நேற்று (21.10.2018 ) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உலக மறைபரப்புத் தினத்தை யொட்டிய நிகழ்வுகளில், மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று மாலை சிறப்பான கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம அவர்களின் நெறிப்படுத்துதலில் பேராலய அருட்ப்பணிப் பேரவையின் கலை பண்பாட்டுக்குழு நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கிய. இப் பங்கின் பல்வேறு பிரிவினரும் பல தரப்பட்ட கத்தோலிக்க விழுமியங்களோடிணைந்த பல்சுவை கலை பண்பாட்டு நிகழ்வுகளை சமர்ப்பித்தனர்.
இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக ஓய்வு நிலை மன்னார் பரதேச செயலர் திரு. மரியதாஸ் பரமதாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.