வங்காலை தூய ஆனாள் மத்திய மகாவித்தியாலயத்தின் 2017ம் அண்டிற்கான ஒளிவிழா 06.12.2017 புதன் கிழமை இப்பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாயைலின் அதிபர் திரு.ஜி. ஸ்பெல்வின் குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வங்காலை பங்குத் தந்தை அருட்பணி சீ.ஜெயபாலன் அடிகளார், வஙஇகாலை திருக்குடும்ப அருட் சகோதரிகளின் குழத் தலைவி அருட்சகோதரி காமன், வங்காலை தூய ஆனாள் ஆரம்பப் பாடசாலை அதிபர், பெற்றோர், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர். ஆன்மீகச் செழுமையோடு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் பயிற்றுவித்து மேடையேற்றினர்.