(புதிய ஆயரின் நியமனம் பற்றி வத்திக்கான் வானொ லியின் செய்தியினை மேலுள்ள Announcement of New Bishop என்னும் இணைப்பை அழுத்துவதன்மூலம் கேட்கலாம்)
மன்னார் மறைமாவட்டத்திற்கான புதிய ஆயரை அறிவிக்கும் நிகழ்வு நேற்று (22.11.2017) புதன்கிழமை மாலை 04.30 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்திற்கான ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பேரருட்கலாநிதி வ்பிடெயிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும்,இது வத்திக்கான் உத்தயோக பூர்வ ஊடகம் வழியாகவும் தெரியப்படுத்தப்படும் என்றும் இதனை குருக்கள், துறவிகள், மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தும்படி திருப்பீடத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அதி மேன்மைமிகு பியரே நுகுயென் வான் ரெற் அவர்கள் மன்னார் திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஊடாக அனுப்பியிருந்த உத்தியோக பூர்வமான அறிப்பு மடலை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. விக்ரர் சோசை அவர்கள் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற செப வழிபாட்டின் பின் வாசித்து அறிவித்தார். இந் நிகழ்வில் கருக்கள், துறவிகள், பொதுநிலையினர் எனப் பலர் கலந்து கொண்டனர். அறிவிப்பைத் தொடர்ந்து மனஇனார் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இம் மகிழ்வுச் செய்தி அறிவிக்கப்பட்டது.