தூய யேசேவ் வாஸ் அடிகளார் முதன் முதலாக தடம் பதித்த அந்த நாளில்

இலங்கையின் திருத்தூதரென நாம் அனைவரும் பெருமையோடு நினைவு கூரும் தூய யோசேவ் வாஸ் அடிகளார் இந்தியாவின் கோவா நகரிலிருந்து, இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த 1687ம் ஆண்டு இலங்கைக்குப் பயணித்தபோது,  மேலும் அறிய தூய யேசேவ் வாஸ் அடிகளார் முதன் முதலாக தடம் பதித்த அந்த நாளில்

மே:06 புனித டோமினிக் சாவியோ

மே:06
புனித டோமினிக் சாவியோ
துறவி, இளைஞர்களின் பாதுகாவலர்-(கி.பி.1842-1857)

வடஇத்தாலியில் கி.பி.1842ல் முரியால்டோ நகரில் தோன்றிய டோம்னிக் புனித டொன்பொஸ்கோவின் முதல் மாணவர்களில் ஒருவர். இவரது குடும்பத்தில் குழந்தைப் பருவ முதல்; புனிதத்தில் வளரும் சூழ்நிலை எப்பக்கத்தில் திரும்பினாலும் நிலவியது. ஆலயம் சென்றால் அங்கே பங்குத்தந்தை ஜான், இளைஞரின் புனித களங்கமற்ற உள்ளத்தைக் கண்டு அதில் தெய்வீக நெருப்புப் பற்றியெரிந்து கொண்டிருக்க வழிவகைகளைக் காண்பித்தார். அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தியை வளர்க்க எங்கும் நல்ல சூழ்நிலை அமைந்திருந்தது. இளவயதிலிருந்தே காற்றோ, குளிரோ, மழையோ எதையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 5 மணிக்கே ஆலயம் செல்வதும் தவறாது பூசைக்கு உதவி செய்வதும் இயல்பாகவே அவருக்கு இருந்த ஆசை, இது அவரது ஆன்மீகத்தின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தது.

டோம்னிக் என்ற ஓர் இளைஞர் தமது திருமுழுக்கு நாளன்று பெற்றுக்கொண்ட புனிதத்தை பழுதின்றி காப்பாற்ற தெரிந்து கொண்டவர். இவர் உண்மையிலேயே ஒரு புனிதர். என்று குறிப்பிட்டார் திருத்தந்தை 10ம் பத்திநாதர், தூய்மை, பக்தி, ஆன்மவேட்கை இம் மூன்றினின்றும் இவர் அடைந்த ஆற்றல் – இவரது கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தது என்று 11ம் பத்திநாதர் குறிப்பிடுகிறார்.

1857ம் ஆண்டு மார்ச் திங்கள் 9ம் நாள் இவர் இறக்கும் வேளையில் ஆகா, என்ன இன்பமயமான அற்புதக்காட்சி என்று விண்ணகக் காட்சி பற்றி பவரவச வார்த்தைகள் கூறி உயிர்துறந்தார். 1954 ஜீன் 12ம் நாள் திருத்தந்தை 12ம் பத்திநாதர் இந்த இளைஞருக்கு புனிதர் பட்டம் அளித்தபோது இவ்வாறு கூறினார்: இந்த 15 வயது இளைஞர் டோம்னிக் சாவியோவை பீடங்களில் ஏற்றலாம் என்று இந்தத் திருச்சடங்கு மூலம் பிரகடனப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய இளைஞர்கள் இவரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மிகக் குறிப்பாக தீய சக்திகள் காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் புனிதத்தை இளம் உள்ளங்களிலிருந்து கருவறுப்பது மட்டுமின்றி நஞ்சையும் புகுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாவியோவின் புனித வாழ்க்கை நம் இளைஞர்களுக்கு அறைகூவலாக அமையட்டும்.