மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார்.
1998ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி மடுத் திருத்தலத்தில் இளைப்பாறிய ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களால் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
தனது பணிவாழ்வின் 25 மகிழ்வு ஆண்டை தனது சொந்தக் கிராமமான மாவிலங்கேணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் நன்றித் திருப்பலியோடு கொண்டாடினார்.