புனித சார்லஸ் பொரோமேயோ

புனித சார்லஸ் பொரோமேயோ

ஆயர் – (கி.பி. 1538 – 1584)

கி.பி 16- வது நூற்றாண்டில் திருச்சபையின் மங்காத மாணிக்கமாகத் திகழ்ந்தவர் புனித சார்ரஸ். இவரது காலத்தில் திருச்சபையின் பெரிய சீர்திருத்தங்கள் பேஸ்ரீதவைப்பட்டன. இவற்றைப் பெருமளவில் செயல் படுத்தி இவர் வெற்றிகண்டார். தம் மறைமாநிலமான மிலானில் ஆன்ம ஈடேற்ற அலுவலில் இரவுபகலாக திரிதெந்தீன் சங்கத்தைப் புதுப்பித்து, இறுதியில் ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டார். அப்போது திருத்தந்தையாக இருந்த 4ஆம் பத்திநாதருக்கு சங்கத்தைத் திறமையுடன் நடத்துவதற்குப் பெரிதும் உதவிபுரிந்தார்.

தமது 27-வது வயதிலிருந்து 46-வது வயது முடிய மிலான் நகர் ஆயராகப் பணியாற்றியபோது, எல்லா ஆயர்களுக் கும் சிறப்பான முன்மாதிகையாகத் திகழ்ந்தார். ஸ்விஸ்  நாட்டுக்குப் பயணமாகிப் பல பகுதி மக்களையும் சந்தித்து, கத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் நிலைநாட்டிய பெருமை இவருக்கு உண்டு. திருச்சபை முழுவதிலும் திரிதெந்தின சங்கத் தீர்மானங்களைச் செயல்படுத்தத் திறம்பட முயன்றார். ஏழைகளின் பேணுதலுக்கு ஏராள மான பணத்தைச் செலவழித்தார். தம்மைப் பொறுத்த மட்டில் கடுமையான எளிமைத் தனத்தில் வாழ்தார். பிளேக் தொற்றுநோய் பரவிய நாள்களிலும் கடுமையாக உழைத்துத் தொண்டு புரிந்தார். இத்தகைய அரும்பெரும் முயற்சிகள் அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதிக் கவே தமது 46-வது வயதில் காலமானார். இவர் எழுதிய நூல்களைத் தெளிவாகப் படித்து முடித்தபின் திருத் தந்தை 23-ஆம் அருளப்பர் இவரை “ஆயர்களுக்கு ஆசிரியர்” என அழைக்கத் தயங்கவில்லை.

தூய யோசேவ் வாஸ் நாட்டுக் கூத்து

தூய யோசேவ் வாஸ் சிறப்பு ஆண்டையொண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்களால் ஆற்றுகை செய்யப்பட்டு வரும் பாசையூரைச் சோந்த கலாபூசணம் திருவாளர் பாலதாஸ் அவர்களால் எழுதப்பட்ட  மறை வளர்த்த மாவீரன் என்னும் தூய யோசேவ் வாஸ் அவர்களின் வாழ்வையும் பணியையும் எடுத்துக் கூறும் நாட்டுக் கூத்து ஜப்பசி மாதம் 29ம் திகதி  வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தூய யோசேவாஸ் அரங்கில் மேடையேற்றப்பட்டது.

மேலும் அறிய தூய யோசேவ் வாஸ் நாட்டுக் கூத்து

தியாக்கோன்களாக அருட்பொழிவு

மன்னார் மறைமாவட்டத் தைச் சேர்ந்த நான்கு அருட் சகோதரர்கள்  மன்னார் மறை மாவட்ட திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்திரு ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஜப்பசி மாதம் 28ந்திகதி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டார்கள்.

மேலும் அறிய தியாக்கோன்களாக அருட்பொழிவு

புனித மாட்டின் தெபோரஸ்

புனித மாட்டின் தெபோரஸ்

துறவி – (கி.பி. 1579 – 1629)

கி.பி 1579 ஆம் ஆண்;டு பெரு மாநிலத்தில் லீமா நகரில் இவர் பிறந்தார். இவரின் தந்தை ஸ்பெயின் நாட்டில் உயர் குலத்தைச் சார்ந்தவர். தாய் நீக்ரோ வகுப்பினர். வைப் பாட்டியின் மகன் என்ற காரணத்தால், இவருக்குத் திரு முழுக்கு பதிவேட்டில் இவரின் தந்தை பெயர் “தெரியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளவயதிலேயே நோயாளி களுக்கு மருத்துவம் பார்ப்பது இவரது வழக்கம். தொமி னிக்கன் சபையில் சேர்ந்த பின்னர் இந்த அனுபவம் ஏழைகளுக்கு உதவுவதற்குப் பெரிதும் துணையாக இருந் தது. இவர் கடுமையான தவமுயற்சிகளில் ஈடுபட்டார். திவ்விய நற்கருணை மீது அளவு கடந்த பக்தி கொண்டி ருந்தார். நாளடைவில் இவரின் தந்தை இவரைத் தம் மகனாக ஏற்றுக்கொண்டார்.

துறவற சபையில் வார்;த்தைப்பாடு கொடுக்கத் தமக்குத் தகுதி இல்லை என்று 9 ஆண்டுகள் வரை சொல்லி வந்தார். பின்னர் சபைச் சகோதரர்கள் வலியுறுத்திப் புரிந்துகொள்ள வைத்தனர். இவர் 50 ஆண்டு வரை வாழ்ந்தார். செபம், தவம், நோயாளிகளுக்கும் ஏழை களுக்கும் தொண்டு, மறைக்கல்வி கற்றுக்கொடுத்தல் இவை அனைத்திலும் அக்கறைகாட்டினார். புனித லீமா ரோசுக்கு உற்ற நண்பராகத் திகழ்ந்தார். நோயாளிகளைத் தொட்டுக் குணப்படுத்தத் “தனிப்பெரும் சரம்” பெற்றிருந் தார். விலங்குகளையும் மிகவும் அன்பு செய்தார்.

“தம் முன்மாதிரிகையாலும், நன்மை புரிவதாலும் இனிய சொற்களாலும் மக்களை இறைவன்பால் கவர்ந்த இந்தப் புனிதர், இக்காலத்திலும் மக்களை இறைவனிடம் செலுத் தும் ஆற்றல் உள்ளவராக இருக்கின்றார். ஆனால் அந்தோ, எல்லோருமே இந்தப் புனிதமான செயல்களைப் பற்றிப் புரிந்துகொள்வதாகக் கூறிவிட முடியாது. உறுதி யாக இன்று எத்தனையோ பேர் உலக ஆசைகளாகிய வலையில் சிக்கியிருக்கின்றார்கள். இதனால் அறச் செயல்கள் பற்றி அக்கறையின்றி வாழ்கிறார்கள் அல்லது அவற்றை உதறிவிடுகிறார்கள். இன்னும் கூற வேண்டு மானால், இந்தப் புண்ணியபாதையே இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள். மார்ட்டின் தந்த பாடம் பலரையும் மனம் திருப்புவதாக!” – மார்ட்டினுக்குப் புனிதர் பட்டம் அளித்தபோது திருத்தந்தை 23-ஆம் அருளப்பர் விடுத்த செய்தி.

முத்தி ரூபர்ட் மாயர், சே.ச

குரு – (கி.பி. 1876 – 1945)

இவர் பிறந்தது ஜெர்மனி நாட்டில் ஸ்டட்கார்ட் நகரில். கி.பி. 1876-ம் ஆண்டு ஜுன் 23 இவரது பிறந்த நாள். மேல் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தபின் இவர் இயேசு சபையில் சேரத் தந்தையின் இசைவினைக் கேட்டார். “முதலில் குருத்துவத்தை மேற்கொள். அதன்பின் இயேசு சபையில் சேரலாம்” என்ற பதில் வந்தது. அவ்விதமே தத்துவ இயல், இறையியலைப் பல்கலைக் கழகங்களில் கற்றுத் தேர்ந்தார். கி.பி. 1899 மே 2-ம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஆஸ்டரியாவில் ராட்டன்பெர்க் நகரில் இளந்துறவு நிலையில் சேர்ந்தார். இப்பயிற்சி முடிந்தபின் 5 ஆண்டு களாகத் தொடர்ந்து ஜெர்மனி நாட்டில் மறையுரை ஆற்றும் பணியில் நாள்கள் உருண்டோடின.

அந்நாட்களில் ம்யூனிச் நகருக்குள் பட்டி தொட்டிகளில் உள்ளவர்கள் நிறையப்பேர் குடியேறினர். அதனால் வேலை வாய்ப்பு சுருங்கியது. தந்தை மாயர் இந்த இக் கட்டான வேளையில் பலருக்கம் கைகொடுத்தார். ஆறுதலின் ஊற்றாகத் திகழ்ந்தார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் உணவு அளிப்பது உட்பட பல பிறரன்புத் தொண்டுகளில் அக்கறை செலுத்தினார்.

இந்த நேரம்தான் முதல் உலகப் அறிகுறிகள் கார்மேக மாகத் தோன்றின. இச்சூழலில் போர் வீரர்களினிடையே ஆன்மீகப் பணியில் முழுவீச்சில் இறங்கினார். போர் முனைக்கே அஞ்சா நெஞ்சத்துடன் இவர் சென்று பணியாற்றினார்.

போரில் இறக்கும் வீரர்களுக்கு மிகவும் ஆறுதலாகக் காணப்பட்டார். இவரது அஞ்சா நெஞ்சத்தின் பொருட்டு ஐசுழுN ஊசுழுளுளு என்ற அரிதான பட்டம் அளிக்கப் பட்டது. போர்முனையில் குண்டடிபட்டு அவரது இடக் காலை இழந்தார். மருத்துவமனையில் நலமடைந்தபின், மீண்டும் ம்யூனிச் நகர மக்களுக்குப் பணிபுரிந்தார். போரின் அழிவுகளால் இந்த நகர் மக்கள் அடைந்த அவலநிலையை இவர் மேலும் மேலும் உணர்ந்தார். ஒற்றைக்காலுடன் ம்யூனிச் நகர முழுமைக்கும் ஒரே ஒரு அருள் தொண்டராகப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஞாயிறுதோறும் காலை 3 மணி அளவி லிருந்தே திருப்பலி நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை.

போர் முடிவுக்கு வந்தபின் ம்யூனிச் நகரெங்கும் பொது உடைமை, சமூகம் புரட்சிகள் தாண்டவமாடின. தந்தை மாயர் இதை ஓர் அறைகூவலாக ஏற்றுக்கொண்டார். பொது உடைமை, சமூகப் புரட்சியாளர்களின் மேடையில் இவருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த மேடையில் இந்த புதிய எழுச்சிகளில் புதைந்து கிடந்த நச்சுத்தன்மையைச் சுட்டிக்காட்டினர். இந்தச் சூழலில்தான் அடால்ப் ஹிட்லரின் கையோங்கியது. ஹிட்லரின் கொள்கையையும் தந்தை மாயர் கண்டித்தார்.

கி.பி. 1933 ஜனவரியில் ஹிட்லர் ஆட்சியைக் கைப்பற்றி னான். உடனே அவனது உண்மை உருவம் வெளிப்பட்டது. முதலில் கத்தோலிக்கப் பள்ளி நிறுவனங்களில் தன் இரும்புக் கரத்தை வைத்தான். துறவற சபைகளைத் தூற்றினான். கி.பி. 1937-இல் பொது இடங்களில் தந்தை மாயர் பேசத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆலயங் களில் பேசுவதைக் கட்டுப்படுத்த இயலாது போயிற்று. நாசி அணியினர் தந்தை மாயரின் பெயரைத் தூற்றத் தொடங்கினர். இவர் 1938 ஜனவரி 5-இல் சிறையில் தள்ளப்பட்டார். மே மாதம் விடுவிக்கப்படார். ம்யூனிச் நகரில் சிறுசிறு குழுக்களிடையே மட்டுமே பேசினார். இதனைக் காணப் பொறுக்காத நாசி அணியினர் மீண்டும் கைது செய்தனர். பெர்லினுக்கு அருகில் கடுமையான சிறைக்காவலில் வாடினார். இங்கு இவர் உடல்நிலை குன்றியது. இறந்துவிடுவார் என்ற அச்சத்தில் விடுவித் தனர். போர் நிற்கும்வரை ஆசீர்வாதப்பர் சபை மீண்டும் ம்யூனிச் நகரில் புனித மிக்கேல் அதிதூதர் தேவால யத்தில் தமது பணியைத் தொடர்ந்தார். 1945 நவம்பர் திங்கள் புனிதர் அனைவரின் பெருவிழாப் பலி நிறை வேற்றிக் கொண்டிருந்தார். மறையுரை ஆற்றிக்கொண்டி ருக்கும் போது இதயத் துடிப்பு நின்றுவிட்டது. 2-வது அருள் சின்னப்பர் முத்திப்பேறு பட்டம் அளித்தார்.

இறந்த விசுவாசிகள் நினைவு நாள்

திருத்தந்தை 23ம் அருளப்பர் குறிப்பிடுவதுபோல் இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு, நிலையான மறை யுண்மைகளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. மறைந்து விடக் கூடியன எவை என்றும், நிலை பெற்றிருக்கக் கூடியன எவை என்றும், நம்மைச் சீர்தூக்கிப் பார்க்க வைக்கிறது. கி.பி. 3-வது நூற்றாண்டின் தொடக்கத்தி லேயே, தெர்தெல்லியன் கூறியுள்ளதுபோல், ஒருவர் இறந்த நாளான்றும், அதன் பிறகு ஆண்டு நிறைவு நாளான்றும், அவருக்காகத் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. கி.பி. 7-வது நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில், இறந்த விசுவாசிகளின் நினைவு தூய ஆவியாரின் திரு நாளுக்கு மறுநாள் கொண்டாடப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது. அது கி.பி 11-ஆம் நூற்றாண்டில் நவம்பர் 2-ஆம் நாளாக மாறியது. குளுனியைச் சேர்ந்த மடாதிபர் புனித ஒடில்லோவின் கருத்துப்படி குளுனி துறவற சபையின்; எல்லா மடங்களிலும், அனைத்துப் புனிதர்க ளின் விihவுக்கு அடுத்த நாளில் இறந்த விசுவாசிகள் நினைவு கூரப்படுகின்றனர்.

புனித பெர்நார்து தனது சகோதரர் சற்றயீரஸ் இறந்த சமயம் நிகழ்த்திய மறையுரையிலிருந்து: சாவு ஆதாயம். வாழ்வு ஓர் தண்டனை. புனித பவுல் அடிகளார் கூறவில் லையா. “எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்து, சாவு ஆதாயம்.” கிறிஸ்து எனக்கு ஆதாயம் என்பது எதைக் குறிக்கிறது? உடலின் சாவையும், அருள்வாழ்வையும் அல்லவா? எனவே அவருடன் இறந்து அவருடன் அருள் வாழ்வு வாழ அழைப்புப் பெற்றுள்ளோம். இதற்காக நாம் தினமும் மரிப்பதற்குக் கற்றுக்கொள்வது அவசியம். இதன் மூலம் கீழ்த்தரமான உடல் இச்சைகளை வெட்டியெறியமுடியும். விண்ணகத்தின் உச்சியிலிருந்து படைப்பை உற்றுநோக்குவதின் மூலம், அவற்றின் கவர்ச்சியை நாம் வெகு தொலைவில் போட்டு ஒதுக்கி விடுகின்றோம். இவ்வாறுதான் நாம் மரணஇருளிலிருந் தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ள இயலும். உடல் இச்சையின் போராட்டத்தை நம் உள் மனதில் உணருகிறோம். இதற்கு என்ன மாற்று மருந்து? இத்தகைய சாவினின்று என்னை மீட்கவல்லவர் யார்? இறைஇயேசுவின் மூலம் இறையருளால் மீட்புப் பெறுவோம்.

எனவே சாவு கிறிஸ்துவின் அருங்கொடை. ஓர் அற்புதமான மருந்து. உடலின் சாவு என்பது மனித இயல்பு. இதன் பொருட்டு நமது உடலின் இச்சைகளி லிருந்து நம்மை அகதிகளாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிரிந்து அகதிகளாக மாட்டோம். உடலின் இச்சைகளுக்கு நம்பிக்கையளிக்காமல் இயற் கையின் பசிக்கு அவசியமான உணவு அளித்தாலும், அருளவாழ்வைப் பெரிதெனப் பேணி வாழவேண்டும்.

கிறிஸ்து விரும்பியிராவிடில் அவர் இறந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தனது கேவலமான சாவைப் புறக்கணிக்க அவர் விரும்பவில்லை. நம்மை மீட்பதற்கு தனது சாவைத் தவிர வேறு வழியைத் தேடிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலின் அவரின் சாவு ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாக அமைந்துள்ளது. அவரது சாவினால் நாம் முத்திரையிடப் பெற்றிருக்கின்றோம். அவரது சாவைத் திருப்பலி வேளையில் அறிக்கையிடு கின்றோம். அவரது சாவு நமது வெற்றிவாகை, அருட் சாதனம். ஆண்டுதோறும் உலகின் மாபெரும் விழா அவரது சாவை நினைவுகூர்தல். இவ்வாறு அவரது சாவு நமது சாவை மீட்டுவிட்டது. இதனால் நாம் சாவைக் குறித்து துயர் அடையலாமா? மனுமகன் சாவினின்று ஓடிவிடவில்லை. நாம் சாவுக்குப் பயந்து பறந்துவிட லாமா? மனுமகன் பறந்துவிடவில்லையே.

உண்மையாகவே, இறைவன் படைப்பின் தொடக்கத்தில் சாவை உண்டுபண்ணவில்லை. ஆனால் என்றைக்கு அருவருப்புக்குரிய பாவம் மனிதனில் புகுந்து அதன் பொருட்டு, கண்ணீரும், இரத்த வியர்வையும் அவனுடன் ஒட்டிக்கொண்டதோ அன்று தான் சாவை ஓர் மாற்று மருந்தாகத் தோற்றுவித்தார். இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் ஆயாசங்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி தேவை. இவ்வாறு தான் மன்னன் தாவீது பாடி இருக் கிறார். “ஆண்டவரிடம் நான் கேட்டவரம் ஒன்று. எனது வாழ்நாளெல்லாம் அவரது இல்லத்தில் இடம்பெற்று வாழவேண்டும். அங்கு எனது ஆண்டவரின் அழகு Nhபனத்தைக் கண்டுகளிக்க வேண்டும்.