இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய யோசேவ் வாஸ் அடிகள் தமது கையால் நாட்டிய சிலுவைகளில் ஒன்று குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் இருக்கின்றது. இந்தச் சிலுவை வழியாக எண்ணிறைந்த புதுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் இது தூய யோவேவ் வாஸ்சின் அற்புத சிலுவை என அழைக்கப்படுகின்றது.இத் திருச்சிலுவை இலங்கையின் பல பகுதிகளுக்கும் மக்களின் தரிசிப்புக்காக எடுத்துச் செல்லப்படும் நிலையில் அத் திருச்சிலுவை நாளை 23.10.2018 செய்வாய்க்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்து வரப்படுகின்றது. தற்போது யாழ் மறைமாவட்டத்தில் இருக்கும் இத் திருச்சிலுவை நாளை மன்னார் மறைமாவட்டத்தின் தொடக்கப் பங்காக யாழ் மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைக்குள் அடங்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் பக்கமாக அமைந்துள்ள தேவன்பிட்டி தூய பிரான்சிஸ் சவேரியார் பங்கின் நுழைவாயிலில் வைத்துப் பொறுப்பேற்கப்படும்.
ஆதன் பின்னர் தேவன்பிட்டி பங்கின் தலைமை ஆலயமாகத் திகழும் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் மன்னார் ஆலர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இத் திருச்சிலுவை எடுத்துச் செல்லப்பட்டு 30.10.2018 அனுராதபுர மறைமாவட்டத்திற்கு வழங்கப்படும்.
மன்னார் மறைமாவட்டத்திற்கான தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை வருகைக்கான நிகழ்ச்சித் திட்டங்களை ஆயரின் வழிநடாத்துதலோடு மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் பணிக்குழுவின் இயக்குனர் அருட்பணி.க.அருள்பிரகாசம் அடிகளார் முன்னெடுததுச் செல்லுகின்றார்.
தூய யோவேவ் வாஸ்சின் அற்புத சிலுவை – மன்னார் மறைமாவட்ட நிகழ்ச்சித் திட்டம்.
2018.10.23 காலை 09.30மணி தொடக்கம் மதியம் 01.30 மணிவரை. தேவன்பிட்டிப் பங்கு.
2018.10.23 மதியம் 02.00மணி தொடக்கம் மதியம் 05.30 மணிவரை. அந்தோனியார்புரம் பங்கு.
2018.10.23 மாலை 06.30மணி தொடக்கம் 2018.10.24 காலை; 08.30 மணிவரை. விடத்தல் தீவுப் பங்கு.
2018.10.24 காலை 09.30மணி தொடக்கம் மாலை; 04.00 மணிவரை. மாந்தைப் பங்கு.
2018.10.24 மாலை 05.30மணி தொடக்கம் 2018.10.25.மாலை; 02.00 மணிவரை. மன்னார் பேராலயப்; பங்கு.
2018.10.25 மாலை 03.00மணி தொடக்கம் 2018.10.26.காலை; 08.30 மணிவரை. பேசாலைப்;; பங்கு.
2018.10.26 காலை 09.30மணி தொடக்கம் மாலை; 04.00 மணிவரை. தோட்டவெளிப்;; பங்கு.
2018.10.26 மாலை 05.00மணி தொடக்கம் 2018.10.27 காலை; 03.30 மணிவரை. பறப்பாங்கண்டல் பங்கு.
2018.10.27 காலை 09.30மணி தொடக்கம் மாலை; 05.00 மணிவரை. முருங்கன்; பங்கு.
2018.10.27 மாலை 06.00மணி தொடக்கம் 2018.10.28 மாலை; 01.30 மணிவரை. மடுத் திருத்தலம்.
2018.10.28 மாலை 02.30மணி தொடக்கம் மாலை; 04.30 மணிவரை. பம்பைமடுப் பங்கு.
2018.10.28 மாலை 05.30மணி தொடக்கம் 2018.10.29 காலை; 08.30 மணிவரைவவுனியாப் பங்கு.
2018.10.29 காலை 10.00மணி தொடக்கம் மாலை; 04.00 மணிவரை செட்டிகுளம் பங்கு.
2018.10.29 மாலை 05.00மணி தொடக்கம் 2018.10.30 காலை; 08.30 மணிவரை இலுப்பைக்குளம் பங்கு.
2018.10.30 காலை 09.30 மணிக்கு மதவாச்சியில் அனுராதபுர மறைமாவட்டதிற்கு தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவையை வழங்குதல்: