மே:18 புனித முதலாம் யோவான்

மே:18
புனித முதலாம் யோவான்
திருத்தந்தை, மறைசாட்சி-(கி.பி.526)

இவர்தான் முதன்முதலாக கொன்ஸ்னான்டிநோபிள் நகரில் ஒருதூதுவராக காலடி எடுத்துவைத்த பாப்பரசர். உரோமையில் திருத்தந்தையாக இருந்தபோது ஆரியப் பதிதச் சார்புடைய முதல் தியோடரிக், இத்தாலி நாட்டை ஆட்சி செய்தான். கொன்ஸ்னான்டிநோபிளில் இருந்த ஆரியப்பதிதர், அந்நகரத்து மன்னன் முதல் ஜஸ்டினால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்று கேள்வியுற்று தியோடரிக், திருத்தந்தையை அனுப்பி ஆரியப்பதிதரை ஜஸ்டின் அன்புடன் நடத்துமாறு தூதுவிடுத்தான்.

திருத்தந்தை இப்பணியை நிறைவேற்றிய பின் இத்தாலி வந்தடைந்தார். அப்போது மன்னன் தியோடரிக்குக்கு ஒரு பெரும் ஜயம் எழுந்தது. மன்னன் ஜஸ்டினும் திருத்தந்தை ஜானும் தனக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணிணான். அதன் விளைவாக இதில் உடந்தையாய் இருந்ததாக ஜயங்கொண்டு முதலில் பொயித்தியஸ் என்பவரைக் கொன்றான். பிறகு ரவென்னா நகரில் திருத்தந்தையை சிறையிலிட்டான். அங்கே அவர் அனுபவித்த கொடிய வேதனைக்குப் பின் உயிர் நீத்தார். மன்னன் தியோடரிக்கும் சில நாட்களுக்குப்பின் இறந்தான். ஆனால் தான்தோன்றித்தனமாக ஒரு திருத்தந்தையை நியமனம் செய்துவிட்டே இறந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *