புனித யோவான்

டிசம்பர் 27

புனித யோவான்  திருத்தூதர், நற்செய்தியாளர்

இவர்தான் “இயேசுவினால் அன்பு செய்யப்பட்ட சீடர்.” இடியின் மக்களில்” ஒருவர். இவரே இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே, நீர் சொல்வது யாரை?” என்று கேட்டவர். தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர். ஆதலால், இயேசுவைப் பகைவர் பிடித்துச் சென்றபொழுது தம் தலைவரின் நிலை காண தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தவர் இவரே. “அன்பே கடவுள்” என்றவரும் இவரே. சிலுவையின் கீழே நின்ற ஒரே ஒரு திருத்தூதர் இவரே. இவரிடத்தில் தான் தம் தாயை இயேசு ஒப்படைத்தார்.

“தொடக்கம் முதல் இருந்ததை நாங்கள் கேட்டதை, கண்;ணால் பார்த்தை, உங்களுக்கு அறிவிக்கின்றோம். அதை நாங்கள் நோக்கிகோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தை பற்றியது. அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது. (1 அரு : 1:1)

பேதுரு, யோவான் ஆகிய 2 திருத்த}தர்களில் மண்ணகத் திருச்சபை விண்ணகத் திருச்சபை ஆகியவற்றின் உருவங்களைப் புனித அகுஸ்தினார் கண்டு பின்வருமாறு கூறுகிறார்.

“திருச்சபையில் இரண்டு விதமான வாழ்வைக் காண முடிகிறது. இவை இரண்டும் இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் இறைவனால் ஏவப்பட்டவை. மண்ணகத் திருச்சபை விசுவாசத்தினால் வளர்ச்சி அடைகிறது. விண்ணகத் திருச்சபை இறைத் தரிசனத்தினால் நிலைத்து நிற்கிறது. முந்தியது திருப்பயணம், பிந்தியது துறைமுகம். இங்கு முயற்சி, அங்கு வெற்றி. இங்கே நாடு கடத்தப்பட்ட நிலை, இங்கே தீயதை விலக்கி, நன்மையில் நீடித்தல். அங்கே நன்மையில் நிலைத்து நிற்றல். இங்கு போர்க்களம். அங்கு மேலான இன்பம். இங்கே இல்லாதவர்க்கு பகிர்ந்தளித்தல். அங்கே அனைவருக்கும் அமைதி, நிறைவு, நிம்மதி. இங்கே சோதனை, அங்கே நிறையருள். இங்கே கண்ணீர் கலந்த இன்பம். அங்கே தனிப் பேரின்பம். இதை இவ்வுலக நல்வாழ்வின் பரிசாக இறைத்தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் காத்து நிற்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *