அன்னை வேளாங்கன்னிக்கான ஆலயத்தை

கன்னாட்டி, பிராமணாலங்குளம், கணேசபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய அருட்பணி தளத்தில் கணேசரபுரம் பகுதியிலுள்ள கத்தோலிக்க மக்களுக்கென ஏற்கனேவே மக்களின் வழிபாட்டு இடமாக இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட அன்னை வேளாங்கன்னிக்கான ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனான்டோ ஆண்டகை அவர்கள் 15.08.2019 வியாழக்கிழமை மாலை ஆசிர்வதித்துத் திறந்து வைத்தார். மேலும் அறிய அன்னை வேளாங்கன்னிக்கான ஆலயத்தை

இதயம் நிறைந்த அன்னையாக விளங்கும் மடுமாதாவின் திருவிழா

உலகக் கத்தோலிக்க திரு அவையானது அன்னை மரியாவின் விண்ணேற்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ் வேளையில், இலங்கை மக்களின் இதயம் நிறைந்த அன்னையாக விளங்கும் மடுமாதாவின் திருவிழா இன்று 15.08.2019 வியாழக்கிழமை நடபெற்று முடிந்தது. உயிர்ப்பு ஞாயிறுக் குண்டுவெடிப்பின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, எதிர்மறை ஊகங்கள், பொய்யான செய்திகள், பாதுகாப்புப் பிரிவின் மிக இறுக்கமான பாதுகாப்பு முன்னெடுப்புக்கள்; இத்தனைக்கும் மத்தியில் எதனையும் பொருட்படுத்தாது மேலும் அறிய இதயம் நிறைந்த அன்னையாக விளங்கும் மடுமாதாவின் திருவிழா

வேஸ்பர் மாலை திருப்புகழ் ஆராதனை

மடுமாதா திருத்தலத்தில் நாளை 15ம் திகதி நடைபெறவுள்ள அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கான ஆயத்த நாளின் இறுதி நாளான இன்று மாலை 14.08.2019 புதன்கிழமை வேஸ்பர்   மாலை திருப்புகழ் ஆராதனை நடைபெற்றது. மேலும் அறிய வேஸ்பர் மாலை திருப்புகழ் ஆராதனை

அது புதிதாகப் புனரமைக்கப்பட்டு இன்று 14.08.2019 புதன்கிழமை

மடுறோட்டிலிருந்து மடுமாதாவின் திருத்தலத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன்னர் அமக்கப்பட்டிருந்த வரவேற்பு அன்னையின் திருவுருவம் அமர்ந்திருந்த இடம் பழுதடைந்திருந்தமையினால் அது புதிதாகப் புனரமைக்கப்பட்டு மேலும் அறிய அது புதிதாகப் புனரமைக்கப்பட்டு இன்று 14.08.2019 புதன்கிழமை

நற்கருணை ஆசீர்வாதமும் இரவு 08.30 மணிக்கு மெழுகுதிரி ஒளியுடன் திருச் செபமாலைப் பவனியும்

இலங்கை வாழ் மக்களின் இதயங் கவர்ந்த தாயாக இருக்கும் மடுமாதாவின் ஆவணித் திருவிழாவின் எட்டாம் நாளாகிய இன்று (13.08.2019) செவ்வாய்க்கிழமை மாலையில் நற்கருணை ஆசீர்வாதமும் இரவு 08.30 மணிக்கு மெழுகுதிரி ஒளியுடன் திருச் செபமாலைப் பவனியும் இடம் பெற்றது. மேலும் அறிய நற்கருணை ஆசீர்வாதமும் இரவு 08.30 மணிக்கு மெழுகுதிரி ஒளியுடன் திருச் செபமாலைப் பவனியும்

அருட்சகோதரி ஜேம்ஸ் கூஞ்ஞ அவர்களின் நல்லடக்கத் திருப்பலி

ண்மையில் காலமான திருக்குடும்ப சபையின் அருட்சகோதரி  ஜேம்ஸ் கூஞ்ஞ அவர்களின் நல்லடக்கத் திருப்பலி இன்று 07.08.2019 புதன்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. இத் திருப்பலியை அருட்சகோதரி அவர்களின் உறவினர்களும், கிராமத்தைச் சேர்ந்தவர்களுமான அருட்பணி ச.ஜெயறாஜன் கூஞ்ஞ, அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோரோடு மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளாரும் இணைந்து ஒப்புக் கொடுத்தனர். மேலும் அறிய அருட்சகோதரி ஜேம்ஸ் கூஞ்ஞ அவர்களின் நல்லடக்கத் திருப்பலி

மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள்

அருள்வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2019 செவ்வாய்க் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. மேலும் அறிய மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள்

திருவிவிலிய வினாவிடைப் போட்டிகள்

கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களமும் தேசிய மறைக்கல்வி நிலையமும் இணைந்து கத்தோலிக்க மறைமாவட்டங்களுடாக கத்தோலிக்க மாணவர்களுக்கு நடாத்தும் திருவிவிலிய வினாவிடைப் போட்டிகளின், பங்குமட்டப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மறைக்கோட்ட மட்டப் போட்டிகள் நேற்று 03.08.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள வவுனியா, மடு, முருங்கன், மன்னார் ஆகிய மறைக் கோட்டங்களில் நடைபெற்றது. மேற் பிரிவில் 186 மாணவர்களும் கீழ்ப்பரிவில் 180 மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் அறிய திருவிவிலிய வினாவிடைப் போட்டிகள்