிதும் பொருட்படுத்தாமல் ஜுவானை அனுப்பிவிட்டார். மேலைநாட்டினைச் சேர்ந்த ஆயர் என்றாலும் கருப்பின் மக்களைக் கரிசனையோடுதான் நடத்திவந்தார். ஜுவான் தனது ஊருக்குச் சேர்hவுடன் திரம்பி விட்டார். மீண்டும் ஒரு முறை கருமைநிற மாமரி ஜுவானுக்குக் காட்சி அளித்தார். இரணாடாவது முறை இதே நோக்கத்தடன் ஆயரை அணுகப் பணித்தார். இந்த முறை கூட ஆயர் போதிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில் ஜீவானின் மாமா சாகம் தருவாயிலிருந்தார். மரணப்படுக்கையில் இருந்த இவருக்கு உதவிக்கரம் நீட்ட ஒரு குருவானவர் தேவை என்பதை உணர்ந்தார். இதற்காக, இதற்குமுன் சென்ற பாதையைத் தவிர்த்து வேறொரு வழியாக நடந்துசென்றார். செல்லும் வழியில் மீண்டும் அதே கருமைநிற மாமரி ஜுவானுக்குத் காட்சியளித்தார்! உனது மாமா சின்ன அம்மை நீங்கி நலம் பெற நான் உதவுவேன்” என்று உறுதி கூறினார். “மலை மீது சற்று ஏறி எனக்குக் கொஞ்சம் ரோசா மலர்கள் பறித்து வா” எனப் பணித்தார். மரியா குறிப்பட்ட இப்பகுதியில் ரோசா மலர்களைக் காண்பதே அரிது. அதிலும் ரோசா மலர்களுக்கான காலமும் அதுவல்ல.

இருப்பினும் அன்னையின் சொல்லைத் தட்டாமல் சென்றார். அதிர்~;டவசமாக மலர்களைக் கண்டார். அவற்றைச்சேர்த்தக் கொண்டுபோய் அன்னையின் பாதங்களில் வைத்தார். அவற்றை ஜுவானிடமிருந்த துண்டில் மரியாவே பத்திரமாக வைத்து ஆயரிடம் கொண்டுபோய்க் கொடுக்கப் பணித்தார். அவரும் அயர் அவர்களிடம் கொண்டுபோய்க் கொடுப்பதற்காகத் துண்டைத் திறந்த சமயம் மலர்கள் கீழே விழ, அவரது துண்டின் மையப் பகுதியில் மரியன்னையின் உருவம் காணப்பட்டது! அனைவரும் திகிலுற்றுப் பரவசம் அடைந்தனர்.

இப்புதுமையைப் பார்த்த பின்னரே ஆயர் கருமை மாமரியின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி பல எடுத்துக்கொண்டார். மறுநாள் காலையில் ஜுவான் முன்னே செல்ல, ஆயரும் மரியா காட்சி தந்த அந்த இடத்தை நோக்கிச் சென்றார். மேலும் அம்மை நோய் நீங்கி முற்றிலும் குணமடைந்திருந்த ஜுவானின் மாமாவையும் சந்தித்தார். அன்னைக்கு ஆலயம் எழுப்ப முயற்சிகள் ஜரூராக நடைபெற்றன. ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அன்னையின் உருவம் இருந்த ஜூவானின் துண்டை ஆலயத்தினுள் மக்கள் பார்த்துப்பரவசமடைவதற்கு காட்சிப் பொருளாக வைத்துவிட்டார் ஆயர். அன்றுமுதல் இன்றுவரை கருமை மாமரியின் அருளாசீர் பெறக் கூட்டம் அலைமோதுகிறது.

இருப்பினும் கருமை மாமரி கொடுத்த செய்திதான் என்ன? இதற்குமுன் லூர்து கெபி போன்ற பல இடங்களிலும் தந்த காட்சியின் போது கொடுத்த, தனக்குப் பிரியமான செய்திதான். இதன் சாரம் “மாக்னி ஃபிக்காத்” கீதம் தான். “எனதான்மா இறைவனை ஏத்திப் போற்றுகின்றது.” இறைவன், பொருட்செல்வம் படைத்த சமூதாயத்தினால் தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எளியோரின் தந்தை.” இந்த நற்செய்தி மேல் வகுப்பினரின் செவிகளைக் துளைத்தது. இறைவனைப் போல், மரியாவும் ஏழைகளிடம் பரிவிரக்கங்காட்டுபவர். அவர்களுக்காகப் பரிந்துரைக்கும் பரோபகாரி.

மேலும் ஒதுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஜூவானிற் துண்டில் அன்னையின் உருவம் பதிக்கப்பட்டதன் மூலம், மரியன்னை ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் எப்போதும் நிற்பவர் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். இந்த நற்செய்தி புது உலக மக்களுக்குக் கிடைத்த சூழ்நிலையைப் பாருங்கள். கருநிற மக்கள் துரும்பாகக் கருதப்பட்டனர். அவர்களைத் துன்புறுத்தி உயிரைப் பறித்தால் எவரும் கேட்பதற்கில்லை என்ற சூழ்நிலை. இத்தகைய சூழ்நிலையில் கருமை மாமரியாகத் தோன்றியதும் அவளது செய்தியும் அனைவரையும் புரிய வைக்காமல் இருந்திக்க முடியுமா?