குவாடலூப் மரியன்னை

டிசம்பர் 12  

குவாடலூப் மரியன்னை

இந்த மரியன்னையின் திருநாளை சமீபகாலமாக அதாவது 2006ம் ஆண்டு முதல் திருச்சபையில் கொண்டாடுகிறோம். இதற்கு வழிவகுத்தவர் மறைந்த திருத்தந்தை 2ம் அருள்சின்னப்பர். இருப்பினும் குவாடல}ப் கருமை மாமரியின் பக்தி மெக்சிக்கோ நாட்டில் பல நூற்றாண்டு காலமாகக் கொடிகட்டிப் பறக்கிறது. இலட்சோப லட்சப் பக்தர்கள் இங்கு வந்து போகின்றனர்.

அன்னை மரியா ஜூவான் டியேகோ என்ற கருப்பினத்தைச் சார்ந்தவருக்குக் (காண். டீச 9) கொடுத்த காட்சிதான், இப்பக்திக்கு ஆரம்பம். இன்று முக்கியமாக நமது கவனத்தை ஈர்க்க வேண்டியது, ஜூவானின் துண்டில் அன்னை பதித்த தனது உருவம். 5 நூற்றாண்டுகளாக இதனைத் தரிசிக்க எண்ணிலடங்காதவர்கள் வந்து போகின்றனர். இந்தத் துகில், அதில் பொறிக்கப்பெற்ற உருவம், இவற்றின் சிறப்பு அம்சங்க் இதோ: 1) 1531ம் ஆண்டில் இங்கு மரியன்னை காட்சி கொடுத்ததிலிருந்து இலட்சோப லட்சம் பேர் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுள்ளனர். 2) துகிலில் காணப்படும் மரியன்னையின் இந்த உருவம் மட்டுமே எவர் கையாலும் வரையப்படாதிருந்தது இதன் தனிச் சிறப்பு.

  1. இந்தத் துகில் கற்றாழை நார் போன்ற ஒரு நாரினால் வழக்கமாக அந்த நாட்டில் தயாரிக்கப்படுவது. இதன் வயது அதிகம் போனால் 20 ஆண்டுகள்தான். ஆனால் இந்தக் குறிப்பிட்ட துகிலல் ஆலயத்தில் மரியன்னையின் உருவத்துடன் வைக்கப்பட்டு 474 ஆண்டுகள் ஆகின்றன.
  2. ஆலயத்தில் மெழுவர்த்திகளின் புகையோ வெப்பமோ இதற்கு ஊருவிளைவிப்பதில்லை என்பதும் புதுமைதான்.
  3. 1921ம் ஆண்டு மெக்சிக்கோ நாட்டில் ஏற்ப்பட்ட உள்நாட்டுக் குழப்பம். அச்சமயம் ஒரு பெரிய, சக்தி வாய்ந்த குண்டு ஆலயத்திற்கு அருகில் வெடித்து. ஆலயத்திலிருந்த திருச்சிலுவையை அடையாளம் தெரியாதவாறு முறுக்கிவிட்டது. இருப்பினும் புதுமைத் துகிலுக்கு எந்த ஒரு சேதமும் இல்லை.
  4. 1791ம் ஆண்டு ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியின்போது நைட்ரிக் ஆசிட் துணியில் சிந்திவிட்டது. ஆனால் சேதம் எதுவும் இல்லை.
  5. பலதரப்பட்ட சோதனைகளின் மத்தியில் இந்த நாள் வரை துகிலுக்கு எவ்விதப்பாதிப்பும் இல்லை.
  6. பொதுவாக இவ்வுருவம் கருப்பின மக்களின் பண்பாட்டினைப் பிரதிபலிக்கின்றதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *