வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் புதிய தூயகப்பகுதி க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (01.07.2019) காலை இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தந்து பணிக்கான நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் முதன்முதலாக மருதமடுத் திருத்தாயின் திருவுருத்தற்குச் சென்று ஆசீர் பெற்றார்.அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வும், அடிக்கல் நாட்டும் நிகழ்வும், கூட்டமொன்றும் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மாவட்ட அரச செயலர் திரு மோகன்றாஸ், கலாச்சார அமைச்சின் செயலர் உயர்திரு பேணாட் , மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுத்திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, கலாச்சார அமைச்சின் பணித்திட்ட இயக்குனர் திருமதி.தாரனி அனோஜா கமகே, அரசின் அபிவிருத்தி, கட்டுமானம், ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான முதல்வர் பொறியியலாளர் திரு. ஜெயச்சந்திரன், மடு பிரதேச செயலர் மற்றும் பல உயர் நிலை பணியார்களும் கலந்து கொண்டனர்.