இன்று 17.05.208 வியாழக்கிழமை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நான்கு தியாக்கோன்கள் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்கள்.ஆட்காட்டிவெளிப் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் மரிசால் சதாஸ்கர், வஞ்சியன்குளம் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் றோக்நாதன் மேரி பஸ்ரியன், வஞ்சியன் பங்கின் புதுக்கமம் கிராமத்தைச் சேர்ந்த அருட்சகோதரர் மடுத்தின் தேவறாஜன், விடத்தல்தீவுப் பங்கைச் சேர்ந்த வேதநாயகம் றஞ்சன் சேவியர் ஆகியோர் இன்று காலை 09.30 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற திருவழிபாட்டில் அருட்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்கள்.
இத் திரு நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட முன்னாள் திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் குருக்களும், துறவிகளும் பெருந்தொகையான இறை மக்களும் கலந்த கொண்டனர்.