உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்குச் சமூகம்

உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்குச் சமூகம் இன்று 12.05.2018 சனிக்கிழமை இரண்டு முக்கிய நிகழ்வுகளை தமது பங்கில் நடாத்தியது. தங்களது பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு அன்பின் வரவேற்பை அளித்ததோடு லீயோன்ஸ் தூய வளனார் துறவற சபை அருட்சகோதரிகளின் இலங்கையிலிருந்து தன்னை அர்ப்பணித்த மன்னாரைச் சேர்ந்த அருட்சகோதரி சியாமி றம்மியா மிராண்டா அவர்களின் முதல் அர்ப்பண நிகழ்வும் இடம் பெற்றது.இன்று காலை உயிலங்குளம் பங்கின் பெரியவர்களும் ஆயர் அவர்களை களிலகட்டைக்காடு சந்தியிலிருந்து உந்துரளி பவனியாக அழைத்துவர உயிலங்குளம் பிரதான வீதியிலிருந்து தூய பேதுருவானவர் அலயத்திங்குச் செல்லும் சந்தியில் வைத்து கலைஞர்கள் மன்னாரின் கலைவளத்தையும் கத்தோலிக்க விசுவாசத்தையும் எடுத்தியம்பும் பண்பாட்டுக் கலை வடிவமான கவியால் ஆயரை வாழ்த்தி வரவற்றுக் கொண்டுவர அதன்பின்னர் உயிலங்களம் மகாவித்தியாலய மாணவர்களின் மேலைநாட்ட வாத்திய மகிழ்வோசையுடன் ஆயர் அழைத்து வரப்பட்டார்.

ஆலயத்தின் முற்றத்தில் அமைந்துள்ள பிரதான பாதையில் வைத்து ஆயர் அவர்களையும், பங்குத் தந்தை அருட்பணி ச.மரியதாஸ் லீயோன் அவர்களையும், முதல் அர்ப்பணத்தை மேற் கொள்ளவிருந்த அருட்சகோதரி சியாமி றம்மியா மிராண்டா அவர்களையும், அவருடைய பெற்றோரையும், லீயோன்ஸ் தூய வளனார் துறவற சபை அருட்சகோதரிகளின் பெங்களுர் மாகாண தற்போதைய முதல்வர் தலைவி, முன்னைநாள் முதல்வர் தலைவி ஆகியோர் வரவேற்கப்பட்டு ஆலயப் பேட்டிக்கோவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்பின்னர் ஆரம்பமாகிய திருப்பலியில் அருட்சகோதரி சியாமி றம்மியா மிராண்டா அவர்களின் முதல் அர்ப்பண திருவழிபாடு முக்கிய இடத்ததைப் பெற்றது. லீயோன்ஸ் தூய வளனார் துறவற சபை அருட்சகோதரிகள் இலங்கையில் மன்னாhரில் முதன் முதலாக 2014ம் ஆண்டு மன்னார் முன்னைநாள் ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகையின் அழைப்பின் பேரில் பணியை ஆரம்பித்தனர். தற்போது மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் நகரிலும், உயிலங்குளம் பங்கில் நொச்சிக்குளத்திலும். இவ்வருடம் திருக்குடும்ப அருட் சகோதரிகள் வங்கலை தூய ஆனாள் ஆலயப் பங்கிலிருந்து தங்களுடைய பணியை முடித்துக்கொண்டு வெளியேறிய நிலையில் வெற்றிடமாக இருந்த அந்த இடத்தையும் மனமுவந்து ஏற்று தங்களுடைய பணி எல்லையை விசாலப்படுத்தியுள்ளனர். அத்தோடு இவ் அருட்சகோதரிகள் யாழ் மறைமாவட்டத்தில் மணற்காடு பங்கிலும் தங்களது இல்லத்தை அமைத்துப் பணி செய்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து லீயோன்ஸ் தூய வளனார் துறவற சபை அருட்சகோதரிகளின் குழுமத்திற்கு தன்னை அர்ப்பணித்த முதல் துறவி என்ற வரலாற்றுப் பதிவை அருட்சகோதரி சியாமி றம்மியா மிராண்டா பதிய வைத்துள்ளார்.

நிகழ்வுகள் அனைத்தையும் பங்குமக்களோடும் அருட்சகோதரிகளோடும் இணைந்து பங்குத் தந்தை அருட்பணி ச.மரியதாஸ் லீயோன் அடிகளார் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.

One thought on “உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்குச் சமூகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *