கிறிஸ்தவ, சுற்றுலாத் துறை அமைச்சின் வேண்டுகையின் பேரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மருமாதா திருத்தலத்தில் திருப்பயணிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படவுள்ள 300 வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் ஆய்வுப்பணிகள் கடந்த 23.05.2018 புதன்கிழமை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ, மடுமாதா திருத்தல அதிபர் அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகள், கிறிஸ்த அமைச்சின் இயக்குனர் திரு.குணவர்த்தன, இந்திய தூதரக அபிவிருத்தி பிரிவு இயக்குனர் திரு.மஞ்சுலால், கிறிஸ்தவ, சுற்றுலாத் துறை அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் திரு.எஸ். எல்.கசீம், பிரதம கணக்காளர் திரு. கே.எம்.பி.கே.பண்டார மடு பிரதேசச் செயலர் திரு.பி.ஜெயகரன், மன்னார்; செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.றொகான் குரூஸ் மற்றும் பல அரச துறை சார் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இவ் வீட்டுத் திட்டப் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்த வேலைத்திட்ட முகவர்களுக்கான கேள்வி கோரல் விளம்பரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.