மன்னார் மறைமாவட்டத்தின் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கின் நான்காவதும், அமல மரித் தியாகிகள் சபையின் குருவுமாகிய அருட்பணி.இ.செலஸ்ரின் சூசைதாசன் குரூஸ் ( சி.எஸ்.குரூஸ்) அடிகளார் தனது குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றித் திருப்பலியை இன்று 20.10.2018 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு வங்காலை தூய ஆனாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.அருட்பணி.சி.எஸ்.குரூஸ் அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தில் வவுனியா தூய அந்தோனியார் ஆலயப் பங்குத் தந்தையாகவும், பேசாலை தூய வெற்றி அன்னை ஆலயப் பங்குத் தந்தையாகவும், பள்ளிமுனை தூய லூசிய ஆலயப் பங்குத் தந்தையாகவும், மடுத் திருப்பதிப் பரிபாலகராகவும், மன்னார் மறைமாவட்ட நிதியாளராகவும் பல ஆணடுகள் அருட்பணி ஆற்றியவர். தற்போது யாழ்ப்பாணம் அமல மரித் தியாகிகள் சபையின் குருக்கள் இல்லத்தில் பணியாற்றி வருகின்றார்.
இன்றைய நன்றித் திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ, குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, பல அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், இறைமக்கள் எனப் பலர் கலந்து அருட்பணி.சி.எஸ்.குரூஸ் அடிகளாரோடு இணைந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.
திருப்பலி முடிவில் வங்காலை தூய ஆனாள் ம.ம.வி. மாணவர்களின் மேலைநாட்டு இசைக்குழுவினரின் மகிழ்வொலியோடு மகிழ்வு நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதையொட்டிய சில பாராட்டு நிகழ்வும் இடம் பெற்றது.