அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது.

அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழா இன்று (08.12.2017) வெள்ளிக்கிழமை உலகெங்கும் நினவு கூர்ந்து கொண்டாடப்படும் வேளையில் தங்கள் பாதுகாவலியான அன்னை மரியாவை வெற்றி மாதா என்னும் நாமம் சூடி வழிபட்டு வரும் பேசாலை பங்குச் சமூகம் இன்று அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது. தமது கிராமியப் பண்பாட்டுக் கோலங்களையும் இணைத்து மிகவும் பக்தி அருட்சியோடு இத் திருவிழாவினைக் கொண்டாடினர்.


திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைக்கொட்ட முதல்வர் அருட்பணி. ச.தேவறாஜா கொடுதோர் தலைமையேற்று நடாத்த, பேசாலைப் பங்குத் தந்தை அருட்பணி.டே.அலெக்சாண்டர் சில்வா, உதவிப் பங்குத் தந்தை அருட்பணி.ப. சாந்தன் சோசை, எழுத்தூர் பங்குத் தந்தை அருட்பணி. பி.இயேசுறாஜா, செட்டிகுளம் பங்குத் தந்தை அருட்பணி .ச.ஜெயபாலன் குரூஸ், நானாட்டான் பங்குத் தந்தை அருட்பணி .அருள்றாஜ் குரூஸ், கீளியன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி ரெறன்ஸ் குலாஸ்,  மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்பணி . யோ.பெ.தேவறாஜா, அருட்பணி . ஜெறோம் லெம்பேட் அ.ம.தி., அருட்பணி. வின்சன் அ.ம.தி ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இத் திருவிழாவிற்குஅருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண சுகாதார அமைச்சர் திரு.குணசீலன், மன்னார் பிரதேச செயலர் திரு. மரியதாஸ் பரமதாஸ், பேசாலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.சிறில், மற்றும் அரச பணியாளர்கள், இறைமக்கள் எனப் பலரும் பங்கேற்றுச் செபித்தனர். திருப்பலி முடிவில் அன்னையின் திருவுருவப் பவனியும் இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *