மன்னார் மறைமாவட்டத் தைச் சேர்ந்த நான்கு அருட் சகோதரர்கள் மன்னார் மறை மாவட்ட திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்திரு ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஜப்பசி மாதம் 28ந்திகதி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டார்கள்.
ஆட்காட்டிவெளிப் பங்கின் குமனாயங்குளம் என்னும் இடத்தைச் சேர்ந்த அருட்சகோதரர் மரிசால் சதாஸ்கர்,
வஞ்சியன்குளம் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் றோக்நாதன் மேரி பஸ்ரியன்,
வஞ்சியன் குளம் பங்கின் புதுக்கமம் என்னும் இடத்தைச் சோந்த அருட்சகோதரர் மடுத்தின் தேவறாஜன்,
விடத்தல்தீவு பங்கைச் சோந்த அருட்சகோதர் வேதநாயகம் றஞ்ஜன் சேவியர்
ஆகியோரே புதிய தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களுள் அருட்சகோதரர் மரிசால் சதாஸ்கர் அரிப்பு தூய மரியாள் பங்கிற்கும், அருட்சகோதரர் றோக்நாதன் மேரி பஸ்ரியன்பள்ளிமுனை தூய லூசியா பங்கிற்கும், அருட்சகோதரர் மடுத்தின் தேவறாஜன் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கிற்கும், அருட்சகோதர் வேதநாயகம் றஞ்ஜன் சேவியர் வவுனியா இறம்பைக் குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்கிற்கும் தியாக்கோன் பணி ஆற்றுவதற்கான நியமனத்தைப் பெற்றுள்ளார்கள்.