இலங்கை அரசின் கிறிஸ்தவ சமய பணிகள் திணைக்களத்தின் ஊடாக இலங்கை அரசு வருடந்தோறும் மாவட்டங்களில் கிறிஸ்து பிறப்புவிழாவை நினைவுகூர்ந்து நடாத்தி வரும் அரச கிறிஸ்து பிறப்பு விழா கலை நிகழ்வுகள் இவ்வாண்டு மன்னார் மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 16ந் திகதி மன்னார் நகர சபையின் விளையாட்டுத் திடலில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கு இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு மைத்திரிபால சேனாநாயக்க வருகை தரவுள்ளார்.இதனையொட்டிய திட்டமிடல் மாநாடு இன்று 04.10.2018 வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சுற்றுலாத்துறை கிறிஸ்தவ சமயப் பணிகளுக்கான அமைச்சர் கௌரவ ஜோண் அமரதுங்க தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பிரசன்னத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, உள்நாட்டுப் பணிகள் அமைச்சர் றஞ்சித் அலுவிகார, மன்னார் மாவட்டச் செயலர் திரு.மோகன்றாஸ், சுற்றுலாத்துறை அமைச்சின் திட்டப் பணிப்பாளர், கிறிஸ்தவ சமயப் பணிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.சத்துரி பின்ரோ, மற்றும் ஜனாதிபதி செயலக முதன்மைப் பணி நிலை அதிகாரிகள், அருட்பணியாளர்கள், மன்னார் மாவட்ட திணைக்கள முதன்மைப் பணிநிலை பணியாளர்கள்கள், துறைசார் வல்லுனர்கள், முப்படைகளின் பிரதேசத் தலைவர்கள், ஊடகத் துறையினர் எனப் பலர் கலந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.