தூய யோசேவ் வாஸ் சிறப்பு ஆண்டையொண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்களால் ஆற்றுகை செய்யப்பட்டு வரும் பாசையூரைச் சோந்த கலாபூசணம் திருவாளர் பாலதாஸ் அவர்களால் எழுதப்பட்ட மறை வளர்த்த மாவீரன் என்னும் தூய யோசேவ் வாஸ் அவர்களின் வாழ்வையும் பணியையும் எடுத்துக் கூறும் நாட்டுக் கூத்து ஜப்பசி மாதம் 29ம் திகதி வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தூய யோசேவாஸ் அரங்கில் மேடையேற்றப்பட்டது.
வவுனியா மறைக்கோட்ட அருட்பணியாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட இந் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்திரு ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பா.ஜோசவ் ஜெபரெட்ணம் கௌரவ நீதிபதிகளான அமலவளன் ஆனந்தராஜா, பிரபாகரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். பல குருக்கள், துறவியர், பெருந்தெகையான இறைமக்களும் வருகை தந்திருந்தனர். அனைத்து நிகழ்வுகளையும் வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி இ.அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகள் ஒழுங்கமைத்து நெறிப்படுத்தினார்.