விடத்தல் தீவு பங்குச் சமூகம் 02.05.2018 புதன்; கிழமை தங்கள் பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழாவோடு தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது.மன்னார் சங்குப்பிட்டி பிரதான வீதியில் அமைந்தள்ள பள்ளமடுச் சந்தியிலிருந்து உந்துரளி பவனியாக ஆயரை தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு முன்னுள்ள சந்தி வரை அழைத்து வந்தனர். அவ்வித்தில் அருட்பணியாளர்களும், துறவிகளும், பங்கு மக்களும் ஆயரை வரவேற்றனர்.
தொடர்ந்து மாணவர்களின் மேலைநாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயர் அவர்கள் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் ஆயர் அவர்களினால் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு ஆரம்ப வழிபாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு திருச்சபையின் திருவழிபாட்டு திருமரபுப்படி பீடம், நற்கருணைப் பேழை என்பன அர்சிக்கப்பட்டன. முடிவில் நன்றி நிகழ்வு இடம் பெற்றது.
இவ்விழாவிற்கு இப் பங்கைச் சேர்ந்த குருக்கள், துறவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் மற்றும், ஏனைய சமயத் தலைவர்கள், அரச அரச சார்பற்ற பணியாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர். இப் பங்குச் சமூகத்தோடு இணைந்து பங்கத் தந்தை அருட்பணி. செல்வநாதன் பீரிஸ் அவர்கள் மிக அழகாக இவ் ஆலயத்தை மீள் அமைப்புச் செய்துள்ளார்.