முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஆழுகைக்குள் இருந்து தற்போது தனிநாடாக உருவாகியிருக்கும் பொஸ்னியா நாட்டின் மயுட்கோரி என்னும் இடத்தில் 1981 ஆனிமாதம் 24ம் திகதி தொடக்கம் இன்று அன்னை மரியாத ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு காட்சி கொடுத்து செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இம்மாதம் 02ம் திகதி அன்னை மரியா மிர்ஜானா என்பவருக்கு கொடுத்த செய்தி.
அன்புப் பிள்ளைகளே, உங்கள் அன்னையாக உங்களிடம் வருகின்றேன். நீதியின் அன்னையாக, அன்பு செய்து துன்புறுவோரின் அன்னையாக, தூய்மையாய் வாழ்வோரின் தாயாக, வருகின்றேன். நீங்களும் தூயவர்களாய் வாழலாம். இது உங்களது கரங்களிலேயே தங்கியுள்ளது. தூய்மையாய் இருப்போரே அளவிடமுடியாத விதத்திலே விண்ணகத் தந்தையை அன்பு செய்கின்றனர்.அவர்களே எல்லாவற்றையும் விட மேலாக அவரை அன்பு செய்கின்றனர். எனவே, என் பிள்ளைகளே தூய்மையாய் வாழ சிறப்பாக முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் நல்லவர்காள வாழ முயற்சி செய்தால் நீங்கள் எண்ணியும் பார்க்க முடியாத அளவுக்கு தூயவர்களாய் இருக்கலாம். ஆனால் எப்பொழும் நீங்கள் தூயவர்கள் என்று எண்ணுவீர்களானால் நீங்கள் தாழ்ச்சியற்வர்கள், கொடியவர்கள், தூய வாழ்வை விட்டு வெகு தொலைவில் இருப்பவர்கள். அச்சுறுத்தல்கள் நிறைந்த இந்த அமைதியற்ற உலகிலே, என் அன்பின் திருத்தூதர்களாக இருக்கக்கூடிய நீங்கள், செபத்திற்காகவும், இரக்கச் செயல்களுக்காகவும் உங்களுடைய கரங்களை உயர்த்தவேண்டும். என் பிள்ளைகளே , திருச்செபமாலை செபிப்பதை எனக்குப் பரிசாகத் தாருங்கள் நான் அதிகமாக விரும்பும் றோஜா மலர் அதுவே. நீங்கள் உதடுகளால் அல்ல உள்ளத்தால் செபிக்கும் செபங்களே எனது றோஜாப் பூக்களாகும்.
உங்களுடைய செபம், நம்பிக்கை, அன்புச் செயல்களே எனக்குரிய றோஜா மலர்களாகும்.
எனது மகன் இயேசு சிறுவயதில் என்னிடம்: தனது பிள்ளைகள் எண்ணிலடங்காத தொகையினராய் இருப்பர் என்றும், அவர்கள் தனக்கு அனேக றோஜா மலர்களைக் கொண்டு வருவர் என்றும் என்னிடம் கூறினார். அப்போது நான் அதைப் புரிந்த கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது நான்: நீங்களே எனக்கு றோஜா மலர்களைக் கொண்டு வரும் அந்த எண்ணிலடங்காப் பிள்ளைகள் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக எனது திருமகனை அன்பு செய்வதன் மூலமாகவும், இதயத்தால் அவரோடு செபிப்பதன் வழியாகவும், வறியவர்களுக்கு உதவுகின்ற போதும் இச் செயல் நடைபெறுகிறதென்றும் புரிந்து கொள்கின்றேன்.
அன்பின் மூலமாக வாழ்வில் அனைத்தையும் செயற்படுத்தும் இறை நம்பிக்கை, கொடுமை செய்வதை அறியாதிருத்தல், மன்னிப்பதற்கு எப்பொழும் தயாராயிருத்தல், ஒருபோதும் மற்றவர்களைத் தீர்ப்பிடாதிருத்தல்,சகோதரரை எப்பொழுதும் விளங்கிக் கொள்ள ஆர்வத்தோடிருத்தல் இவைகளும் அழகிய றோஜா மலர்களே. எனவே, அன்பின் மறைத் தூதர்களே, எப்படி அன்ப செய்வதென்று தெரியாதவர்களுக்காகச் செபியுங்கள். உங்களை அன்பு செய்யாதவர்களுக்காகச் செபியுங்கள். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்காகச் செபியுங்கள். என் திருமகனாரின் அன்பை என்னவென்று இதுவரை அறியாதவர்களுக்காகச் செபியுங்கள். என் பிள்ளைகளே, நான் ஏன் இதை உங்களிடம் கேட்கின்றேன் என்றால்: செபத்தின் பொருள் அன்பும், மன்னிப்பும் என்பதை நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டுமென்பதற்காகவே. நன்றி.