நான்காவது ஆயராக மன்னார் மறைமவட்டத்த்pற்கான பணிப் பொறுப்பை ஏற்கும் ஆயர்: பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் திருச்சபையின் திருவழிபாட்டு திருமரபின்படி பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு இம்மாதம் 30ம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.
இதற்கான ஆன்மிக ஆயத்தமாக மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பங்குகளிலும் இம் மாதம் 27ந் திகதி புதன் கிழமையன்று அதற்கான வழிபாடுகளை ஒழுங்கு செய்து நடாத்தும்படியும், அந்நாளில் மிக முக்கியமான வேறு திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் இருக்குமாயின், இத் தினத்தை வேறொரு நாளில் நடாத்தும்படியாகவும் அண்மையில் மன்னார் மறைமாவட்டக் குருக்களின் ஒன்றுகூடலில் எடுக்கப்பட்ட இந்த ஆன்மிக செயலாக்கத்தை பயனுள்ள முறையில் செயற்படுத்துமாறும் அனைவரும் கேட்கப்பட்டுள்ளனர்.