சிறப்புக் கரிசனையோடு கூடிய அருட்பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கைப் பொறுப்பேற்று பணியாற்றி வரும் கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தரணிக்குளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமந்துள்ள கோதண்டர் நொச்சிக்குளம் என்னும் கிராமத்தில் வாழும் இறைமக்களுக்காக புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய ஆலயமொன்றினை அமைத்துள்ளனர்.சிறப்புக் கரிசனையோடு கூடிய அருட்பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கைப் பொறுப்பேற்று பணியாற்றி வரும் கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தரணிக்குளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள கோதண்டர் நொச்சிக்குளம் என்னும் கிராமத்தில் வாழும் இறைமக்களுக்காக புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய ஆலயமொன்றினை அமைத்துள்ளனர்.
சதா சகாய அன்னையின் இந்தப் புதிய ஆலயத்தின்; அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இத் திரு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். அதன் பின்னர் ஆயர் அவர்கள் கத்தோலிக்க திரு அவையின் திரு வழிபாட்டுத் திரு மரபிற்கொப்ப முறைப்படி ஆலயத்தைத் திறந்த வைத்து, ஆலயத்தின் நுழை வாயிலையும், ஆலயத்தையும், பலிப் பீடத்தையும், நற்கருணைப் பேழையையும் அர்சித்துப் புனிதப்படுத்தினார்.
இந் நிகழ்வில் சிறப்பாக கப்புச்சியன் சபையின் இந்தியா, தமிழ்நாடு மதுரை மாநில கப்புச்சியன் துறைவற சபை அருட்பணியாளர்களின் மேலாளர் மேன்மைமிகு அருட்பணி சத்தியன் அடிகளாளும், இலங்கைக்கான கப்புச்சியன் துறைவற சபை அருட்பணியாளர்களி; இணைப்பாளர் அருட்பணி.செல்வறாஜ் அடிகளாரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு இலங்கையில் பணியாற்றும் பல கப்புச்சியன் சபைத் துறவியரும், ஏனைய அருட்பணியாளர்களும், துறவிகளும், பெருந்தொகையான இறைமக்களும் அரச, அரச சார்பற்ற பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பங்குப்பணியாளர் அருட்பணி ஆரோக்கியசாமி அடிகளாரும், உதவிப் பங்குத் தந்தை அருட்பணி. ஜெறி அடிகளாரும் முன்னிற்ற அனைத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தனர். அவர்களின் அயரா முயற்சியினாலும் ஆலய மக்களின் பல்வேறுபட்ட தியாகத்தினாலும் ஒன்பது மாதங்களில் இவ் அழகிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இங்கு திருப்பலி வேளையில் அருளுரை வழங்கிய ஆயர் தந்தை அவர்கள், நாங்கள் அப்போது இறைவேண்டலின் இல்லத்தில் இருக்கின்றோம், இறைவனே நமக்கு இச் சிறப்பான ஆறுதலின் இடத்தை வழங்கியுள்ளார் எனவே இவ்வில்லம் வெறுமையாகவே, யாருமில்லாத தனியிடமாகவே இருக்க நாம் விட்டுவிடக் கூடாதுஇந்த இல்லத்திற்கு வருகின்ற நாம் இறைவனோடு சிறப்பான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் இறைவனோடு வளர்த்துக் கொள்ளும் உறவைப் பொறுத்துத்தான் நம் சமூக நல்லுறவும் வலுப் பெறும். எனக் கூறினார்.
இப் பங்கைப் பொறுப்பெடுத்த கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தரணிக்குளம் பங்கி;ன் பல பகுதிகளிலும் இறைமக்களின் தேவையைகஇ கருத்திற்கொண்டு பல ஆலயங்களைக் கட்டுவதோடு பல்வேறு ஆன்மிய, சமயப், பொருளாதார வளர்ச்சித்திட்டுங்களிலும் முனைப்போடு ஈடுபட்டுவருகின்றனர்.